திங்கள், 24 பிப்ரவரி, 2014

வாழை மரத்தில் என்ன செய்யலாம்?


வாழை மரத்தில் 
என்ன செய்யலாம்?



நம் நாட்டில் விழாக்களுக்காக
வாழை மரங்களை வெட்டிச் சாய்க்கிறோம்

விழா முடித்ததும் சாலை  ஓரங்களில்
 குப்பையாய்க்  குவிக்கிறோம்.



இயற்கை தரும் எல்லா வளங்களையும்
அழிப்பதே தமிழர்களின் தலையாய   பண்பாடு.

மரங்களின் ஒவ்வொரு பகுதியும்
மனிதர்களுக்கு உதவவே உள்ளன.



ஆனால் நாம் எதையும்
பயன்படுத்துவது கிடையாது.
வீணடிப்பதில் நம்மை மிஞ்சுவதில்
உலகத்தில் யாரும் கிடையாது.

வாழை நாரிலிருந்து ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதை பெரிய அளவில் கொண்டு வந்தால் நம் நாட்டில் வீணடிக்கப்படும் வாழைமர பொருட்கள் அனைத்தும் பயன்படுத்தப்படும். வாழ்வில் வளம் சேர்க்கும். சுற்றுப்புற சூழல்.  மேம்படும்.

இந்தோனேஷியாவில் வாழை மரங்களை
வீணடிப்பது  கிடையாது

அதில் துளைபோட்டு மண்ணை நிரப்பி
அதில் பயிர்   செய்கின்றனர். வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளர்கின்றன. மகசூல் முடிந்ததும் வாழைமரம் மக்கி நல்ல  உரமாகிவிடும்.

நம் நாட்டு விவசாயிகள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால். செலவு மிச்சமாகும், காசும் பார்க்கலாம்.
செய்வார்களா? .

ஆனால் வெட்டி கதைகள் பேசி, நேரத்தை வீணடித்து புலம்பி திரியும்
இவர்களுக்கு இதற்க்கெல்லாம் எது நேரம்?







https://www.facebook.com/Kadhambam/photos/a.363481737044604.73807372.363469940379117/650139195045522/?type=1&theater

3 கருத்துகள்:

  1. அருமையான தொழில்நுட்பம்...

    // செலவு மிச்சமாகும், காசும் பார்க்கலாம்// என்றால்... நமது ஆட்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது தலைவர்கள் உள்ளூர் மக்கள்
      முன்னேற வழி காட்ட மாட்டார்கள்
      அவர்கள் முன்னேறிவிட்டால்
      இவர்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும்.

      நீக்கு