செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

தவறுகள் செய்வது மனித இயல்பு

தவறுகள் செய்வது 
மனித இயல்பு

நாம் அதிலிருந்து பாடம்
கற்றுக்கொள்ளுவோம்
என்றார் பண்டித நேரு

ஏனென்றால் மனிதன்  கற்றுக்கொள்ளவே
இவ்வுலகில் பிறந்திருக்கிறான்.

ஆனால் தவறு என்று தெரிந்தும்
தவறுகளைச் தொடர்ந்து செய்பவன்
முட்டாள்கள் என்றார்  ஒரு அறிஞர்



இயற்கையும், காலமும் அவனுக்கு
ஒவ்வொரு கணமும் பாடங்களை
கொஞ்சம் கூட சளைக்காமல்
புகட்டிக்கொண்டே இருக்கின்றன

ஒரு தாய் தன் குழந்தைக்கு
பால் புகட்டுவதைப் போல
எந்த பயனையும் எதிர்பாராது.



ஆனால் அவன் அதை
உணருவதாகத் தெரியவில்லை

துன்பம் என்ற
பசி  வந்தால் அழுகிறான்.

இயற்கையும் சரி ஒழிந்து போ
என்று அவன் பசியை தீர்க்கிறது.

வயிறு நிறைந்ததும் அவன்
நன்றி மறந்து அவன்
நரித்தனத்தை காட்டுகிறான்.



இப்போதே நாம் செய்த தவறுகளுக்கு
விலை கொடுக்க ஆரம்பித்து விட்டோம்.

இலவசமாக கிடைக்கும்,நீர்,  காற்று,நெருப்பு,
ஆகாயம், நிலம், ஆகியவற்றிற்கு
விலை நிர்ணயம் செய்து, மனிதர்களின்
உயிருக்கும் கூட விலை
நிர்ணயம் செய்துவிட்டோம்.

நம்மை சுரண்டி வாழும் ஆளும் வர்க்கம்
தள்ளுபடி, இலவசம் என்ற பெயர்களில்
நம்மை ஏமாற்றி கொழுக்கும் வியாபார தந்திர சாலிகள்

நிஜ வாழ்வில் சுயநல மனிதர்களாக விளங்கி
நிழற் படங்களில் வீரர்களாக வலம்  வரும் கனவு
பிம்பங்கள் ,இவர்கள் போடும் பிச்சைக் காசுகளுக்கு
ஏங்கும் மனிதக் கூட்டம்.

நம்முடைய பேராசை எண்ணங்களுக்கு
தீனி போட்டு நம்மை அவர்கள் வலையில்
விழ வைத்து  நம்மிடம் உள்ள அனைத்தையும்
சுருட்டிக்கொண்டு பந்துபோல் எங்கேயோ
உருண்டு போய் காணாமல் போய்விடும் கூட்டம்

விபத்தில் இறந்தால் அதற்கு அரசும்
ஆயுள் காப்பீடு நிறுவனங்களும்
உடல் பாதிப்புகளுக்கும், உயிருக்கும்
விலை நிர்ணயம் செய்து வைத்துவிட்டன.

விமானத்தில்  பயணம் செய்யும்போது
விபத்தில் இறந்தால் அந்த
உயிருக்கு பல லட்சம் மதிப்பு
 
அதுவே ரயில் வண்டியில்
இறந்தால் சில லட்சம்

சாலையில் இறந்தால்
சில ஆயிரம்.

ஆனால்,வீட்டில், மருத்துவ மனையில் இறந்தால்
என்ன நடக்கிறது ?
 
அதுவும் காசு பார்க்க வெளிநாடு சென்று ஒருவர்
அங்கு இறந்தால் அவர் உடலைக் கொண்டுவர
அந்த குடும்பம் படும் பாடு சொல்லதரமன்று

சில நேரங்களில் பல மாதங்கள் கூட ஆகிவிடுகிறது
அதுவரை அந்த குடும்பங்கள் படும் துன்பம்
மிகவும் வேதனைக்குரியது.

அனைவருக்கும் தெரியும்.இறந்த உடலை வாங்க
சில ஆயிரங்களிலிருந்து பல லட்சம் வரை
முதல்வைக்க வேண்டும்.

இறந்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவது
ஒருபுறம் இருக்க யாருக்கும் தெரியாமல் இறந்தால்
அதை அப்புறப்படுத்த அந்த உடலுக்கு சொந்தம்
கொண்டாடும் உறவுகள் பல ஆயிரம் அழ வேண்டும்
என்றோ ஒருநாள் சாகப்போகும் உயிருள்ள பிணங்களுக்கு



லஞ்சமாகவும் மற்றும் அது தொடர்பான சடங்குகளுக்காகவும்.

நாளுக்கு நாள் பிணங்களை வைத்துக்கொண்டு
அரசியல் செய்வது அனைத்து கட்சிகளுக்கும்
மக்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது.

விபத்து எதிர்பாராமல் நிகழ்வது.
அதில் பலியானவர் ஒருபுறமிருக்க
அதற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத
பொது சொத்துக்களும், பொது மக்களும்
பலியாவது தொடர்கதைஆகிவிட்டது.



இப்போது அனைத்தையும்
விலை கொடுத்து வாங்கிகொண்டிருக்கிறோம்

இப்படியே சென்று கொண்டிருந்தால்
ஒரு நாள் நம்மிடம் காசு இருக்கும்

அவைகளை வாங்க  நாம்தாம்
உயிரோடு  இருக்கமாட்டோம். . 

2 கருத்துகள்: