வியாழன், 13 பிப்ரவரி, 2014

அன்பிலாரும் அன்புடையாரும் (பகுதி-1)

அன்பிலாரும் அன்புடையாரும் (பகுதி-1)


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் 
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு 

எங்கோ இந்த வரிகளை படித்திருக்கிறோம். 
அல்லவா ?

ஆம் திருக்குறள்தான். 

அதை விளக்கும் ஒரு சம்பவம் (மூலம்  ஆங்கிலத்தில்) 

வெகு காலத்திற்கு  முன்பு,
ஒரு ஊரில் ஒரு  பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. ஒரு சிறுவன் ஒவ்வொரு நாளும் 
அந்த மரத்தின் அடியில் வந்து 
விளையாடுவதை விரும்பினான் 

மரத்தின் கிளைகள் மீது ஏறினான்,
பழங்களை பறித்து உண்டான் 
அதன் நிழலில் படுத்து ஒரு குட்டி தூக்கமும் 
சில நாள் போட்டான் அவனைஆப்பிள் மரமும் நேசித்தது. 
அவனும் அதை நேசித்தான் 

காலங்கள் உருண்டோடியது. 
அந்த சிறுவன் பெரியவனாக வளர்ந்துவிட்டான். 
அவன் இப்போது அந்த மரத்தடியில் விளையாடவே வருவதில்லை. 

இப்படியிருக்க ஒரு நாள் அந்த வளர்ந்துவிட்ட சிறுவன் 
அந்த மரத்தடியில் வந்து சோகமாக உட்கார்ந்திருந்தான் 

நெடுநாள் கழித்து அங்கே வந்த சிறுவனை 
என்னோடு  விளையாட வா என்று கேட்டது அந்த ஆப்பிள் மரம். 

உடனே அந்த சிறுவன் பதிலளித்தான் 

மரமே  நான் இப்போது சிறு குழந்தையல்ல
 உன்னை சுற்றி சுற்றி விளையாடுவதற்கு.நான்  இப்போது சிறுவனாகிவிட்டேன் 
எனக்கு விளையாடுவதற்கு பொம்மைகள் வேண்டும் 
அவைகளை வாங்க எனக்கு பணம் வேண்டும்
, என்ன செய்வதென்று தெரியவில்லை. என்றான். 

உடனே மரம் சொல்லியது, 

என் அன்பிற்குரிய சிறுவனே  என்னிடம் பணம் இல்லை. 
ஆனால் என்னிடம் ஆப்பிள்ள் உள்ளது 
அவைகளைப் பறித்துச் சென்று விற்று காசு சம்பாரித்துக்கொண்டு 
அந்த காசை வைத்து பொம்மைகளை வாங்கி கொள் என்றது. 

ஆஹா நல்ல யோசனை. என்று கூறிக்கொண்டே மரத்தில் உள்ள அத்தனை  ஆப்பிள்களையும் பறித்துக்கொண்டு அதன் தலையை மொட்டைஅடித்தான். 

அங்கிருந்து ஒரு நன்றி கூட சொல்ல்லாமல்
 மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டான். 
நெடு நாட்கள் அவன் அங்கு வரவே இல்லை.
 மரம் மிகவும் சோகமாக இருந்தது. 

காலம் உருண்டோடியது .

சில காலம் கழித்து அந்த சிறுவன் இளைஞனாக
மரத்திடம் திரும்ப வந்தான். 
உடனே அவனைக் கண்டதும் 
மரம் மகிழ்ச்சியடைந்தது.

வா என்னோடு விளையாட 
என்று அன்புடன் அழைத்தது. 

உன்னோடு விளையாட எனக்கு நேரமில்லை.

நான் என் குடும்பத்தை கவனிக்க வேண்டும்.
நாங்கள் வசிக்க ஒரு வீடு கட்ட வேண்டும் .
அதற்கு உன்னால் உதவ முடியுமா என்றான். 

மன்னிக்கவும் என்னிடம்  வீடு கிடையாது. 

ஆனால் என்னுடைய கிளைகளை எல்லாம் 
வெட்டிக்கொண்டு எடுத்துப்போய் வீட்டை கட்டிகொள்
என்றது அந்த அப்பாவி மரம்.

வழக்கம்போல் நன்றிகூட தெரிவிக்காமல் 
கிளைகளை எல்லாம் வெட்டிக்கொண்டு மகிழ்ச்சியோடு போய் 
வீட்டைக் கட்டிக் கொண்டான்  அந்த இளைஞன். 

வழக்கம்போல் நீண்ட காலம் அவனைக் காணவில்லை.

மரம் தனி மரமாக சோகத்தில் நின்றுகொண்டிருந்தது. கிளைகள் இல்லாமையால் பறவைகளோ, விலங்குகளோ
யாரும் அதை சட்டை செய்வதில்லை. 

ஒருநாள் அவன் வந்தான் 

சற்று வயதானவனாக .
அது கடும்கோடை க்காலம் 

மரம் உடனே என்னோடு விளையாட வா என்றது.
அது இன்னும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை 

அவன் உடனே சொன்னான் 
,நான் உன்னோடு விளையாடவில்லை. 
நான் கடலில் படகில் சென்று மகிழ்ச்சியாக 
இருக்க விரும்புகிறேன். நீ எனக்கு ஒரு படகு கொடு என்றான் 

வழக்கம்போல் மரம் என்னிடம் படகு கிடையாது. 
என்னிடம் நடுப்பகுதி மட்டும்தான்உள்ளது  அதை வெட்டி எடுத்துக்கொண்டு,அதிலிருந்து படகை செய்துகொண்டு
 கடலில் பயணம் செய்து மகிழ்ச்சியாக இரு 
என்றது அந்த தியாகி மரம். 


அதற்கு பிறகு சில ஆண்டுகள் அவனைக் காண வில்லை. 

கிழவனாக ஆகிவிட்ட அந்த சிறுவன் 
அந்த மரத்திடம் பல ஆண்டுகள் கழித்து வந்தான். 

மன்னிக்கவேண்டும் சிறுவனே, 
என்னிடம் உனக்கு கொடுக்க ஒன்றும் இல்லை.
ஆப்பிள்களும் இல்லை என்று வருத்தத்துடன் மரம் கூறியது. 


உடனே அவன் பரவாயில்லை.

ப்பிள்கள் இருந்தாலும் கடித்து தின்ன எனக்கு பற்கள் இல்லை
எல்லாம் விழுந்துவிட்டது  என்றான். 

நீ ஏறிவிளையாட என்னிடம்  
மரத் தண்டும்  இல்லை என்றது மரம் 

உடனே அவன், எனக்கு வயதாகிவிட்டது
 மரத்தின் மீது ஏறி விளையாட உடலில் 
சக்தியும் இல்லை என்றான் 


அப்போதும் கூட அந்த மரம் தற்போது என்னிடம் 
 உனக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை.  
என்னிடம் மடிந்துகொண்டிருக்கும் வேர்கள்தான் உள்ளது என்று 
மிகுந்த வருத்தத்துடன் கண்ணீர் வழிய அவனிடம் சொன்னது 


எனக்கு எதுவும் வேண்டாம், 
மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்  
நான் ஓய்வு எடுக்க வேண்டும். 

ஓய்வெடுக்க பழைய மரங்களின் அடிபகுதிதான் ஏற்றவை.
என்  வேர்கள் மீது தலை வைத்துப் படுத்து 
ஓய்வெடுத்துக்கொள் என்று  மகிழ்ச்சியுடன் 
கண்ணீர் வழிய மரம் கூறியது.

மரத்தின் தியாகமும் சிறுவனின் சுயநலமும் ஏதோ 
ஒன்றை சுட்டிக் காட்டுவதை உணர்ந்து கொள்ள முடிகிறதா?
அடுத்த பதிவில் காண்போம். 

படங்கள்-நன்றி-கூகிள் 4 கருத்துகள்:

 1. மரத்தின் தியாகத்திற்கு ஈடு மனிதனால் முடியாது...

  பதிலளிநீக்கு
 2. மரத்தின் தியாகமும் சிறுவனின் சுயநலமும்
  மனித குலத்திற்குப் பாடம் ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சிறுவன் மட்டுமல்ல ஒட்டுமொத்த
   சுயநலம் கொண்ட மனித சமூகத்தின்
   மொத்த வடிவம் அவன்.

   நீக்கு