ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

பெண்ணே நீ வாழ்க !

பெண்ணே நீ வாழ்க !

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்
செய்யவேண்டும் என்றார் கவிமணி


பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்றார்
வள்ளுவர்



சக்தியின் வடிவங்களாக திகழும்




பெண்ணினம் சமீப காலமாக
மேலை  நாட்டு காலாச்சாரத்தின் பிடியில் சிக்கி
போகப் பொருளாக சித்தரிக்கப்பட்டு
சகதியில் வீழ்ந்து இன்று சொல்லணா
துன்பங்களை அனுபவிக்கின்றனர்
என்பதை நினைக்க வேதனையாய்  இருக்கிறது

ஒவ்வொரு நாளும் பெண்கள் மீது
இழைக்கப்படும் குற்றங்கள், அநீதிகள்
நாளுக்குநாள் அதிகமாகக் கொண்டே போகின்றன.

வீட்டை விட்டு, பள்ளிக்கு சென்ற பெண் குழந்தைகள், வேலைக்கு சென்ற பெண்கள் பத்திரமாக வீடு வந்து சேர்வார்களா என்று கலங்காத
பெற்றோர்கள் இல்லை. வீட்டிலும் பாதுகாப்பில்லை. வெளியிலும் பாதுகாப்பில்லை

இந்நிலைக்கு காரணம் ஒழுக்கத்தை
போதிக்கும் மனிதர்களும் இல்லை
ஊடகங்களும்  இல்லை. கல்வியும் இல்லை

ஆசிரியர்களே பெண் குழந்தைகளிடம்
ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
வருகின்ற போக்கு கவலைக்கிடமாக உள்ளது.


பெண்ணே உன் பாதுகாப்புக்கு சில கருத்துக்கள்.

பெண்ணே உன்னை போகப் பொருளாக
பார்க்கும் மோகப்பிசாசுகளை நீ இனம் காணக்
கற்றுக்கொள்ள வேண்டும்.

உன் உடலைப் பற்றி வர்ணிக்கும்
பல்லிளிக்கும் பாதகர்களை என்றும்
நம்பாதே. அவர்களை விட்டு விலகி விடு

உன்னிடம் உள்ள நல்ல குணங்களையும்
திறமைகளையும் எடுத்துக் காட்டி உன்னை
உற்சாகப் படுத்தி பேசுபவர்களுக்கும்,
உன்னை வெறுமனே பொய்யாக காரணமின்றி
புகழ்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை
அறிந்துகொள்ளவேண்டும்.

பொய்யாக புகழ்பவர்களின்  பேச்சில் மயங்கி நீ
அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடாமல்
நீ எச்சரிக்கையாக இருக்கக்
கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆண்கள் என்றும் ஆண்கள்தான்

அவர்கள் உன்னை பெற்று வளர்த்த தந்தையாயினும்,
உடன் பிறந்த சோதரனாயினும் , நண்பனாயினும்
நீ எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும்.

காரணமில்லாமல் ஒருவன்  
உனக்காக எவ்வளவு  வேண்டுமானாலும்
ஒருவன் செலவு செய்கிறான் என்றால்
அது அவனின் தீய நோக்கத்தை
காட்டுகிறது என்பதைஉணர்ந்து 
எச்சரிக்கையாக  இருக்கவேண்டும்.

மாறாக உன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக
வழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்கின்றான் என்றால்
அதை பல பேர் முன்பு பாராட்ட வேண்டும்

காமக் கண்களோடு பார்ப்பவனுக்கும் ,
உண்மையான அன்பு செலுத்துபவனுக்கும் 
 நீ வேறுபாடு காணக் கற்றுக் கொள்ளவேண்டும்.

பெண் ஆணுக்கு கிடைத்த பரிசு என்றும்
ஆண்   பெண்ணுக்கு  கிடைத்த பரிசு என்று எவன் நினைக்கிறானோ அவனோடு நீ வாழ்ந்தால் உங்கள் இருவரின் வாழ்க்கை  மகிழ்ச்சியாக அமையும்

ஒவ்வொரு தாயும் தன்னுடைய மகனை
பெண்ணினத்தை மதிக்கவும், போற்றவும்,
உதவும்குணம் கொண்டவனாக வளர்க்க வேண்டும்.

அதுபோல தங்கள் பெண்களையும்
நல்ல பண்புகளை கற்றுகொடுத்து
அறிவுடையவளாகவும்
மன உறுதி மிக்கவளாகவும்,
வளர்க்க வேண்டும். 

4 கருத்துகள்: