வியாழன், 30 ஆகஸ்ட், 2012

குப்பைகளும் பொறுப்பற்ற மக்களும்

குப்பைகளும் பொறுப்பற்ற மக்களும் 

இன்று உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டை ஆள்பவர்களை 
பெரிதும் அச்சுறுத்திகொண்டிருப்பது அகற்றமுடியாமலும் அழிக்கமுடியாமலும் தேங்கி கிடக்கும் குப்பைகள்தான்

ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டின் புறம் ஒரு குப்பை மேடு இருக்கும் 
அதில் மக்கும் குப்பைகள் மற்றும் மிருக கழிவுகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அகற்றப்பட்டு பயிர்களுக்கு உரமாக இடப்படும். 

வீடுகளும்,தெருக்களும் சுத்தமாக  இருந்ததால் ஈக்கள் இல்லை ,கொசுக்கள இல்லை .நோய்களும் இல்லை. 

விஞ்ஞான முன்னேற்றத்தால் கணக்கற்ற நன்மைகள் விளைந்த போதிலும் அதன் எச்சங்களான பிளாஸ்டிக்,கணக்கற்ற ரசாயன கூட்டு பொருட்கள் ,ஆபத்தான ரசாயன கழிவுகள், கண்ணாடி,மின்சாதன பொருட்கள், மக்கும் குப்பைகளோடு கலந்து தானும் அழியாமல் குப்பைகளையும் மக்கவிடாமல் செய்து சுற்றுபுறத்தை நாறடித்து கொண்டிருக்கின்றன. அவைகளில் கழிவு நீர் தேங்கி நோய் பரப்பும் கிருமிகளை உண்டாக்கி மக்களின் வாழ்வை முடங்க செய்துவிட்டன 

இதைதவிர கதிரியக்க தன்மை கொண்டு புற்றுநோயை வரவழைக்கும்  அணுஉலை கழிவுகள் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதன் நச்சு தன்மையை கொண்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் கான்க்ரீட் ப்லோக்க்குகளில் அடைக்கப்பட்டு வல்லரசுகள்  கடலில் தள்ளிவிட்டு கொண்டிருக்கின்றன 

இன்னும் சில நாடுகள் தங்கள் நாடுகளில் சேரும் குப்பைகள்,மற்றும் ஆபத்தான் கழிவுகளை பெட்டிகளில்  ஏற்றி விழிப்புணர்வு இல்லாத நாடுகளில் இறக்கிவிட்டு சென்று விடுகின்றன. அப்படி தள்ளிவிடப்படுகிற நாடுகளில்  இந்தியாவும் ஒன்று என்பது பல பேருக்கு தெரியாது 

பழுதான,மற்றும் பயன்படாத லட்சக்கணக்கான மின் உபகரணங்களை 
அதன் நட்சுதன்மைகளை உணராத வளரும் நாடுகளின் தலையில் கட்டிவிடுகின்றன 

நகரத்தில் விழும் கோடிக்கணக்கான டன் குப்பைகளை கிராமபுரங்களில் கொட்டிவந்த ஆட்சியாளர்கள் இப்போது அங்கு எதிர்ப்பு கிளம்பியதும் என்ன செய்வதென்று அறியாது குழம்பி போயுள்ளனர்.

மக்கும் குப்பைகளையும் மக்காத பொருட்களையும் தனிய பிரித்து சேமிக்க மக்களுக்கு எத்தனை முறை அறிவுறுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வோ அல்லது பொறுப்போ இல்லை 

குப்பைகள் தேங்கி கிருமிகளும்,கொசுக்களும்,ஈக்களும் மக்களுக்கு  பலவகை நோய்களை பரப்பியும் அதை தடுக்க வழியை சிந்திக்காது துன்பப் ப்பட்டுகொண்டு மடிகின்றனர்
குறைகள் தங்கள் மீது இருக்கமற்றவர்களையும் அரசுகளையும் மட்டும் குறை கூறி எந்த பயனும் இல்லை. 

இந்த நிலை நீடித்தால் மக்களின் நல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாவிடில் அவர்கள் எதிர்காலம் ராகு  காலமாகிவிடும்  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக