வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கலீல் கிப்ரானின் சிந்தனைகள் The Gems of Khaleel gibraan


கலீல் கிப்ரானின் சிந்தனைகள் 
The Gems of Khaleel gibraan 

Your children are not your children
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர் .

அவர்கள் அவர்களுக்காக உங்கள் மகனாகவோ 
அல்லது மகளாகவோ பிறப்பெடுக்கிறார்கள் 
They are the sons and daughters of Life's longing for itself.
அவர்கள் உங்களிடமிருந்து வரவில்லை 
உங்கள் மூலமாக இவ்வுலகத்தில் பிரவேசிக்கிறார்கள் 
They come through you but not from you,

And though they are with you yet they belong not to you.
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் அவர்கள் 

உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்லர் 

You may give them your love but not your thoughts
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை தரலாம் 
ஆனால் உங்கள் எண்ணங்களை திணிக்க முடியாது 

For they have their own thoughts.
ஏனெனில் அவர்களுக்கு என்று 
சொந்த எண்ணங்கள் உண்டு 

You may house their bodies but not their souls

நீங்கள் அவர்கள் உடல்களை வேண்டுமானாலும் 
உங்கள் வீட்டில்
வைத்துக்கொள்ளலாம் 
ஆனால் அவர்களின் ஆத்மாவை அல்ல
  ,
அவர்களின் ஆத்மா நாளை 
வேறு ஒரு வீட்டிற்கு சென்றுவிடும் 

நீங்கள் அவர்களை அங்கு சென்று
அவர்களை காண இயலாது 
ஏன் கனவிலும் கூட 
அவர்களை காண முடியாது 

For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.


நீங்கள் அவர்களை விரும்ப முயற்சிக்கலாம்/
அல்லது அவர்களை போல இருக்க முயலலாம் 
அவர்கள் உங்களை விரும்ப வைக்க முயலாதீர்கள் 
You may strive to be like them,
but seek not to make them like you
.

வாழ்க்கை எப்போதும் பின்னோக்கி  நகருவதில்லை 
அல்லது நேற்றைய நிகழ்வோடு தங்கி  நின்று விடுவதில்லை 
For life goes not backward nor tarries with yesterday.

நீங்கள் வில்லாக இருக்கிறீர்கள் 

அதன் மூலம் புறப்படும் அம்புகள்தான் 
உயிருள்ள உங்கள் குழந்தைகள் 
You are the bows from which your children
as living arrows are sent forth.


அந்த வில்லை இயக்கும் ஒருவன்தான் இலக்கை 
நிர்ணயம் செய்கிறான் .அவன் உங்களை 
வில்லாக கொண்டு அதில் அம்பை எய்ய 
தன்  முழு சக்தியுடன் வளைக்கிறான், 
The archer sees the mark upon the path of the infinite,
and He bends you with His might 


அவன் விடும் அம்புகள்துரிதமாக 
வெகு தூரத்திற்கு செல்லும் 
that His arrows may go swift and far.


வில்லை இயக்கும்  அவன் உங்களை வளைப்பது
உலகில் நீங்கள் வளைந்து கொடுத்து பணிவுடன்
மகிழ்ச்சியுடன் வாழும் இன்ப வாழ்வு அமையட்டும் 
Let your bending in the archer's hand be for gladness;

அவன் வில்லிலிருந்து புறப்படும் அம்புகளாகிய
உயிர்களையும் நேசிக்கிறான் 
For even as He loves the arrow that flies, 

அதே நேரத்தில் அவன் கையில் என்று நிலைத்து நிற்கும்
வில்லாக இருக்கும் உங்களையும் சேர்த்துதான் 
அவன் நேசிக்கிறான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் 
so He loves also the bow that is stable.

தமிழன் என்றொரு இனமுண்டு

தமிழன் என்றொரு இனமுண்டு 
தனியே அதற்கொரு குணமுண்டு
அது என்ன ? 
அவர்கள் சுத்த மண்டு 
வெட்டி பேச்சு பேசியே காலத்தை கழிப்பது

யார் எதை சொன்னாலும் எப்படி,ஏன் ,எவ்வாறு என்பதை ஆராயாமல் 
அதை அப்படியே அவர்கள் சொல்வதை நம்பி கையில் 
உள்ள காசை முழுவதையும் அவர்கள் கையில் கொடுத்து விடுவது
ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் புலம்பி அழுது ஒப்பாரி வைத்து திரிவது 

கடவுளின் பெயரால் மத தலைவர்கள் கூறுவதை அப்படியே நம்பி 
தமிழ்நாட்டில் ஐம்பது கோடியும் அகில இந்திய அளவில் 500கோடியும்
வீடு கட்டி தருவதாக கூறி தொகையை பொதுமக்களிடமிருந்து வாங்கி ஏப்பம்  விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டது ஒரு கும்பல்.காவல்துறை தேடுகிறது 

 ஈமு கோழிகள், கொப்பரை தேங்காய் ,வைப்பு தொகைக்கு அதிக வட்டி 
என எதை கொண்டு வேண்டுமானாலும் தமிழக மக்களை ஏமாற்றலாம்
கையில் காசை வைத்துகொண்டு ஏமாறுவதற்கு தயாராக காத்துகொண்டு இருக்கிறார்கள் 

படித்தவன் ,படிக்காதவன் என்று பாகுபாடே கிடையாது அனைவரும் ஏமாளிகள் 

ஏமாந்தபிறகு அழுது புலம்பி தொலைகாட்சியில் பேட்டி கொடுக்கும் கோமாளிகள்

பணத்தை அழும்போது காவல்துறை நினைவுக்கு வாராது அவர்களுக்கு மொத்த பணமும் பறிபோன பிறகு காவல்துறையும் அரசும் நினைவுக்கு வரும் இந்த மூடர்களுக்கு 
இலங்கை பிரச்சினையில் தமிழ்நாட்டின் முன்னால் முதல்வரே மத்திய  மந்திரியின் பேச்சை கேட்டு ஏமாந்து உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று அறிக்கை விடுகிறார்.
தலைவன் எப்படியோ அவரின் குடிமக்களும் அப்படியே  

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறுகின்றன

இதுவரை மோசடியில் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டு மக்களின் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும்.இழந்த தொகையோ பல ஆயிரம் கோடி ருபாய் இருக்கும் .
பெரியார் பிறந்த மண்ணில் மக்கள் எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி மோசம் போவது மிகவும் வருந்துதர்க்குரியது

எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் பேராசைதான்

பேராசை பெரும் நஷ்டம் என்ற பழமொழியை மாற்றி பேராசை தரும் பெரு நஷ்டம் என்று தமிழ் நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் நாள் வருமா?

கேள்விக்குறிதான் 

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

குப்பைகளும் பொறுப்பற்ற மக்களும்

குப்பைகளும் பொறுப்பற்ற மக்களும் 

இன்று உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டை ஆள்பவர்களை 
பெரிதும் அச்சுறுத்திகொண்டிருப்பது அகற்றமுடியாமலும் அழிக்கமுடியாமலும் தேங்கி கிடக்கும் குப்பைகள்தான்

ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டின் புறம் ஒரு குப்பை மேடு இருக்கும் 
அதில் மக்கும் குப்பைகள் மற்றும் மிருக கழிவுகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அகற்றப்பட்டு பயிர்களுக்கு உரமாக இடப்படும். 

வீடுகளும்,தெருக்களும் சுத்தமாக  இருந்ததால் ஈக்கள் இல்லை ,கொசுக்கள இல்லை .நோய்களும் இல்லை. 

