திங்கள், 17 பிப்ரவரி, 2014

திரைப்படம் என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்!


திரைப்படம் என்றால் 
இப்படியல்லவோ இருக்க வேண்டும்!


திரைப்படம் என்றால் வன்முறை

ஆபாச அங்க அசைவுகள்,பாடல்கள்,,

நம்பமுடியாத காட்சி அமைப்புக்கள்

கதையே இல்லாமல் வெறும்
சதைகளையும், அர்த்தமற்ற வார்த்தைக்
கோர்வைகளைக் கொண்டு
இசை என்ற பெயரில் இசைக்கருவிகள் மற்றும்
இயந்திரங்களின் இரைச்சல்களையும்தான்
கேட்க, பார்க்க வேண்டியதாகி விட்டது.

வாய்பேச முடியாத ,காது கேளாத  ஒரு பெண்ணின்
உணர்வுகளை படமாக்கிய விதம்  அனைவரும்
காண வேண்டும்.

தவறாமல் கண்டு மகிழுங்கள்.

http://www.storypick.com/cute-10-minute-film-deaf-mute-girl-will-warm-heart/

3 கருத்துகள்:

  1. பிராச்சி தாக்கர் போல அழகாயிருந்தால் ஓகே! :))) நீங்கள் மொழி படம் பார்த்திருக்கிறீர்களா ஸார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ நீங்கள் புற அழகை மட்டும் ரசிப்பவரொ?
      அதையும் தாண்டி இதயத்தின் உள்ளே செல்லுங்கள் அந்த அழகுதான் நிலையானது.புற அழகு எந்த கணமும் காணாமல் போய்விடும்.


      எப்போதாவது நேரம் கிடைத்து
      சில நிமிடங்கள் தொல்லை காட்சி பெட்டி முன் உட்கார்ந்திருந்தபோது மொழி படத்தின் சில காட்சிகள் கண்டிருக்கிறேன்.அது நல்ல படம் .ஆனால் அந்த படத்தின் முடிவு என்ன என்று தெரியாது.

      அந்த காலத்தில் வந்த பாகப் பிரிவினை படம் என்னை கவர்ந்த படம். அதில் வரும் "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் உங்கள் அன்பு குறைவதுண்டோ" என்ற வரிகள் இன்றும் நினைவில் நிற்கிறது.

      விநாயகப் பெருமானின் வடிவத்தில் வலது தந்தம் ஒடிந்திருந்தாலும் அவன் அருள் என்றும் குறைவதில்லை.

      ஆனால் மற்ற தெய்வங்களுக்கு அந்த விதி பொருந்தாது. அவைகள் பின்னம் என்று ஒதுக்கப்பட்டுவிடும்.

      அதுபோல்தான்அன்பு எந்த குறையும் பார்க்காது. எவர் சொல்வதையும் ஏற்காது. அதற்க்கு ஒன்று மட்டுமே தெரியும். அன்பு செய்யத்தான் தெரியும்.

      நாம் அந்த மன நிலையை என்று அடைகிறோமோ அன்றுதான் நாம் உண்மையான மகிழ்ச்சியை அடையமுடியும் அதுவரை எல்லாம் போலிகளே.

      நீக்கு