வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஆன்மீக வியாபாரிகள்

கடவுளை காண வழி காட்டும் ஆன்மீக வியாபாரிகள்?

இன்று ஆன்மிகம் நல்ல பணம் காய்க்கும்  
மரம் 

இந்த துறையில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது 

இதில் சொந்தமாக மூலதனம் எதுவும் போட  தேவையில்லை 

பிறருக்கு பட்டை போட நெற்றியில் பட்டையோ நாமமோ 
மற்றும் கழுத்தில் ஏதாவது மணி மாலையோ காவி உடுப்போ 
நீண்ட தாடியும் வளர்த்து கொண்டால்போதும்,மற்றும் கொஞ்சம் ஆங்கிலம், வடமொழி தெரிந்தால்  உடனே வியாபாரத்தை தொடங்கிவிடலாம்

ஏற்கெனவே பலரால் எழுதப்பட்ட ஆன்மீக புத்தகங்களிலிருந்து கொஞ்சம் சரக்கை திருடி புத்தகங்கள் வெளிஇட்டு காசு பார்க்கலாம் 

வாழ்வில் எவ்வளவு புத்திசாலிகளாக இருக்கும் ஆண்களும் பெண்களும்  இந்த ஆன்மிகம் என்ற விஷயத்தில் மட்டும் ஏன் மூடர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பது புரியாத புதிர்?

கடவுளை பற்றி ஒன்றும் அறியாதவன் அள்ளி விடும் புளுகு மூட்டைகளை அப்படியே குழந்தை போல் நம்பி அவன் காலடியில் காசை கொட்டுகிறார்கள் 
அவனும் அவர்களை நன்றாக ஏமாற்றுகிறான்.

வாழ்வில் ஒவ்வொரு செயலை தொடங்குமுன் பல கோணத்தில் ஆராய்ந்து காசை செலவழிக்கும் புத்திசாலிகள்(தமிழ்நாட்டு மக்களை அல்ல,அவர்கள் எப்போதும் ஏமாறுவதில்  மட்டும் ஏமாற்றுவதிலும் அவர்களை யாரும் மிஞ்ச முடியாது )ஆன்மீகம்  என்றால் மட்டும் குருடர்களாகி விடுகிரார்கள் 

அதனால் இழப்புகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகி விடுவதை அவர்கள் உணருவதற்கு வெகு காலம் பிடிக்கிறது.

எனவே கடவுளை உணருவதற்கு இதுபோன்ற அயோக்கியர்களை நாட வேண்டாம் 

உங்கள் கடமைகளை ஒழுங்காக செய்யுங்கள் .நேர்மையாக வாழுங்கள் அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளுங்கள்.பேராசையை விட்டு விடுங்கள். பேராசைதான் உங்கள் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்

உங்களை சுற்றியுள்ள உலகம் பொய்மையும் தீமைகளும் நிறைந்திருந்தாலும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இந்த கொள்கைகளை கடைபிடித்தால் உங்களுக்குள் இருக்கும் இறைவன் தானே வெளிப்படுவான் 
அவனை காட்ட இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை 

1 கருத்து: