அன்பிலாரும் அன்புடையாரும் (நிறைவு பகுதி)
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
மரத்தின் தியாகமும் குழந்தையாய்
உலகிற்கு வந்து முதுமைபருவத்தை அடைந்தும்
சுயநலத்தையே பெரிதாகக் கருதும்
மனித குலத்தின்மாதிரியைக் கண்டோம்.
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் கற்பனையல்ல
அது அனைவரின் உள்ளத்திலும் பிரதிபலிக்கும்
கருத்தே ஆகும்.
இங்கே மரம் என்று குறிப்பிடப்படுவதுதன் குழந்தைகள் மீது
பாசத்தை கொட்டி வளர்க்கும் பெற்றோர்களைக் குறிக்கும்.
சிறுவன் என்பது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது
வளர்ந்த குழந்தைகளைக் குறிக்கும்
நாம் குழந்தைகளாக இருந்தபோது பெற்றோர்களை நேசித்தோம்
விளையாடி மகிழ்ந்தோம்
உலகிற்கு வந்து முதுமைபருவத்தை அடைந்தும்
சுயநலத்தையே பெரிதாகக் கருதும்
மனித குலத்தின்மாதிரியைக் கண்டோம்.
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் கற்பனையல்ல
அது அனைவரின் உள்ளத்திலும் பிரதிபலிக்கும்
கருத்தே ஆகும்.
இங்கே மரம் என்று குறிப்பிடப்படுவதுதன் குழந்தைகள் மீது
பாசத்தை கொட்டி வளர்க்கும் பெற்றோர்களைக் குறிக்கும்.
சிறுவன் என்பது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது
வளர்ந்த குழந்தைகளைக் குறிக்கும்
நாம் குழந்தைகளாக இருந்தபோது பெற்றோர்களை நேசித்தோம்
விளையாடி மகிழ்ந்தோம்
சற்று வளர்ந்தபிறகு அவர்களை பிரிய நேரிட்டது
அப்போதும் நமக்கு தேவை என்றபோதோ அல்லது
ஏதாவது பிரச்சினைகளில் சிக்கியபோதோ
அவர்கள் உதவியை நாடினோம்
எந்த நேரத்திலும் நாம் அவர்களை
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
அவர்கள் அவர்களிடம் உள்ளதை நமக்கு கொடுத்து உதவ என்றும் தயங்கியதில்லை.அவர்களின் எண்ணம் தாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் ஓங்கியிருந்தது
நீங்கள் நினைக்கலாம் இந்த சிறுவன் மரத்திடம் சிறிதும் இரக்கமின்றி நடந்துகொண்டான் என்று.
நீங்கள் நினைக்கலாம் இந்த சிறுவன் மரத்திடம் சிறிதும் இரக்கமின்றி நடந்துகொண்டான் என்று.
ஆனால் உண்மையில் பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இப்படிதான் அன்பின்றி,இரக்கமின்றி, நன்றியின்றி நடத்துகின்றனர்.என்பதே உண்மை.
அந்த பட்டியலில் நீங்களும் இருக்கலாம்.
அந்த பட்டியலில் நீங்களும் இருக்கலாம்.
அவர்களிடமிருந்து எதையும் கேளாமலே எடுத்துக்கொள்கிறோம் .
அவர்களை நாம் என்றும் பாராட்டுவது கிடையாது.
மாறாக அவர்களின் மனதை புண்படுத்துகிறோம்
.அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறோம் என்பதே உண்மை.
நாம் நம்முடைய தவறை உணர்வதே கிடையாது
உணரும்போது காலம் கடந்துவிடுகிறது.
அது அவர்களுக்கு ஒரு நன்மையையும் செய்யப்போவதில்லை. அல்லது மகிழ அவர்கள் இந்த உலகில் இருப்பதில்லை
எனவே இந்த கணம் வரை யாராவது ,மாறாமல் இருந்தால் தங்களை மாற்றிக் கொள்ளுங்கள்
.உங்கள் பெற்றோரின் மனதில் உள்ள ரணங்களை
ஆற்ற மருந்து போடுங்கள்.
வேறொன்றுமில்லை. அன்பான வார்த்தை.
சிறு உதவிகள் அதுவே போதும் .
அவர்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.
இல்லாவிடில் அவர்கள் இந்த உலகை விட்டு
நீங்கியபிறகு அவர் உட்கார்ந்த நாற்காலியையும்
படத்தையும் பார்த்து வருந்துவதில் பயன் ஒன்றுமில்லை.
பெற்றோரின் அன்பையும் பாசத்தையும்
நீங்கள் உணரும் காலம் ஒருநாள் வரும்.
எப்போது?
நீங்களே பெற்றோர்கள் ஆகும்போது
உண்மை.... என் பையன் பள்ளிக்குச் சென்றபோது அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
பதிலளிநீக்குஇவ்வளவு முதியோர் இல்லங்கள், நல்வாழ்வு இல்லங்கள் பெருக காரணமே இந்தச் சுயநலம் தானே... ஆனால் அவர்கள் செய்த பாவத்தை இன்றைக்கு உடனே செய்து விடுகிறார்கள் இக்கால வாரிசுகள்...! முடிவு தான் என்ன...? அவரவர் உணர வேண்டும்...
பதிலளிநீக்குபுராண காலத்தில் மக்களைத் திருத்த பண்டரி புரத்தில் பண்டரிநாதனே வந்தான் .இன்னும் நின்று கொண்டிருக்கிறான்,
நீக்குஅக்காலத்தில் மக்களை திருத்த ஹரிதாஸ் திரைப்படம் வந்தது.
இக்காலத்தில் எது வந்தாலும் யாரும் திருந்த மாட்டார்கள். ஏனென்றால் இருவருமே சரியில்லை.
அதனால்தான் பெற்றோரும் குழந்தைகளும்
மகிழ்ச்சியாய் இல்லை. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை. அது என்ன என்று அவர்களும் புரிந்துகொள்ளவில்லை.