விஞ்ஞான முன்னேற்றத்தால் கணக்கற்ற நன்மைகள் விளைந்த போதிலும் அதன் எச்சங்களான பிளாஸ்டிக்,கணக்கற்ற ரசாயன கூட்டு பொருட்கள் ,ஆபத்தான ரசாயன கழிவுகள், கண்ணாடி,மின்சாதன பொருட்கள், மக்கும் குப்பைகளோடு கலந்து தானும் அழியாமல் குப்பைகளையும் மக்கவிடாமல் செய்து சுற்றுபுறத்தை நாறடித்து கொண்டிருக்கின்றன. அவைகளில் கழிவு நீர் தேங்கி நோய் பரப்பும் கிருமிகளை உண்டாக்கி மக்களின் வாழ்வை முடங்க செய்துவிட்டன 

இதைதவிர கதிரியக்க தன்மை கொண்டு புற்றுநோயை வரவழைக்கும்  அணுஉலை கழிவுகள் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதன் நச்சு தன்மையை கொண்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் கான்க்ரீட் ப்லோக்க்குகளில் அடைக்கப்பட்டு வல்லரசுகள்  கடலில் தள்ளிவிட்டு கொண்டிருக்கின்றன 

இன்னும் சில நாடுகள் தங்கள் நாடுகளில் சேரும் குப்பைகள்,மற்றும் ஆபத்தான் கழிவுகளை பெட்டிகளில்  ஏற்றி விழிப்புணர்வு இல்லாத நாடுகளில் இறக்கிவிட்டு சென்று விடுகின்றன. அப்படி தள்ளிவிடப்படுகிற நாடுகளில்  இந்தியாவும் ஒன்று என்பது பல பேருக்கு தெரியாது 

பழுதான,மற்றும் பயன்படாத லட்சக்கணக்கான மின் உபகரணங்களை 
அதன் நட்சுதன்மைகளை உணராத வளரும் நாடுகளின் தலையில் கட்டிவிடுகின்றன 

நகரத்தில் விழும் கோடிக்கணக்கான டன் குப்பைகளை கிராமபுரங்களில் கொட்டிவந்த ஆட்சியாளர்கள் இப்போது அங்கு எதிர்ப்பு கிளம்பியதும் என்ன செய்வதென்று அறியாது குழம்பி போயுள்ளனர்.

மக்கும் குப்பைகளையும் மக்காத பொருட்களையும் தனிய பிரித்து சேமிக்க மக்களுக்கு எத்தனை முறை அறிவுறுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வோ அல்லது பொறுப்போ இல்லை 

குப்பைகள் தேங்கி கிருமிகளும்,கொசுக்களும்,ஈக்களும் மக்களுக்கு  பலவகை நோய்களை பரப்பியும் அதை தடுக்க வழியை சிந்திக்காது துன்பப் ப்பட்டுகொண்டு மடிகின்றனர்
குறைகள் தங்கள் மீது இருக்கமற்றவர்களையும் அரசுகளையும் மட்டும் குறை கூறி எந்த பயனும் இல்லை. 

இந்த நிலை நீடித்தால் மக்களின் நல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாவிடில் அவர்கள் எதிர்காலம் ராகு  காலமாகிவிடும்  . 

எலிகளும் நாய்களும்

எலிகளும் நாய்களும் 
மக்களை அச்சுறுத்தும் ஜந்துக்கள் உலகில் கணக்கற்றவை 
அவைகளை மனிதன் கொன்று குவிக்க ஆயுதங்கள், 
பொறிகள், நஞ்சுகள் என புதிது புதிதாக 
கண்டுபிடித்து அழிக்க நினைத்தாலும் அவைகள் 
அவனை பழி வாங்குவதற்கு அஞ்சுவதில்லை.
அவைகளை அழிக்க அழிக்க அதிக அளவில் தோன்றி 
மனிதனை சத்தமில்லாமல் பழி வாங்கி 
அவனின் மன நிம்மதியை குலைக்கின்றன. 

பல நேரங்களில் அவன் உடலில்
தீரா வியாதிகளை உருவாக்கி 
அவன் உயிரை பறிக்கும் கொடிய செயலையும்
வெற்றிகரமாக அவைகள் நிறைவேற்றிவருகின்றன 
நம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் எலிகள் மற்றும்
நாய்களின் ஜம்பம்,சீன,தைவான்,வியட்நாம் நாட்டு ,
மக்களிடம் மட்டும் போணியாவதில்லை'
அவர்கள் உயிருக்கும் ஏதும் பங்கம்  விளைவதில்லை 

அவர்கள் அவைகளை கொன்று,வறுத்து,சுட்டு,
வேகவைத்து ,சூப் வைத்து சுவைத்து 
தின்று இன்புறுகிறார்கள்

நமக்கு அவைகள் துன்பம் விளைவிக்காதவரை 
எலி விநாயக பெருமானின் வாகனமாகவும் 
நாய்கள் பைரவரின் வாகனமாகவும், 
தத்தாத்ரேயருடன் இருக்கும் நாய்கள் 
ரூபத்தில் இருக்கும் வேதங்களாகவும்
போற்றி வணங்குவோம். 

எலிகளையும் நாய்களையும் பிடித்து விருப்பமோடு 
தின்னும் நாட்டு மக்களுக்கு அனுப்பி வைத்தால்
நம் பிரச்சினையும் தீரும் அந்நிய செலவாணியும் கிடைக்கும்
ஆனால் அதற்க்கு நம் மத செண்டிமெண்ட் இடம் கொடுக்காது
ப்ளூ கிராஸ் அதற்க்கு அனுமதிக்காது .  

ஆனால் எலி வெளியிடும் சிறுநீர் 
நம் உடலில் சென்றுவிட்டால் 
ச்டேப்ரோபிரோசிஸ் என்ற கொடிய நோயை
உருவாக்கி மனிதனின் உயிரை கொல்வதுடன்  
அவன் வங்கி கணக்கில் பல லட்சங்களையும்
காலி செய்து விடுகிறது 

எலியை கொல்வதற்கு வீட்டில் வாங்கி வைக்கும் விஷம் 
வீட்டில் உள்ள கோழைகள் தற்கொலை செய்வதற்குதான்
பெரிதும் பயன்படுகிறது 

தெருவில் வாகனங்களில் அடிபட்டு செத்த
எலிகளை காகங்கள் பொதுநல உணர்வோடு
எடுத்து சென்று பாதி உண்கிறது.
மீதியை எங்காவது போட்டுவிட்டு 
அதன் கடமையைமுடித்து கொள்ளுகிறது. 

பூனைகள் எலி பிடிக்கும் என்றாலும் இன்று
நம் நாட்டில் உலவும் உருவத்தில் பெரிய 
பெருச்சாளிகளை கண்டு அவைகள் 
அஞ்சி ஓடும் நிலை இருக்கிறது.

நம் நாட்டில் இதுதவிர ஊழல் பெருச்சாளிகள்
என்று ஒரு இனம் கோடிகணக்கில் பெருகி 
இன்று நம் நாட்டின் வளத்தையே தின்று 
கொழுத்து கொண்டிருக்கிறது 
அதை எதிர்ப்பவர்கள் படும் பாடு 
பாடையில் போவதுதான் 
அதேபோல்தான் நாய்கள் கடித்தால்
ராபீஸ் நோய் கண்டு மரணம் சம்பவிக்கிறது 

அதுசரி எலிகளும், நாய்களும் இன்று 
அதிக அளவில் பெருக காரணம் என்ன?
அதற்க்கு யார் காரணம்?

காரணம் சொல்ல தேவையில்லை 
பொறுப்பற்ற மக்கள் தான் காரணம். 
என்று அனைவருக்கும் தெரியும். 
இருந்தாலும் மக்கள் என்றும் தங்கள்
தவறை ஏற்றுகொள்ளும் கலாசாரம்
நம்மிடையே கிடையாது.
செய்யும் தவறை எல்லாம் செய்துவிட்டு
பொது சொத்துக்களை கொளுத்தி 
வேலை நிறுத்தம் கடைஅடைப்பு போராட்டம் 
போன்ற வீர தீர செயல்களை நடத்தி 
நிர்வாகம் மீதும் ஆளும் அரசுகள் மீதும் 
பழி சுமத்தி போராட்டம் நடத்தும் வாய்ச்சொல் வீரர்கள்.

உணவு பொருட்களை கண்ட கண்
இடங்களில் வீசுவதும், சாக்கடைகளில்,
ஏரிகளில்,நீர்நிலைகளில்,
பயணம் செய்யும் பேருந்துகளில்,
ரயில் வண்டிகளில் கொட்டுவதும் ,
அன்னதானம் என்ற பெயரிலும், 
விருந்துகள் என்று விழாக்களில் 
உணவு பொருட்களை தயார் செய்து 
உண்டு மீந்ததையும், 
சமைத்து மீந்ததையும் 
சத்திர வாசல்கள்முன் 
மலைபோல் குவித்து 
எலிகளுக்கும், நாய்களுக்கும் 
இலவசமாக உணவளித்து 
{நம் தாய் திருநாட்டில் நாய்களோடு போட்டி போடும் 
மனிதர்களும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்)
அவைகள் கோடிகணக்கில் பெருகவிட்டுவிட்டு.  
அளவுக்குமேல் உண்ட மயக்கத்தில் 
என்ன செய்வதென்றரியாது   தமக்கு உணவளித்து
தங்கள் பசி தீர்த்த  மக்களுக்கு நன்றிகடனாக 
அனைத்து விதமான தொல்லைகளையும்,
துன்பங்களையும் தந்து மகிழ்கின்றன 

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் 
வரிகள் தங்களுக்குதான் என்று 
அவைகள் ஏற்றுக்கொண்டு பயமில்லாமல் 
எங்கு வேண்டுமானாலும் 
ஓடி விளையாடி கண்டதை எல்லாம் 
கடித்து குதறி திரிகின்றன 

மக்கள் திருந்த வேண்டும் 
இல்லையேல் துன்பம் தொடரும்.

மதங்களால் என்ன பயன்?

மதங்களால் என்ன பயன்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் திருமூலர். 

ஆனால் இன்று கணக்கற்ற மதங்கள் சில கொள்கைகளுடன் 
உலகில் தோற்றுவிக்கப்பட்டு மக்கள் சிலர் மதங்களில் இணைந்தனர். 
பலர் வன்முறையின் மூலம் இணைக்கப்பட்டனர். 
இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் 

இன்று மதங்கள் மக்களை பிரித்துவிட்டன 

ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் மீது 
அன்பு காட்டுவதில்லை .
மேலும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் கூட அவர்கள்மதத்தை 
சார்ந்தவர்களிடம் அன்பு பாராட்டுவது இல்லை 

அனைவரும் சகோதரர்கள் என்று சொல்லும் மதங்கள் கூட அவர்களுக்குள்ளேயே 
சில கொள்கைகளின் அடிப்படையில் சண்டையிட்டு மடிகின்றனர்

அஹிம்சையை,உயிர்கொலையை மறுக்கும் ,ஆசையின்மையை போதிக்கும் புத்த மதத்தை சார்ந்தவர்கள் அதற்க்கு மாறாக செயல்படுகின்றனர். 

இந்து மதத்திலும் கணக்கற்ற பிரிவுகள். அனைவரும் கடவுள் இருப்பதை நம்பினாலும் கடவுள் வாசம் செய்யும் உயிர்களின் மீது மதிப்போ ,அன்போ செலுத்துவதில்லை
இதனால் உலகில் எங்கும் அமைதியில்லை
மக்களின் மனதிலும் அமைதியில்லை. 
சக உயிர்களிடம் அன்பில்லாமல் செய்யப்படும் சடங்குகள் வழிபாடுகள் மட்டும் ,பிரார்த்தனைகள் செய்வது மட்டும் எல்லா மதத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
.
அன்பே வடிவான் இறைவன் அன்பில்லாமல் செய்யப்படும் எந்த வழிபாட்டையும் ஏற்றுகொள்வதில்லை என்பது இன்று உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளே சாட்சி.

ஒருவரை ஒருவர் மதிக்கும் சகிப்புத்தன்மை கோட்பாடுதான் மத நல்லிணக்கம்
அதைப்பற்றி விரிவாக   விழாக்களிலும் பட்டி மன்றங்களிலும் மட்டும் பேசிவிட்டு 
அதற்க்கு மாறாக நடந்துகொள்வது இன்றைய அரசியல்மற்றும் ,மத தலைவர்களின் வாடிக்கையாக போய்விட்டது.     

பிஞ்சுகளின் மரணம்தான் மாற்றத்தை கொண்டு வருமா?

பிஞ்சுகளின் மரணம்தான் 
மாற்றத்தை கொண்டு வருமா?

சுருதி என்னும் மழலை பிஞ்சு பள்ளி வாகன 
சக்கரத்தின் கீழ் பஞ்சாகிபோனநிகழ்விற்கு பிறகுதான் 
ஆட்டுமந்தை கூட்டம் போல் வாகனங்களில் அடைத்து 
குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்வதை தடுக்க 
விதிமுறைகளை வகுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது. 

அதுபோல்தான் அரசு மருத்துவ மனையில் மரணித்த பிஞ்சுவின் உடலை 
எலிகளும்,நாய்களும் சிதைத்த பின்தான் அங்கு சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டன,எலிகள் கொல்லப்பட்டன.மருத்துவ மனை சுத்தம் செய்யப்படுகிறது
.
இன்று சுகாதாரமற்ற உணவுகள்,சுகாதாரமற்ற குடிநீர், மாசுபட்ட சுற்றுப்புறம் இவைகள்தான் மக்கள் நோய்வாய்ப்பட காரணம் .இதற்க்கு மூல காரணம் மக்களே. அரசை மட்டும் குறை கூறி பயன் ஒன்றும் இல்லை 
அரசு கோடிகணக்கான ரூபாய்களை மக்களின் நல்வாழ்விற்க்காக கொட்டுகிறது
அதை முறையாக பயன்படுத்தி கொள்ள மக்களும் ஒத்துழைப்பதில்லை 
ஒதுக்கப்படும் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா என்று யாரும் கண்காணிப்பதில்லை. முறைகேடுகள் பற்றி தணிக்கை அறிக்கை வந்தபிறகுதான் இந்த விஷயத்தை ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றன..
ஆனால் அந்த பணம் போலி மருந்து நிறுவனங்களுக்கும், லஞ்ச பேர்வழிகளுக்கும் பாதி போய்விடுகிறது. 
பொறுப்பான சில பணியாளர்களிடையே பொறுப்பற்ற பணியாளர்களும் மருத்துவ மனையில் இருப்பதால்.சீர்கேடுகளும் முறைகேடுகளும் நடக்கின்றன 

பொதுமக்களும் எதற்கெடுத்தாலும் மருத்துவர்களையும், மருத்துவமனை நிர்வாகிகளையும் ,அரசையும் மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அதிகரித்துவருகிறது .மக்கள் அவர்களின் நல்வாழ்விற்க்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எதையும் மதிப்பதில்லை.சுயநலத்தின் காரணமாக மாறாக அதை மீறுவதையே தங்கள் கொள்கையாக கொண்டுள்ளனர். அரசுக்கு கோடிகணக்கில் பல துறைகள் மூலம் வரும் அபராத வருவாயே இதற்க்கு சான்று. 

மக்கள்சுகாதார முறைகளை கடைபிடிப்பது கிடையாது .சுற்றுபுறத்தை அசிங்கபடுத்துவதில் அவர்களுக்கு ஈடு இணை கிடையாது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைத்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.

அதே நேரத்தில் பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளர்களையும் முறைகேடு செய்பவர்களையும் கண்காணித்து கடுமையாக நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற சீர்கேடுகளை தடுக்க இயலும். 

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தப்பு செய்தவன் திருந்தியாகணும்

படித்தால் மட்டும் போதுமா ?

பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பல லட்சம் செலவு செய்து 
ஒரு சான்றிதழ் வாங்கி விட்டால் போதுமா?

சான்றிதழை வைத்து ஒரு வேலை வாங்கி 
உழைத்து காசுபார்த்தால் போதுமா?

இவையெல்லாம் எதற்க்காக? 

சுகமாக ,இன்பமாகவாழ .

ஆனால் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? 

புகை உடலுக்கு பகை என்று தெரிந்தும் அதனால் பலவிதமான புற்று நோய்கள் மற்றும் ஆண்மை குறைவு வரும் என்று நன்றாக தெரிந்திருந்தும் ,தான் புகை பிடித்து தன் வாழ்வை நாசமாக்கி தன்னை தானே கொல்வதுடன் தன் மனைவி, குழந்தைகள், தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்வையும் நாசமாக்கும் மூடர்களை  பற்றி என்ன கூறுவது?

அதேபோல்தான் மதுவும், போதை பொருட்களும்,தகாத உறவுகளும்  

பிறகு நோய்வாய்பட்டு வாழ்க்கையில் பல்லாண்டு காலம் உடல்நலத்தை கவனியாது பணம் ஒன்றையே குறியாக கொண்டு சேர்த்த பணத்தை லட்சகணக்கில் மருத்துவ மனைகளில் அழுதுவிட்டு புலம்புவதில் என்ன பயன்? 

வாழ்க்கையை நல்ல நெறியுள்ள வாழ்க்கை யாக வாழும் கல்வி நெறி போதிக்கப்படவில்லை.பணம் சம்பாதிப்பதும்,ஊதாரிதனமாக பயனின்றி செலவழிப்பதும் காண்பதை எல்லாம் வாங்கி வீட்டில் அடுக்குவதும் தேவைக்குமேல் சொத்துக்களை சேர்ப்பதும் தான் இன்றைய கலாசாரம்

தானும் மகிழ்ந்து பிறருடனும்  மகிழ்ச்சியாக வாழும்  வாழ்வு 
இன்று பெரும்பாலோனாரிடம் இல்லை .ஏதாவது ஒரு ஏக்கம் மற்றும் கவலைகள்  மக்கள் மனதில் கோலோச்சி கொண்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது .யார் மனதிலும் திருப்தி  எந்த விஷயத்திலும் இல்லை   

தப்பு செய்தவன் திருந்தியாகணும் 

ஆனால் தவறு செய்தவன்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை. 


சனி, 25 ஆகஸ்ட், 2012

சபாஷ் சகானா


சபாஷ் சகானா



சபாஷ் சகானா



பெண்களை போக பொருளாக கருதி காலம் காலமாக 
பாலியியல் கொடுமைகளை செய்து,துன்புறுத்தி, 
மத கோட்பாடுகள் என்ற பெயரால், ஜாதியின் பெயரால் 
அடிமைபடுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்க வெறியர்களுக்கு 
சவுக்கடி கொடுத்திருக்கும் பெண் போராளியே நீ வாழ்க

இன்று உலகம் முழுவதும்வலைத்தளத்தில் 
பெண் இனத்தை மூளைசலவை செய்து 
அரை குறை ஆடைகளுடன் அழகிபோட்டி நடத்தியும்,
பெண்களை நிர்வாணமாக காட்டியும் காசு பார்க்கும் வக்கிர புத்தியுடையவர்கள் நிறைந்துவிட்டனர்.

காமவயப்பட்டு அலைந்துகொண்டிருக்கும் 
பல  ஆண் மிருகங்களுக்கு 
பதிலடி கொடுக்க உன்னை போன்ற 
வீராங்கனைகள் அவ்வப்போது தேவை. 

சில மாதங்களுக்கு முன் ஒரு அயோக்கியன் 
பல பெண்களை ஏமாற்றி அவர்களை தன் வலையில் வீழ்த்தி 
அவர்களிடமிருந்து லட்சகணக்கில் பணம்  சுருட்டி அவர்கள் வாழ்வை பாழடித்த கயவன் சிக்கியதை இதயமற்ற வெட்கங்கெட்ட 
இதே ஊடகங்கள் வெளியிட்டு காசு சம்பாதித்து கொண்டன 

தினமும் இதேபோன்று பல கயவர்கள் 
திருமணமாகாத,மற்றும் திருமண பந்தம் முறிந்த 
பெண்களை குறி வைத்து ஏமாற்றி லட்சகணக்கில் 
பணம் பறித்து அவர்களின் வாழ்வை சூறையாடும் சூரர்களை பற்றிய செய்திகள் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றன 
இதேபோல் போல் இன்னும் வெளி உலகிற்கு 
வெளிவாராத செய்திகள் ஏராளம்

தான் பட்ட அவமானங்களை தனக்குள்ளே வைத்து
புழுங்கி மடிந்தவர்கள் ஏராளம் இன்னும் உண்மையை 
வெளியில் சொல்ல முடியாமல்  பலரின் 
குடும்ப சூழ்நிலைகளை கருதி மன நோயாளிகளாக 
இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளம்.

பெண்ணே நீ யாரையும் ஏமாற சொல்ல வில்லை.?
நீ யாரையும் ஏமாற்றவில்லை 
உன் மீது மோகம் கொண்டு உன் பேச்சை நம்பி 
உன் காலடியில் பணத்தை கொட்டி ஏமாந்தவர்கள் 
ஒன்று படிக்காத பாமரர்கள் அல்ல. 
எல்லாம் கணினி பொறியாளர்கள். 

தாங்கள் வலையில் பார்த்ததை 
உங்களை போன்ற ஒரு அழகான சிலை அழைத்ததும்
தங்கள் ஆசைகளை மறைமுகமாகதீர்த்து கொண்டனர் 
இப்போது நீ மாட்டிகொண்டதும் அவர்கள் 
உத்தமர்களை போல் தினம்  புலம்பி தீர்க்கின்றனர். 
.
எனவே இந்த செய்தி பெண்கள் அமைப்புகள் 
கொண்டாடி மகிழவேண்டும்.

.உண்மையாக ஒரு ஆண் ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமிருந்தால் அனாதை  விடுதிகளில், அல்லது தங்கள் பகுதியில் வாழும் படித்த, ஏழை பெண்களை தேர்ந்தெடுத்து வாழ்வு கொடுக்கட்டும். 

திருட்டுத்தனமாக பெண்களை சொல்லுவதை எதையும் ஆராயாமல் 
அவர்களின்  பேச்சை அப்படியே நம்பி மணம்  செய்துகொள்ளும் 
ஆண் ஏமாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால்தான் 
இது போன்ற செயல்கள் நிற்கும்
இல்லை என்றால் ஒருவரை ஒருவர் பழி வாங்கும் 
படலம் தொடர்ந்து கொண்டே இருக்கும் 

ஆராயாது கண்டதும் காதல் கொண்டால் காசும் போகும் மரியாதையும் போகும் ,மானமும் போகும் 
பருவ வயதில் வரும் காம படிப்பை  
இப்போது எல் கே ஜி வகுப்பிலேயே 
தொடங்கி வைத்த பெருமை 
சில ஒழுக்கம் கெட்ட   ஆசிரியர்களையும்
நம் திரைப்பட  தயாரிப்பளர்களையும் 
நடிகர் நடிகைகளையே சாரும் 

ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள் 
இருந்துகொண்டுதான் இருப்பார்கள்

காம வெறி பிடித்தவர்களுக்கு கிடைத்த பரிசுதான் இந்த அவல நிலைக்கு காரணம் என்பதை மற்றவர்கள் உணரவேண்டும். 

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஆன்மீக வியாபாரிகள்

கடவுளை காண வழி காட்டும் ஆன்மீக வியாபாரிகள்?

இன்று ஆன்மிகம் நல்ல பணம் காய்க்கும்  
மரம் 

இந்த துறையில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது 

இதில் சொந்தமாக மூலதனம் எதுவும் போட  தேவையில்லை 

பிறருக்கு பட்டை போட நெற்றியில் பட்டையோ நாமமோ 
மற்றும் கழுத்தில் ஏதாவது மணி மாலையோ காவி உடுப்போ 
நீண்ட தாடியும் வளர்த்து கொண்டால்போதும்,மற்றும் கொஞ்சம் ஆங்கிலம், வடமொழி தெரிந்தால்  உடனே வியாபாரத்தை தொடங்கிவிடலாம்

ஏற்கெனவே பலரால் எழுதப்பட்ட ஆன்மீக புத்தகங்களிலிருந்து கொஞ்சம் சரக்கை திருடி புத்தகங்கள் வெளிஇட்டு காசு பார்க்கலாம் 

வாழ்வில் எவ்வளவு புத்திசாலிகளாக இருக்கும் ஆண்களும் பெண்களும்  இந்த ஆன்மிகம் என்ற விஷயத்தில் மட்டும் ஏன் மூடர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பது புரியாத புதிர்?

கடவுளை பற்றி ஒன்றும் அறியாதவன் அள்ளி விடும் புளுகு மூட்டைகளை அப்படியே குழந்தை போல் நம்பி அவன் காலடியில் காசை கொட்டுகிறார்கள் 
அவனும் அவர்களை நன்றாக ஏமாற்றுகிறான்.

வாழ்வில் ஒவ்வொரு செயலை தொடங்குமுன் பல கோணத்தில் ஆராய்ந்து காசை செலவழிக்கும் புத்திசாலிகள்(தமிழ்நாட்டு மக்களை அல்ல,அவர்கள் எப்போதும் ஏமாறுவதில்  மட்டும் ஏமாற்றுவதிலும் அவர்களை யாரும் மிஞ்ச முடியாது )ஆன்மீகம்  என்றால் மட்டும் குருடர்களாகி விடுகிரார்கள் 

அதனால் இழப்புகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகி விடுவதை அவர்கள் உணருவதற்கு வெகு காலம் பிடிக்கிறது.

எனவே கடவுளை உணருவதற்கு இதுபோன்ற அயோக்கியர்களை நாட வேண்டாம் 

உங்கள் கடமைகளை ஒழுங்காக செய்யுங்கள் .நேர்மையாக வாழுங்கள் அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளுங்கள்.பேராசையை விட்டு விடுங்கள். பேராசைதான் உங்கள் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்

உங்களை சுற்றியுள்ள உலகம் பொய்மையும் தீமைகளும் நிறைந்திருந்தாலும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இந்த கொள்கைகளை கடைபிடித்தால் உங்களுக்குள் இருக்கும் இறைவன் தானே வெளிப்படுவான் 
அவனை காட்ட இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை 

புதன், 22 ஆகஸ்ட், 2012

நாம் எங்கே போய்கொண்டிருக்கிறோம் ?;


நாம்  எங்கே  போய்கொண்டிருக்கிறோம் ?;

இந்த  சமுதாயம்  திருந்தாதோ ?
அறியாமையிலிருந்து மீளாதோ ?

தினம்  தினம்  மக்கள்   எந்தவகை  மோசடியில்லாவது  
ஏமாறும்  காட்சி  அரங்கேறுவது  என்றுதான்  
நிற்கும் ?

எங்கு  பார்த்தாலும்  மோசடி  எதிலே  பார்த்தாலும்  மோசடி 

ஊடகங்களில்  ஒவ்வொரு   நாளும்  வகை  வகையான  மோசடி  மன்னர்கள்  தோன்றிக்கொண்டே  இருக்கிறார்கள் . அவர்களிடம்  ஏமாறும்  கூட்டம்  பல  லட்சங்களை  இழந்து  காவல்  துறையிடம்  புலம்பி  திரியும்  கூட்டம்  நாளுக்கு  நாள்  பெருகி  கொண்டே  போகிறது 

உழைக்கின்றவனுக்கு குறைந்த ஊதியம் 
அவன்  குடும்பத்தை  நடத்த  வருவாய்  பற்றாமல்  கடன்  வாங்கி  வட்டி ,மீட்டர்  வட்டி ,ச்பீட்மீட்டர்  வட்டி  என  சமூக  விரோதிகளிடம்  மாட்டிகொண்டு  தானும்  அழிந்து  குடும்பத்தையும்  துன்பத்தில்  வாடும்  நிலை  ஆனால்  பணக்காரர்கள்  அதர்ம  வழியில்  பொருளீட்டி  கொழுத்து  உல்லாச  வாழ்க்கை  வாழுகின்றனர் 

தீய  வழியில்  சேர்த்த  செல்வதை  குறிவைக்கும்  ஆள் கடத்தி  பணம்  பறிக்கும்  கும்பல்கள்  பெருகிவிட்டன 

பணக்காரர்கள் , அரசு  அதிகாரிகள் ,பெண்கள் .அப்பாவிகள்  இவர்களை  ஆன்மிகம்  என்ற  போர்வையில் ஏமாற்றி  கொழுக்கும்  போலி  சாமியார்கள்  ஒரு  பக்கம் 

சமீபத்தில்  வெளிவந்த  செய்திகளின்  படி  ஒரு  போலி  
சாமியாரின்  வங்கி  லாக்கரில்  ஒரு  கோடிக்கு  மேல்  மதிப்புள்ள  தங்கம்  வெள்ளி  வைர  நகைகளை  கைப்பற்றியுள்ளனர்  காவல்  துறையினர் .
எல்லாவற்றையும்  துறந்த  சாமியார்களுக்கு  ஏது  இவ்வளவு  பணம் ?

மக்களை  ஏமாற்றுவதில்  எந்த  மதத்தினரும்  சோடை  போவதில்லை

போதாக்குரைக்கு விட்டில்  பூச்சிகளாய்  விழுந்து  மாயும்  பெண்கள்  கூட்டம் .;. பாலியல்  கொடுமைகளுக்கு  ஆளாகி  வெளியில்  சொள்ளமுடியாமால்  மாயும்  கூட்டம்  சமீப  காலத்தில்  அதிகரித்துள்ளது 

இதுபோன்ற சமுதாய தீமைகளிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள விழிப்புணர்வு தேவை. 
எதையும் ஆராயாமல் கண்மூடித்தனமாய் நம்பு பழக்கம் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்

மக்கள் விழித்து கொண்டால் இது போன்ற மோசடி பேர்வழிகள் வளராமல் தடுக்கலாம் 

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

கற்பு நெறியை ஆண் பெண் என்னும் இரு பாலருக்கு பொதுவில் வைப்போம்"

கற்பு

இந்த சொல் பற்றி விமர்சனம் செய்தால்
நாட்டில் பூகம்பமே வெடித்துவிடும் 

போராட்டங்களும் ஊர்வலங்களும் 
ஜாதி கலவரங்களும் இனக்கலவரங்களும் 
பொது சொத்துக்களுக்கு சேதங்களும் 
ஏன் பல உயிரிழப்புக்களும் கூட ஏற்பட்டுவிடும்
 
தமிழ்நாட்டில் இதற்காகவே சில தலைவர்களும் 
அவர்களின் தொண்டர்களும் 
யாராவது இது பற்றி பேசுகிறார்களா 
என்று கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் 

சாதாரணமாக பேச்சு வாக்கில் 
ஏதாவது சொல்லி வைத்தால் கூட 
சொல்லியவர்கள் தொலைந்தார்கள்   
நீதிமன்றங்களும் காவல் துறையும் 
வரிந்து கட்டி கொண்டு 
நீதி சொல்ல புறப்பட்டுவிடும் 

அப்படி என்ன சக்தி 
அந்த சொல்லில் உள்ளது?

அதுதான் ஒழுக்கம் என்பது 

அதை கடைப்பிடிக்கிறவர்களுக்கு கிடைக்கும்
மரியாதையை விட அதை காற்றில் 
பறக்க விடுபவர்களுக்கு
மக்கள் மத்தியில்  
மரியாதையும் செல்வாக்கும் 
நிச்சயம் நம் நாட்டில் உண்டு 

இன்று உலகில் தன் மனைவி, மகள் 
கற்பு நெறி தவறாமல் இருக்க வேண்டுமென்று 
கற்பை பற்றி மேடைகளில் பட்டி மன்றம் போட்டு 
பேசுவோர் திரைப்படங்களில் கற்பழிப்பு காட்சிகளை
மட்டும் கண் கொட்டாமல் கண்டு ரசிப்பதேன்?

திரைப்பட தயாரிப்பாளர்கள் 
இந்த காட்சிகளை ஒவ்வொரு படத்திலும்
முக்கியமாக திணிப்பதேன்?

நடிகர்களும் நடிகைகளும்
இந்த காட்சிகளில் நடிக்க சம்மதிப்பதேன்?

ஒழுக்கம் தவறியவர்கள், 
தவற்றுக்கு துணை போகிறவர்கள், 
அதை ரசிக்கிறவர்கள் அனைவருமே குற்றவாளிகளே. 

ஒழுக்கத்தை கடைபிடிக்காதவர்கள்
மற்றவர்களின் ஒழுங்கீனங்களை பற்றி 
விமரிசிக்க அருகதை கிடையாது. 

பாரதி எழுதி வைத்த "கற்பு நெறியை ஆண் பெண் 
என்னும் இரு பாலருக்கு பொதுவில் வைப்போம்"
என்ற வரிகள் தவறு செய்யும் மனிதர்களுக்கு 
நினைவில் வந்தால் நல்லது 

இதுதான் இந்தியா

இதுதான் இந்தியா 

இங்கேதான் புனித கங்கையும் ஓடுகிறது
சதையை காட்டி காசுக்காக 
சாக்கடையில் புரளும் நங்கைகளும் 
திரைப்படங்களில் ஆபாச 
நாட்டியம் ஆடுகிறார்கள் 

ஆபாசம் என்று கூக்குரலிட்டால்  போதும் 
ஒரு கூட்டம் தொடுக்கும் கணைகளை 
ஆபாசம் எங்கள் ஆட்டத்தில் இல்லை 
உங்கள் பார்வையில்,எண்ணத்தில் தான் என்று 

புளுகுமூட்டை அரசியல்வாதிகளும்
 எப்பாடுபட்டாகிலும் 
பதவியை தக்க வைக்க 
ஓடுவதும் இங்கேதான் 

எவ்வளவு கோடி ஊழல்கள் செய்தாலும் 
தங்களுக்கு அதற்கும் எந்தவிதமான  
சம்பந்தமும்  இல்லை என்று 
அடித்து சொல்வது ஆளும் 
கட்சியின் தந்திரம் 

அதை காரணம் காட்டி சபை
 நடவடிக்கைகளை முடக்குவது 
எதிர்கட்சிகளின் மந்திரம் 

இந்த நாட்டில்தான் விஞ்ஞானிகள் 
செயற்கை கோள்களை 
வானில் விட்டு நம் நாட்டின் 
மானத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் 

இங்கேதான் நம் அரசியல்வாதிகள்
பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு
ஊழல் செய்து நம் நாட்டின் மானத்தை
காற்றில் பறக்க விடுகிறார்கள் 

பெண்களே தெய்வம் என்று 
போற்றும் நாடு நம் நாடு 

புராண காலம் முதற்கொண்டு
இன்று வரை பெண்களை
நடுத்தெருவில்,அல்லது 
அரசவையில்  ஆடைகளை களைந்து 
பாசமாக ஆபாச காட்சிகளை
நிறைவேற்றி ரசிக்கும் 
மக்களை கொண்ட 
நாடும் இதுதான் 

இங்குதான் உழைக்கும்
 வர்க்கம் சாகும்வரை 
உழைத்துக்கொண்டே இருக்கும் 

அதுபோல் அவர்களை 
ஏமாற்றி பிழைக்கும் வர்க்கம் 
பிழைத்து கொண்டே இருக்கும் 

பேராசை பெரு நஷ்டம் என்று
பள்ளியில் பாடம் படிப்பதும் 
வளர்ந்த பிறகு இலவசங்களுக்கு 
பேராசைப்பட்டு பாடுபட்டு சேர்த்த
காசனைத்தையும் கண்ணை 
மூடிக்கொண்டு ஒரே ஒரு புரட்டனிடம் 
அழுதுவிட்டு ஏமாந்து புலம்புவதும் 
இந்த நாட்டில்தான்

புகை பிடித்தால் புற்றுநோய் வரும்
 என்று தெரிந்திருந்தும் 
புன்னகையுடன் புகை பிடித்து 
நுரையீரல்களில் நச்சு படிந்து 
டிபி நோய்கண்டு இருமி இருமி 
லட்சகணக்கில் மக்கள் 
மாண்டுபோவதும் இங்கேதான் 

மண்ணாசையும் 
மண்ணாசையும் வேண்டாம் என்று
காவி வேட்டி கட்டி வெட்டிபேச்சு பேசி 
மக்களை ஏமாற்றி மடங்கள் கட்டுவதும் 
அதில் படித்த முட்டாள்களை 
மூளை சலவை செய்து ஏமாற்றி 
சீடர்களாய் ஆக்கி அழகிகளுடன் 
கூத்தடிப்பதும்  இங்கே தான் நடக்கும் 

அழுக்கு உடை உடுத்தி 
தாடி வளர்த்துகொண்டு 
கண்டதை தின்று,
கண்ட இடத்தில படுத்து 
புரியாமல் பேசிகொண்டிருந்தாலோ 
அல்லது பேசாமல்
மௌனம் சாதித்தாலோ  போதும்
உம்மை சித்தர் பட்டமும் 
ஆட்டு மந்தை கூட்டமும் 
தானே தேடி வரும்  

ஒரே நாளில் உலகத்தின் 
உச்சியில் கொண்டு சேர்க்கும் 
சாதனம் திரைப்பட துறை .
அதுதான் இன்றைய தமிழக இளைஞர்களின்
மற்றும் யுவதிகளின் கனவு.
குகையின் வாயிலில் மட்டும் வெளிச்சம் 
தோன்றுவதை மட்டும் 
நம்பி குகையின் உள்ளே காரிருள் 
இருப்பதை அறியாது பள்ளத்தில் 
வீழ்ந்து கருகி போகும் 
இளைய சமுதாயம் பல லட்சம்

இன்னும் வரும் 





திங்கள், 20 ஆகஸ்ட், 2012

IT IS A NEW LIFE EVERYDAY


IT IS A NEW LIFE EVERYDAY

ஜேம்ஸ் ஹாலன் என்ற அறிஞன் சொன்னான்
IT IS A NEW LIFE EVERYDAY என்று

இந்த கருத்தை மஹாகவி பாரதி தன் பாடலில்

சென்றதினி மீளாது மூடரே
நீவிர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய் பிறந்தோம்
என்ற எண்ணமதை சிந்தையில் கொண்டு தின்று
விளையாடி இன்புற்று வாழ்வீர்
தீமைகள் ஒழிந்து போம் திரும்பி வாரா
என்று.

இறைவன் நமக்கு தினமும் 
24 மணி நேரம் அளிக்கின்றான்
அதை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் 
என்பதை பொறுத்துதான்
நம் வாழ்வு அமைகிறது

120கோடி மக்களை ஆளும் ஜனாதிபதிக்கும் 
அதே 24 மணிநேரம் தான்
ஒரு சாதாரண மனிதனுக்கும் 
அதே 24 மணிதான்
கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும்
பல நிறுவனங்களை நிர்வகிக்கும்
அதன் முதலாளிக்கும் 24 மணி நேரம் தான்
ஒன்றும் செய்யாத சோம்பேறிக்கும் அதே 24
மணி நேரம்தான் 

எனவே நேரத்தை தன் அறிவை பயன்படுத்தி
திறமையாக செயல்படுபவனே வெற்றி பெறுகிறான்
அந்த நேரத்தையும் சுயநலமின்றி 
மற்றவர்களின் கண்ணீரை துடைப்பவனே 
மகாத்மாவாகிறான் 

மனிதரின் மனங்களில் 
தெய்வமாக ஆகிவிடுகிறான் 

உடனடி கவனத்திற்கு


உடனடி கவனத்திற்கு

நேற்றைய நினைவுகளிலும்
நாளைய கனவுகளிலும் மூழ்கி இருப்பவர்கள்
இன்றைய நாளின் வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள்.
அடுத்த நாளிலும் நேற்று கிடைத்த வாய்ப்பை
வீணாக்கிவிட்டோமே என்ற கவலையில்
அந்த நாளையும் இழப்பவர்களே
இன்று உலகில் அதிகம்.
காலையில் கண் விழித்த நிமிடத்திலிருந்து
இரவு உறங்க செல்லும் வரை
ஒவ்வொரு கணத்தையும்
வீணாக்காமல் திறமையாக பயன்படுத்துபவனே 
வெற்றியில் படிக்கட்டில் ஏறிக்கொண்டே இருக்கிறான்

நீங்கள் யார் என்பதை 
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் அரக்கன்

பிளாஸ்டிக் அரக்கன் 

தண்ணீரை குடித்துவிட்டு காலி பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுப்பற்ற முறையில் கண்ட இடங்களில் வீசி எறியும்  கலாசாரம் நம் நாட்டில் மட்டும் இல்லை. உலகத்திற்கு உபதேசம் செய்யும் அமெரிக்காவிலும் உண்டு.
நம் நாட்டை போல் கூவம் என்னும் சாக்கடை ஆறு அங்கேயும் உண்டு
படத்தை காண்க



உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி


                                                                                 


                                                                                    


















