வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

இதுதான் நம் தலைவிதி

இதுதான் நம் தலைவிதி

நம் நாடு அந்நியர்கள்
ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதுஅதற்காக பாடுபட்டவர்கள். பல  கோடி பேர்கள்.
அவர்களில் சில நூறு  பேர்களைத்தான் மக்கள் அறிவர்.
அதுவும் தற்போதுள்ள மக்களுக்கு அதுவும் தெரியாது.பல கோடி மக்கள் தங்கள் வாழ்வை இழந்தனர்,
சொந்த பந்தங்களை இழந்தனர். வசதிகளை இழந்தனர்.
இந்த நாட்டு மக்களின் சுதந்திரத்திர்க்காக.

கடலில் விழுந்த ஒருவன் முதலைக்கு பயந்து கரைக்கு வந்ததும் கரடியிடம் மாட்டிக் கொண்டானாம் என்றமுடிவில்  எதேச்சதிகாரிகளிடமிருந்து மக்களாட்சி என்னும் அரக்கர்களிடம்  மாட்டிகொண்ட நிலைமை  ஆகிவிட்டது.

நம்மை   கொள்ளை அடித்த வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை  வாங்கி அவர்களின் பினாமிகளிடம் கொடுத்துவிட்டோம். நாம் என்றென்றும் நிரந்தர அடிமைகளாகிவிட்டோம் பலவிதங்களில்

ஆட்சி மாறியதே ஒழிய காட்சி மாறவில்லை .எல்லாம் அப்படியே இருக்கின்றன.

ஆனால் நடந்தது என்ன.?
நம் நாடு முன்னேறிவிட்டது என்கிறார்கள்  சிலர்

போரின்போது அனைவரும் ஒன்று என்கிறார்கள்.
அது ஓய்ந்தபின்  மீண்டும் நாடு முழுவதும் தினம் தினம் போராட்டங்கள்தான்ஆனால் நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மூன்று வேளையும்  வயிறார உண்ண   உணவு,இரவு தங்க இடம், கல்வி, மருத்துவ சமூக பாதுகாப்பு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.இன்று யாருக்கும் பாதுகாப்பு இல்லை

அது வசதி படைத்தவனுக்கும், அவர்கள் செய்த சதியால் எந்த வசதியும் இல்லாத பொது மக்களுக்கும்தான்.நம்அவர் நாடு சுதந்திரம்.  பெறுவதற்காக பல கோடி பேர்கள் செய்த தியாகங்கள் வீணாகிப் போய்விட்டது.

ஆட்சி செய்ய வருபவன். எதிர்ப்பவர்களை ஒடுக்க  அடக்குமுறையைக் கையாளுகிறான்அதனால் பல்லாயிரம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன அனுதினமும்.

மேலை நாட்டு  சாக்கடைக்   கலாசாரம்
நம் நாட்டின். உயரிய பண்பாடுகளை
அழித்துவிட்டது.

கிராமங்கள் அழிந்துவிட்டன. தன் சுய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டு அமைதியாக வாழ்ந்த மக்கள் இன்று இல்லை

எல்லாவற்றிற்கும் பிறர் கையையும், அரசையும் எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடாகிவிட்டது நம் நாடு.

உழைப்பவர்கள் மிதிக்கப்படுகிரார்கள்.
சுரண்டி பிழைப்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

இன்று தனி மனித ஒழுக்கமும் இல்லை .பொது வாழ்வில் உள்ளவர்களும்
ஒழுக்கம் தவறி சுயநலத்தோடு வாழ்கிறார்கள்.

விளம்பரம், ஆடம்பரம் என்பதுதான் அவர்களின் உயிர்மூச்சு.

பல நூறு முட்களிடையே பூக்கும் ஒரு ரோஜா காண்போருக்கு இன்பம்

தருகிறது

.


சண்டை சச்சரவு நிறைந்த குடும்பத்தில்
ஒரு குழந்தை பிறந்ததும் ஒரு குதூகலம் பிறக்கிறதுஅதுபோல்தான் ஆயிரமாயிரம் பிரச்சினைகள்  இருந்தாலும்  ஒரு சில  நல்ல விஷயங்கள் ஆங்காங்கே  நடைபெறுவதால் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

3 கருத்துகள்:

 1. உண்மையான உண்மையை சொல்லி விட்டீர்கள் ஐயா...

  ம்... கலியுகம்...!

  பதிலளிநீக்கு
 2. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்று பாடியவரை ஆமோதித்து, ஆண்ட அந்நியரிடம் கொள்ளையைக் கற்று நம்மை நாமே சுரண்டிக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொள்ளைக்காரர்கள்
   நம் நாட்டில் எல்லா காலத்திலும் உண்டு.

   காடுகளில் மட்டும் தொழில்
   பண்ணிக் கொண்டிருந்தவர்கள்
   இன்று நம்மிடையே
   ஒன்றாக கலந்துவிட்டார்கள்.

   அவ்வளவுதான் வித்தியாசம்

   நீக்கு