வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கர்நாடக இசைக் கலைஞர்கள் வாழ்வில் நகைச்சுவை. (1)

கர்நாடக இசைக் கலைஞர்கள் 
வாழ்வில் நகைச்சுவை. 

கர்நாடக இசைக் கலைஞர்கள்
இசையில் மட்டுமல்ல நகைச்சுவை
உணர்வு மிக்கவர்கள் என்பதற்கு
அவர்கள் வாழ்வில் நடந்த
சில சம்பவங்களைப் பார்ப்போம்





செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் 

செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரின்  குரு
மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர்.



அவர் மிகவும் கண்டிப்புக்கு
பேர் போனவர்.

அந்நாளில் வெளியூர் கச்சேரிகளுக்கு
புகைவண்டியில்தான்  செல்வது வழக்கம்.

அவ்வாறு போகும்போது அவர் தன் சிஷ்யர்
செம்மங்குடியை உடன் அழைத்து செல்வார்.

சிஷ்யர் வேலை என்னவென்றால் குருவுடனேயே
எப்போதும் இருப்பது, அவரின் தேவைகளையும், உடைமைகளையும்  பத்திரமாகப் பார்த்துகொள்வது

இசையில் பயிற்சி பெறுவது என்பது அவரோடு
முதலில் இசைந்து வாழக் கற்றுக்கொள்வது
என்பதுதான் முதல் பாடம்.

அவர் வண்டியில் பயணம் செய்யும்போது
அவருடன் சில பொருட்கள்
முக்கியமாகப் பயணம் செய்யும்

அவைகளைப் பத்திரமாகப்பார்த்துக் கொள்வது
சிஷ்யனின் பொறுப்பு.

இரும்பு பெட்டி,(அதன் மீது எப்போதும்
ஒரு கண் இருக்க வேண்டும் )

தம்பூரா (அதை கீழே வைக்கக்கூடாது.)
(அதை எப்போதும் செம்மங்குடி
தன் மடியில்தான் வைத்துக்கொள்ளவேண்டும்)

அடுத்து .வெள்ளியினால் செய்த வெற்றிலை  பாக்கு,
முதலியவை  வைத்திருக்கும்  பெட்டி ,

அதனுடன் தாகம் ஏற்படும்போது
 குடிப்பதற்காக தண்ணீர் நிரப்பப்பட்ட கூஜா

இரண்டையும் இடுப்பில் பத்திரமாக
இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்.

அவர் எப்போது அதைக் கேட்டாலும்
அதைக் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

அதனால் அவர் தூங்கும் போது
நான் தூங்க முடியாது .

அதே சமயத்தில் அவர் விழித்திருக்கும்
நேரமெல்லாம் என்னைத் தூங்க விடமாட்டார்.
என்று நகைச் சுவையாக என்று
தன் குருவைப் பற்றி கூறியுள்ளார்.

இன்னும் வரும்

(தகவல்கள்-பி.பி ராமச்சந்திரன் மும்பை )

4 கருத்துகள்:

  1. தனி ஆவர்த்தனம் வாசித்தவர் பற்றி ஒரு ஜோக் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஸாரஸ்யமான விஷயம்..விஸ்வநாத ஐயர் பற்றி ஒரு ஜோக் கூட எப்போதோ ஏதோ ஒரு பத்திரிகையில் வாசித்த நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று அவர்கள் அவ்வளவு பாடுபட்டு இசை பயின்றார்கள் இன்று காசு கொடுத்து இசை பயின்று அதை காசாக்கி சுக போகத்தில் திளைக்கிறார்கள்.

      நீக்கு