உன் கண்ணில் நீர் வழிந்தால் 
என் கண்ணில் உதிரம் கொட்டுதடி 
என்றான் பாரதி 


இன்று உலகெங்கிலும் மக்கள் கோடிகணக்கில் அகதிகளாக 
நாடிழந்து,வீடிழந்து,உடைமைகளை இழந்து,உரிமைகளை இழந்து 
பாதுகாப்பு இல்லாமல் அலைகழிக்கபடுகின்றனர் 

இந்த கொடும் செயலை மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் 
அரசுகளும் இதயமற்ற பல அரக்க கூட்டங்களும் செய்து வருகின்றன 

இன்று கடலின் நீர் உப்பு கரிப்பதற்கு காரணம் இந்த அபலைகளின் கண்களிலிருந்து வழிந்து ஓடிகொண்டிருக்கும் கண்ணீர்தான் 
என்பது பலருக்கு தெரியாது 

உலகில் ஒரு பக்கம் செல்வத்தை  ஆடம்பரமாக 
செலவு செய்து வீணடிக்கிறது ஒரு கூட்டம் 

விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் 
கோடி கோடியாய் பாழடிக்கிறது ஒரு கூட்டம் 

வல்லரசுகள் ஆயுதங்களை தயாரித்து 
மனிதகுலத்தை கொன்று நாசம் செய்துகொண்டிருக்கின்றன 

மனித குலத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காத 
ஆராய்ச்சிகள் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை விரயமாக்கிகொண்டிருக்கிறது சில நாடுகள் 

இந்த அபலைகள் கூட்டம், உரிமையற்ற கூட்டம்,
அப்பாவி கூட்டம் ,நாளுக்கு நாள் பெருகிகொண்டிருப்பதை 
இந்த உலக மக்கள்  கண்டும் காணாமல் இருப்பது 
மன்னிக்க  முடியாத குற்றமாகும் 

இந்த நிலை நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் 
என்பதை வசதியாக வாழும் மனிதர்கள் உணரவேண்டும் 

மியன்மாரில், அன்பை போதித்த புத்த மதத்தை சேர்ந்த மக்களும் சகோதரத்துவத்தை போதித்த நபிகள் நாயகம் கண்ட இஸ்லாமிய மக்களும் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு மாள்வது வருந்தத்தக்க செயலாகும் 

அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இயலாத நிலையில் அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை. 

சாத்தான் வேதம் ஓதினால் பேய்கள் சாத்திரம் தின்னுமாம்













யாருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் ?
யாருக்காக ?
யாருக்காக ?

எதற்க்காக பிரார்த்தனை செய்கிறார்கள் ?
எதற்க்காக?
எதற்க்காக?

யாகத்தில் ஆடுகளை பலியிடும் அரசனிடம் அவைகளை விட உயர்ந்த பிறவியான தன்னை பலியிட சொன்ன புத்தரின் எலும்புகள் அடங்கிய பேழையைதான் மேற்கண்ட படத்தில் உள்ள உத்தமர் வணங்குகிறார்

அன்பில்லாமல் பெண்கள் குழந்தைகள் நிராயுதபாணிகள் என்று பாகுபாடில்லாமல் ஈவிரக்கமின்றி பல்லாயிரக்கனக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த இந்த நூற்றாண்டின் ஹிட்லரின் மறு அவதாரம்தான் மேற்கண்ட படத்தில் இருப்பது 

இன்று மதம் என்பது தன்னை விளம்பரபடுத்தி 
கொள்வதற்கும்  கூட்டம் சேர்ப்பதற்கும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது 
மதத்தை தோற்றுவித்த மகான்களின் கொள்கைகளை கடைபிடிக்க அல்ல 

நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி 
கிளியே ஊமை ஜனங்கலடி.தமிழ்நாட்டு அரசியல்தலைவர்கள் வாய்சொல்லில் வீரரடி  




சனி, 18 ஆகஸ்ட், 2012

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றான் பாரதி

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத  நாடு என்றான் பாரதி

இன்று பாரததிற்க்குள்ளே  நல்ல மாநிலம் தமிழ் நாடு 

காஷ்மீரில் காஷ்மீர் மக்களை தவிர நிலம் வாங்கமுடியாது ஆனால் யார் வேண்டுமானாலும் இங்கு வந்து நிலம் வாங்கி போடலாம் .

மற்ற மாநிலங்களுக்கு சென்று தமிழன் குப்பை கொட்ட முடியாது 
ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம் தொழில் தொடங்கலாம், பேராசை பிடித்த தமிழர்களை தள்ளுபடி இலவசம் என்று ஏதாவது சொல்லி ஏமாற்றி கொழுக்கலாம். 

தண்ணீர் தர மறுக்கும் கேரளா அரசியல்வாதிகள் ,காவிரி நீரை விட மறுக்கும் கர்நாடக அரசியல் வெறியர்கள் இதை பற்றியெல்லாம் சராசரி தமிழனுக்கு அக்கறை கிடையாது.
கோடிகோடியாய் கொட்டும் திரைப்பட துறையை மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும்,தெலுங்கர்களுக்கும்  வடநாட்டவர்களுக்கும்,ஏன் வெளிநாட்டவர்களுக்கும் பட்டா போட்டு கொடுத்து விட்டான் .இவன் சம்பாதித்த காசை அவர்களுக்கும் டாஸ்மாக் கடைக்கும் மொய்  எழுதி மகிழும் பரந்த மனப்பான்மை யாருக்கு வரும்?

இங்கு கூலி வேலை செய்பவர்களும் பிழைக்கலாம் .கூலிக்கு ஆட்களை கொல்லும்  கூலி படையினரும் பிழைக்கலாம் 

பெண்கள் தங்க நகை சீட்டு கட்டி வாங்கி வீட்டில் வைத்த நகைகளை சீடிங் பண்ணி அபேஸ் செய்யும் திருடர்களும் இங்கு வசதியாக வாழலாம் 

காவி வேட்டி கட்டி விட்டு குறி சொல்ல தெரிந்தால் போதும் கத்தை கத்தையாக  பணத்தை கொண்டு கொட்டுவார்கள் தமிழக பக்தர்கள் 

உண்டியலுக்கு மஞ்சள் துணி சுற்றி குங்கும பொட்டு வைத்து வேப்பிலையை சொருகி  வைத்து உண்டி குலுக்கினால் ஏன் எதற்கு என்று கேட்காமல் பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார்கள் தமிழக பக்தர்கள் 

வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு  சூடம் காட்டி இங்கு சுயம்பு இருக்கிறது என்றால் போதும் மக்கள் வெள்ளம் காணிக்கையை கொண்டு கொட்டி விடும் கோயில் கட்ட

யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்கலாம் .அவன் தமிழனாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த பாச்சா மற்ற மாநிலங்களில் நடக்காது 

தமிழன் காட்டுமிராண்டி,தமிழர்கள் மொழி காட்டுமிராண்டி பாஷை என்றாலும் கோபமே வராது அதையும் ரசிப்பார்கள் ஏனென்றால் இன்று உண்மை தமிழன் என்று எவனும் கிடையாது. எல்லாம் கலப்படம் அதனால்தான் தமிழ்நாட்டின் மக்கள்தொகை எட்டு கோடி என்று மார் தட்டினாலும் எந்த பிரச்சினைக்கும் எந்த கட்சிகளும் ஒன்று சேர்வதில்லை  



காவி உடையும் போலி சாமியார்களும்

காவி உடையும் போலி சாமியார்களும் 

காவி நிறம் புனிதமானது 

அந்த உடை உடுத்துவதற்கு பல தகுதிகள் வேண்டும் 

காமத்தை விட்டவன், காசின் மீது ஆசையை விட்டவன் ,கோபத்தை விட்டவன் அனைவரையும் இறைவனின் வடிவங்களாக கருதி சேவை செய்பவன், சேவை செய்யாவிடில் பிறருக்கு துன்பம் இழைக்காதவன், தான் பிறருக்கு போதிப்பதை தன வாழ்வில் வாழ்ந்து காட்டுபவன், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தாதவன், பிறர் பொருளை அபகரிக்காதவன்,தன்கென்று எதையும் வைத்துக்கொள்ளா தவன், பொய் பேசாதவன், புறங் கூறாதவன் பிறர் மீது குறை காணாதவன், எந்த பாகுபாடும் பார்க்காது அனைவரின் மீதும் அன்பை பொழிபவன் பிறரை ஏமாற்றாதவன் ஆகிய நற்குணங்கள் கொண்டவன்தான் ,பணிவு கொண்டவன், ஆடம்பரமற்று எளிய தூய வாழ்க்கை வாழ்பவன் போன்றவர்கள் தான் காவி உடை உடுத்த தகுதி உடையவர்கள் 

