சனி, 18 ஆகஸ்ட், 2012

உண்மையும் போலியும்

உண்மையும் போலியும் 

பாரதி தான் கூறியபடி தேச பக்தனாக வாழ்ந்தான்
உடல் மறைந்தது அவன் எண்ணங்கள் இன்னும்
வாழுகின்றன

இன்று அவன் எழுதி வைத்ததை
அனைவரும் படிக்கிறார்கள்
பட்டி மன்றம் போட்டு பேசுகிறார்கள்
ஆனால் அவன் கொள்கைகளை
காலில் போட்டு மிதிக்கிறார்கள்
வாழ்வில் கடைபிடிப்பாரில்லை

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை 
கொளுத்துவோம் என்றான் அவன் 

ஆனால் மாமியாரும் மருமகனும் கேட்ட உடைமைகளை 
தராததால் மருமகளை கொளுத்திவிட்டு சிறை செல்கின்றனர் 

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும்போதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்றான் பாரதி

இன்று வாலிபர்களின் மனதில் காம தீயை மூட்டி கச்சை  அணிந்து தாறுமாறாக குத்தாட்டம் போட்டு தங்களை தாழ்த்திக்கொண்டு
காசு பார்க்கும் மாதர் பெருகிவிட்டனர்
ஆனால் எய்தவன் இருக்க அம்பை தண்டிக்கிறது மக்கள் கூட்டம் 

வெள்ளையனை எதிர்த்து சுதேசி கப்பலோட்டி சிறை சென்று
செக்கிழுத்து புகழ் படைத்தார் வ வு சிதம்பரனார்

நம் நாட்டு சொத்துக்களையே கொள்ளைஅடித்து மக்களை ஏமாற்றி
சொகுசு கார்களில் வலம் வருகின்றனர் தேச துரோகிகள்

உண்மையாய் வாழ்ந்தவர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை துறந்தனர் அன்று
அவர்கள் போல் நடித்துவிட்டு காட்சிக்கு காட்சி பீர் அருந்தி மகிழ்கின்றார் இன்று

பல தலைவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரம் இன்று பறி போய்கொண்டிருக்கின்றது சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்களால் 

உண்மையை போலிகள் விழுங்கிகொண்டிருக்கின்றன 
எலிகள் பயிர் செய்த உணவை விழுங்குவதுபோல் 

மதவெறி,ஜாதிவெறி என்னும் நச்சு பாம்புகள் பெருகிவிட்டன 
சாலையில் நடப்போரைஎல்லாம் கடித்து கொல்லுகின்றன 
தடுப்பாரும் இல்லை அவைகளை அடித்து கொல்வாரும் இல்லை

உழைப்பவர்களின் உடைமைகளை
கொள்ளைஅடிக்கும்   கூட்டம் பெருகிவிட்டது
தடுக்க வேண்டியவர்களோ அவர்களின் தலைவர் ஆகிவிட்டனர்
.
பாவம் மக்கள். 

1 கருத்து:

  1. நடக்கும் உண்மைகளை அப்படியே சொல்லி உள்ளீர்கள்...

    மக்கள் மனம் மாற வேண்டும்....

    பதிலளிநீக்கு