வியாழன், 30 ஆகஸ்ட், 2012

மதங்களால் என்ன பயன்?

மதங்களால் என்ன பயன்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் திருமூலர். 

ஆனால் இன்று கணக்கற்ற மதங்கள் சில கொள்கைகளுடன் 
உலகில் தோற்றுவிக்கப்பட்டு மக்கள் சிலர் மதங்களில் இணைந்தனர். 
பலர் வன்முறையின் மூலம் இணைக்கப்பட்டனர். 
இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் 

இன்று மதங்கள் மக்களை பிரித்துவிட்டன 

ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் மீது 
அன்பு காட்டுவதில்லை .
மேலும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் கூட அவர்கள்மதத்தை 
சார்ந்தவர்களிடம் அன்பு பாராட்டுவது இல்லை 

அனைவரும் சகோதரர்கள் என்று சொல்லும் மதங்கள் கூட அவர்களுக்குள்ளேயே 
சில கொள்கைகளின் அடிப்படையில் சண்டையிட்டு மடிகின்றனர்

அஹிம்சையை,உயிர்கொலையை மறுக்கும் ,ஆசையின்மையை போதிக்கும் புத்த மதத்தை சார்ந்தவர்கள் அதற்க்கு மாறாக செயல்படுகின்றனர். 

இந்து மதத்திலும் கணக்கற்ற பிரிவுகள். அனைவரும் கடவுள் இருப்பதை நம்பினாலும் கடவுள் வாசம் செய்யும் உயிர்களின் மீது மதிப்போ ,அன்போ செலுத்துவதில்லை
இதனால் உலகில் எங்கும் அமைதியில்லை
மக்களின் மனதிலும் அமைதியில்லை. 
சக உயிர்களிடம் அன்பில்லாமல் செய்யப்படும் சடங்குகள் வழிபாடுகள் மட்டும் ,பிரார்த்தனைகள் செய்வது மட்டும் எல்லா மதத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
.
அன்பே வடிவான் இறைவன் அன்பில்லாமல் செய்யப்படும் எந்த வழிபாட்டையும் ஏற்றுகொள்வதில்லை என்பது இன்று உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளே சாட்சி.

ஒருவரை ஒருவர் மதிக்கும் சகிப்புத்தன்மை கோட்பாடுதான் மத நல்லிணக்கம்
அதைப்பற்றி விரிவாக   விழாக்களிலும் பட்டி மன்றங்களிலும் மட்டும் பேசிவிட்டு 
அதற்க்கு மாறாக நடந்துகொள்வது இன்றைய அரசியல்மற்றும் ,மத தலைவர்களின் வாடிக்கையாக போய்விட்டது.     

1 கருத்து:

  1. நடக்கும் உண்மையை சுருக்கமாக 'நச்' என்று சொல்லி விட்டீர்கள்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு