அறுபத்தைந்தாவது சுதந்திர தினம்
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
தேசீய கொடிக்கு செய்வோம் முதல் மரியாதை
நாட்டு மக்களை அழிக்கும் குடிக்கு செய்வோம் இறுதி மரியாதை
பகலில் வானத்தில் தெரியா விண்மீன்கள் போல்
சுதந்திரத்திர்க்காக சொல்லொணா துன்பங்களை ஏற்று
பல தியாகங்களை செய்து வெளிச்சத்திற்கு வராத
தியாகிகளுக்கு வீர வணக்கம்
நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் புற்று நோய் போல்
பரவியுள்ள லஞ்சம் என்ற நோயை அடியோடு ஒழித்திட
இந்நாளில் அனைவரும் சபதம் மேற்கொள்ளுவோம்
மதவெறியும்,ஜாதி வெறியும் ஒழிந்து
அன்பு நெறி தழைக்க பாடுபடுவோம்
பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களை
பொது வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவோம்
உழைக்கும் மக்களின் வாழ்வை சுரண்டும்
ஈனப்பிறவிகளை இனம் கண்டு அழிப்போம்
வெளி நாட்டில் அடிமை சேவகம் செய்ய வழி வகுக்கும்
அடிமை கல்வி முறையை மாற்றுவோம்
வன்முறையை தூண்டும் இழிவு பிறவிகளை
இகழ்ந்து புறம் தள்ளி ஒதுக்குவோம்
பெற்ற சுதந்திரத்தை தந்திரமாக நம்மிடமிருந்து பறித்து
கொண்டு கொழுத்து நம் நாட்டு வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களை இழுத்து மூடுவோம்
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்,உணவு உடை ,இருப்பிடம்
கல்வி,தொழில் ,உரிமை,பாதுகாப்பு கிடைக்க பாடுபடுவோம்
(சுதந்திர தின பகற் கனவுகள்)
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !
பதிலளிநீக்கு