வியாழன், 20 பிப்ரவரி, 2014

மனிதர்கள் தனக்குதானே வைத்துக் கொள்ளும் வேட்டு

மனிதர்கள் தனக்குதானே 
வைத்துக் கொள்ளும் வேட்டு மரங்களால்தான் மனித இனம் மற்றும் அனைத்து
உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன.
என்பது அனைவருக்கும் தெரியும்

மரங்களை அழித்துவிட்டால் மழை வராது
சோலைவனம் பாலைவனம் ஆகிவிடும் என்றும் தெரியும்


மரங்கள் இல்லாவிடில் உலகில்
பிராணவாயு குறைந்து உயிர்கள்
 மாண்டுபோக நேரிடும் என்றும் தெரியும்.

மலைகளில் மரங்கள் இல்லாவிடில்
நில சரிவுகள் ஏற்படும் என்றும் தெரியும்,

கடற்கரையில் அலையாற்றிக் காடுகள்
இல்லாவிடில் சுனாமியின் கடுமை அதிகமாகி விடும்.
சேதம் ஏற்ப்படும் என்று தெரியும்.எல்லாம் தெரிந்தும் யாரும் மரங்களை
நடுவதும் கிடையாது. அதை பாதுகாப்பதும் கிடையாது.

தன் தலையில் தானே நெருப்பு வைத்துக்கொள்ளும்
இந்த போக்கிற்கு என்ன சொல்வது?

ஒரு காலத்தில் மரங்களை கோடாலியால்
வெட்டினார்கள். அப்போது காடுகளும் இருந்தது.
விலங்குகளும் இருந்தது. இயற்கை காப்பாற்றப்பட்டது.

இப்போதோ அதற்க்கு
ராட்சத இயந்திரங்கள் வந்துவிட்டன.பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்களை
ஒரு சில மணி நேரத்தில் வெட்டி சாய்த்துவிடுகிறது.

இன்னும் சில ஆண்டுகளில்
இயந்திரங்கள். இருக்கும்

அதை இயக்க டீசலும் இருக்காது.
காடுகள் இருக்காது

அதை இயக்க மனிதர்கள்.
இருக்கப்போவதில்லை என்பது உண்மை.


இந்த காணொளியைக் காணுங்கள்.
எதிர்கால பாலைவனத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

https://www.facebook.com/photo.php?v=274564209372616&set=vb.163335647162140&type=2&theater

4 கருத்துகள்:

 1. மனிதர்கள் மனங்களில் ஆசையை உண்டாக்கி, மரங்களை வெட்ட வைப்பதும் இறைவனின் திருவிளையாடல்தான் போலும். உலகை முடிவுக்குக் கொண்டுவர காரணம் வேண்டுமே...:)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் அறிவைக் கொடுத்திருக்கிறானே அது எதற்கு?

   நீக்கு
 2. இப்போதே இங்கு பாதி பாலைவனம் ஆகி விட்டது ஐயா...

  இன்று 1 மணிநேரம் மோட்டார் போட்டும், 3 குடம் தண்ணீர் தான் கிடைத்தது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதே நிலைமை தொடர்ந்தால் அழுவதற்கு கண்களில் இருந்து கண்ணீர் கூட வராது.

   நீக்கு