ஆனால் இன்று சோம்பேறிகளும் உழைக்கும் திறன் இருந்தும் ,பிச்சைஎடுத்து வாழ்பவர்களும்  ,வறட்டு ஆன்மீகம் பேசி காசு பார்க்கும் வியாபாரிகளும், துன்மார்க்கர்களும் காவி உடை அணிந்து கொண்டு மக்களின் அறியாமையை மூலதனமாக கொண்டு சொகுசு கார்களில் வலம் வந்துகொண்டு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதுடன்,தான் செய்யும் தவறுகளுக்காக நீதிமன்றங்களின் படியேறி வழக்குகளை சந்தித்து கொண்டு ஆன்மீகத்தை கேலிக்குரிய பொருளாக ஆக்கிவிட்டனர் 

மக்களும் யார் உண்மையான ஆன்மீகவாதி,யார் போலி என்பதை பகுத்தறிந்து உண்மை வழி செல்லும் மார்க்கத்தை அறியாது தங்கள் உடைமைகளையும், காசையும் இழந்து தவிக்கின்றனர் 

மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு ஆத்மார்த்தமானது 
அவரவர் இதயத்தில் உள்ள கடவுளை உணர்வதற்கு அவரவர் உள்ளம் சுத்தமாக வேண்டுமேயன்றி இதைபோன்ற இடைத்தரகர்கள் தேவையில்லை 

பிறர் கையில் காசு வாங்கிகொண்டு தாங்கள் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்களால் கடவுளை என்றும் காட்ட முடியாது. ஏனென்றால் அவர்களே கடவுளின் பெயரை வைத்து பிழைக்கும் சுயநல வியாபாரிகள். அவர்களால் எந்தொரு ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படாது என்பதை மக்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ?

நம் நாடு உருப்படுமா

நம் நாடு உருப்படுமா?

நம் நாடு வல்லரசாகுமா?

ஒருவர் கனவு காண சொல்கிறார்

எல் கே ஜி மாணவன் முதல் கல்லூரி மாணவன் வரை
தங்கள் காதலியை பற்றிதான் கனவு காண செய்திருக்கிறது
திரைப்பட நடிகர்களும் நடிகைகளும்   

அரசியலில் இருப்பவர்கள் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து கொண்டு புதிது புதிதாக ஊழல்களை  எவ்வாறு அரங்கேற்றி கொழுப்பது என்று கனவு காண்கின்றனர் 

பேராசைப்பட்டு கையில் இருக்கும் காசை அயோக்கியர்களிடம் கொடுத்துவிட்டு சில காலம் அவன் போடும் பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு முதல் முழுவதும் இழந்து ஐயோ ஐயோ என்று முறையிடும் முட்டாள்கள் நிறைந்த நம் நாடா வல்லரசாகும் ? 

நாம் எதற்கு வல்லரசாகவேண்டும்?

நமக்குதான் நாடு பிடிக்கும் ஆசை இல்லையே?

நமக்குதான் ராஜ  தந்திரம் இல்லையே?

நம் நாட்டின் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அண்டை  நாடுகளிடம் அவற்றை திரும்ப பெற திராணியற்ற அரசியல் உறுதியற்ற தலைமையை பெற்ற பாக்கிய சாலிகளாயிற்றே 

நாம்தான் நம்மை சுற்றியுள்ள அனைத்து நாடுகளின் அகதிகளை வரவேற்று நம் நாடு மக்களை பட்டினி போடும் பண்புள்ளவர்கள் ஆயிற்றே 

நாம்தான் அண்டை நாட்டு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்,படைக்கலம்  கொடுத்து பிறகு அவர்கள் பச்மாசூரன் போல் நம் தலையில் தீ வைத்தவுடன் அலறுவது வாடிக்கையாயிற்றே 

மாநில எல்லை பிரச்சினைகள், நதி நீர் பிரச்சினைகள்,ஜீவாதார உரிமை பிரச்சினைகள், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அகதிகள் பிரச்சினை சுற்றுப்புற மாசு பிரச்சினைகள் என அனைத்து பிரச்சினைகளையும் அப்படியே பல்லாண்டுகாலமாக கிடப்பில் போட்டு மக்களை தாங்களே மோதிக்கொண்டு மாள்வதர்க்கு வழி வகுப்பவர்களில் வல்லவர்கலாயிற்றே 

லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்தாலும் அவர்களை முதல் தர குடிமகனாக அங்கீகரித்து சகல வசதிகளோடும் வாழ அனுமதிக்கும் ஒரே நாடு என்ற பெயர் பெற்று பெருமை படைத்துள்ளது நம் நாடு 

சகட்டு மேனிக்கு சுற்றுபுறத்தை அசுத்தப்படுத்தும் பொறுப்பற்ற மக்கள் கூட்டம் குப்பைகளை போடுபவர்கள் பல கோடி .அதை அப்புரப்படுதுபவர்கள்  மட்டும் சில லட்சம் .குப்பையை பொறுக்கி  தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள் சில லட்சம் 
.நிலம்,நீர், ஆகாயம் அனைத்தையும் மாசுபடுத்தும் கொலைகார கூட்டம். அதை தடுக்க வழியில்லாத மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் 

மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தயாரிக்கும் போலி மருந்து நிறுவனங்கள் நிறைந்த நன்னாடு போலி மருத்துவர்கள் நிறைந்த பொன்னாடு நம் நாடு 

தொலைகாட்சியும்,திரைப்படங்களும்,குடியும்  பெரும்பாலான மக்களை கட்டி போட்டுள்ளன
அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மக்களின் சிந்தனை திறனை மங்க செய்துவிட்டன

கல்வியாளர்கள் கல்வியை விற்று காசாக்குகிறார்கள்.மேல்நாட்டில் அடிமைகளாக வேலை செய்ய கல்வி அளிக்கும் அடிப்படை வசதிகள் அற்ற புற்றீசல் போல் தனியார் கல்வி நிருவனங்கள் 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள் அரண்மனைகள் இன்னும் இருக்க கட்டிடம் கட்டி ஒப்பந்தகாரர் காசு வாங்குவதற்குள் விரிசல் விழுவதும்,அதி குடியிருப்பவர் தலையில் விழுவதும் இங்குதான் நடக்கும். லஞ்சமும், நேர்மையின்மையும், தரமற்ற பொருட்களை கொண்டு கட்டிடம் கட்டுவதும் இங்குதான் நடக்கும் 

தன் வீட்டை ,குடும்பத்தை,கல்வியை வாழ்வை ஏன் தன் உயிரையும் இழந்து நம் நாட்டிற்கு நம்மை சுரண்டி அடிமைபடுத்தியவர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகள் ஏமாளிகள் .

இன்று மக்கள் முன்பு கோமாளிகள்

பலர் மக்கள் மனதிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்கள்
பலர் மண்ணில் மறைந்துவிட்டார்கள்

மற்றவர்கள் சிலைகளாகிவிட்டார்கள்.கோயில் சிலைகள் போல் வருடத்திற்கு இருமுறை மாலை மரியாதைகள் நடக்கும்.காக்கை பிடித்து காரியங்களை சாதிக்கும் சுயநல அரசியல் தலைவர்களால்  பிறகு வருடம் ம முழுவதும் காகங்களின் கட்டுப்பாட்டிற்குள் அவர்கள் இருப்பார்கள்

இவ்வாறு நன்றி மறந்த மக்கள் கூட்டம் உருப்படுமா?
அவர்கள் வாழும் நாடும்தான் உருப்படுமா?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
இல்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற குரல் அவர்கள் காதில் 
ஒலிக்கவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும். இல்லாவிடில் அவர்களும் அவர்களின் சந்ததிகளும் வருந்த வேண்டும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு.மற்றவர்களின் அடிமைகளாக