அமெரிக்காவின் ஊதாரித்தனம்?
அமேரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கோளை ஆராய விண்கலங்களை அனுப்பி வைத்து அங்கு அது இறங்கிவிட்டதாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது இந்த ஊதாரிதனத்தினால் உலக மக்களுக்கு என்ன பயன்?
ஏற்கெனவே ஆளில்லா விமானங்களை கொண்டு உலகம் முழுவதும் யாரை வேண்டுமானாலும் தன்னால் தாக்கி அழிக்க முடியும் என்று நிரூபித்துவிட்டது.
தானே அராஜகமாக நடந்துகொண்டு தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டி அழிக்கின்றது.
.
இன்னும் இந்த உலகிலேயே அறியப்படாத விஷயங்கள் உள்ளன
அவைகளை கண்டுபிடித்து மனித குலத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தன்னுடைய சுய நலத்திற்க்காக வான் வெளியை பயன்படுத்தி கொண்டிருக்கிறது
அமெரிக்க ஜானதிபதி செல்வாக்கு சரிந்து விட்ட நிலையில் அதை தூக்கி நிறுத்த இந்த டிராமா நடத்தப்பட்டுள்ளது
தன்னிடம் உள்ள அபரிமிதமான செல்வத்தையும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் உலகில் உள்ள நூற்றுகணக்கான வறுமையில் சிக்கி தவிக்கும் நாடுகளுக்கும் அதன் மக்கள் முன்னேற்றத்திற்கும் உதவும் மனம் அதன் ஆட்சியாளர்களுக்கு இல்லை
மாறாக ஆளில்லா விமானங்களை கொண்டு பிற நாடுகளுக்கும் புகுந்து மக்களை கொல்வது அதற்க்கு வாடிக்கையாகிவிட்டது
.
உலகம் முழுவதும் தீவிரவாதிகளை ஊக்குவித்து அவர்களுக்காக ஆயுதங்கள் வழங்குவதும் பிறகு அவர்களை ஒழிக்க அந்தந்த நாடுகளுக்கு உதவுவதுபோல் அந்த நாட்டில் நுழைந்து அந்நாட்டை அதன் கட்டுபாட்டில் கொண்டுவருவதும் அமரிக்க அரசின் கொள்கையாகிவிட்டது
.
உலக நாடுகளில் வன்முறை கலாசாரத்தை பெருக்கி ஒவ்வொரு நாடுகளிலும் அமைதியின்மையை உண்டாக்கி பிறகு உதவுவதுபோல் அங்கு வந்து ஜனநாயகம் நிறுவுவதாக ஆசை காட்டி அந்நாட்டு மக்களை அடிமைபடுத்து வதிலும் அங்குள்ள சொத்துக்களை தன் பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் கொள்ளையடிப்பதும் அதற்க்கு வாடிக்கையாகிவிட்டது
.
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கொலைக்கருவிகளை கண்டுபிடித்து ஒவ்வொரு நாட்டிலும் வன்முறையை தூண்டி மக்களை கொலை செய்து கொண்டிருக்கிறது
அயிக்கிய நாடுகள் சபையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அதை எதிர்க்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டையும் மக்களையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது.
இந்த நிலைமையை உலக மக்கள் புரிந்துகொள்ளாமல் அமரிக்கா ஜனநாயக நாடு என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை யார் யாரை வேண்டுமானாலும் துப்பாக்கியால் சுட்டு கொல்லலாம் என்பதை அங்கு நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன
அவர்கள் போடும் பிச்சை காசிற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு அடிமை சேவகம் செய்ய லட்சகணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் முண்டியடித்து பறக்கின்றனர்
சொரணை உள்ள அமரிக்கர்கள் சிலர் அதை எதிர்த்தால் உடனே புலம்பி
அவர்கள் போடும் பிச்சை காசிற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு அடிமை சேவகம் செய்ய லட்சகணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் முண்டியடித்து பறக்கின்றனர்
சொரணை உள்ள அமரிக்கர்கள் சிலர் அதை எதிர்த்தால் உடனே புலம்பி
தவிக்கின்றனர்.நிலைமை கைமீறும போது அந்த அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தால் கூப்பாடு போடுகின்றனர்
அனைத்து நாடுகளும் இந்த உண்மையை புரிந்துகொண்டு ஒன்றுபட்டு இந்த அடிமைதனத்திலிருந்து நீங்க முயற்சி செய்ய வேண்டும்
இவை எல்லாம் கொஞ்ச நாட்கள் தான்...
பதிலளிநீக்குஇந்த அதிகார நிலைமை மாறும் காலம் வரும்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...