செவ்வாய், 16 ஏப்ரல், 2013

சிந்தனைக்கு சில கேள்விகள்?


சிந்தனைக்கு சில கேள்விகள்?

கேள்வி-எனக்கு  இந்த உலக வாழ்க்கையில்
நடக்கும் பல சம்பவங்கள் என்னை சோர்வடைய செய்கின்றன.
அவைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை ,
அவைகளோடு அனுசரித்து போகவும் முடியவில்லை..
அவைகளிலிருந்து பாதிக்கப்படாமல் தப்பித்து
போகவும் வழி தெரியவில்லை.

பதில்;இறைவன் அனைத்து சூழ்நிலைகளையும்
நாம் அனுபவித்து நம்மை பக்குவப்படுதுவதர்க்காகதான்
இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பி வைத்துள்ளான்.

அதனால்தான் இந்த சம்பவங்கள்
நம் வாழ்வில் நிகழ்கின்றன.அல்லது
பிறருக்கு நிகழும் அந்த சம்பவங்கள்
நம்மை பாதிக்கின்றன.
சம்பவங்களிலிருந்து நாம் பாடம்
கற்றுக்கொண்டால்தான் மீண்டும்
அதுபோன்ற சம்பவங்கள்
நம் வாழ்வில் நிகழாமல் இருக்கும்.
இல்லாவிடில் தொடர்ந்து துன்பங்களை
அனுபவிக்கத்தான் வேண்டும்.

கேள்வி:எல்லாவற்றையும்
அதனதன் போக்கில்
 ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
ஒன்றும் செய்யமுடியவில்லை.

பதில்: சிலவற்றை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எல்லாவற்றிற்கும்
நாம் பரிகாரம் தேட முடியாது .
வேறுவழியில்லை.

எதிர்த்தால் இந்த உலகால்.
ஓரங்கட்டப்பட்டுவிடுவோம்.

அனுசரித்து போனால்
அதனோடு இணைந்து ஒன்றுக்கும்
உதவாமல்போவோம்..

அதனால் தாமரை  இலைதண்ணீர்
 போல்தான் இருக்கவேண்டும்.

யாரிடமும் நன்றியோ
பாராட்டுதல்களோ எதிர்பார்க்கக்கூடாது.
ஆனால் நாம் மற்றவர்களுக்கு
ஒரு சிறிய உதவியானாலும்
நன்றி சொல்ல மறக்கக்கூடாது

நம்மால் முடிந்த வேலைகள்
செய்துகொண்டு,பிறருக்கு பாரமில்லாமல்
எதன் மீதும் பற்றுவைக்காமல்
எல்லாம் இறைவன் செயல்
என்று இருந்தால் பிழைத்தோம்.
இந்த உலகம் நம்மை துன்புறுத்தாது.

கேள்வி:சரீரத்தில் பலவிதமான
சிரமங்களும் உள்ளன. எங்கும் எதிலும்
ஓர் விரக்தி நிலைமை. உதறிவிட்டு
எங்கும் ஓடிவிடவும் முடியாது,

பதில்:யாருக்குதான்
சரீர உபாதைகள் இல்லை.
இந்த உலகத்தில்நோயில்லாத மனிதர்கள்
யாருமில்லைஉடலில் நோயில்லாவிட்டலும்
உள்ளத்தில் நோயுள்ளவர்கள் ஏராளம்.
அவைகளை பற்றியே எப்போதும்
நினைத்து கொண்டிருக்காமால்
நம் கடமைகளிலும் மற்ற
ஆக்கபூர்வமான செயல்களிலும்
நம்மை ஈடுபடுத்திக்கொண்டால்
அவைகளின் தாக்கம் நாமை பாதிக்காது.

கேள்வி;மனதில் அடிக்கடி
விரக்தி ஏற்ப்படுகிறதே?


பதில்:ஒரு மனிதனுக்கு மனதில்
விரக்தி மட்டும் ஏற்படக்கூடாது
விரக்தி ஏற்பட்டால் அது
எல்லாவற்றையும்  அழித்துவிடும்.

இறைவனால் மனித குலம்
இன்பமாக வாழ படைக்கப்பட்ட
இந்த உலகம்  முழுவதும்
பல அற்ப சுயநல பிண்டங்களினால்
துன்ப மயமாக ஆக்கப்பட்டுவிட்டது.

எனினும் அதையே நினைத்துக்கொண்டிராமல்
இறைவனை நினைத்துக்கொண்டு
அவரவரின் கடமைகளை செய்து கொண்டு
வந்தால் போதும். மற்றதை
இறைவன் பார்த்துக்கொள்வான்.

இந்த நம்பிக்கை இருந்தால் போதும்.

6 கருத்துகள்:

  1. சிறப்பான பதில்கள் ஐயா... விளக்கம் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை என்றால் என்னவென்று கேட்டேன்
    வாழ்ந்து பார் என்று சொன்னான்
    என்னும் கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு
    வருகின்றன அய்யா. அதனால்தானே கடமையை செய்
    பலனை எதிர்பார்க்காதே என்று சொன்னார்கள். சிறந்த பகிர்வு
    அய்யா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

      தாய் மொழியாம் தமிழ்
      கற்றறிந்த புலவர்க்கு
      மட்டும்தான் சொந்தம்
      என்ற நிலையை ,மாற்றி
      பட்டி தொட்டிகளெல்லாம்
      இனிய தமிழை
      கொண்டு சென்ற
      பெருமை பாரதிக்கு பிறகு
      கணக்கற்ற பாடலாசிரியர்கள்

      அவர்களில் வாலியும்
      கண்ணதாசனும் ஆயிரக்கணக்கான
      பாடல்களை எழுதி குவித்தனர்

      அவைகள் மதந்தாண்டி, கடல்தாண்டி
      இன்று மனிதமனங்களை
      செம்மைபடுதியிருக்கிறது.
      என்பதை யாரும் மறக்கவோ
      மறுக்கவோ முடியாது.

      இன்று கவிஞர்கள்
      ஏராளம் .

      வாழ்வின் எந்த
      நிலையிலிருந்தும் வருகிறார்கள்.
      ஏற்றம் பெறுகிறார்கள்.

      இவன் தமிழறிஞன் இல்லையெனினும்
      தமிழ்பால் பற்றுள்ளவன்.

      இவனுடைய அனைத்து பதிவுகளிலும்
      எளிய தமிழை
      இனிக்கும் வகையில்
      புகுத்தியிருக்கிறேன்.என்பதை நீங்கள்
      கண்டிருக்கலாம்.

      நீக்கு
    2. எழுத்து வையுங்கள் .. வாழ்த்துக்கள் .. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்

      நீக்கு
    3. வருகைக்கும்
      கருத்துக்களுக்கும் நன்றி

      நீக்கு