சனி, 6 ஏப்ரல், 2013

21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-2)


21ஆம் நூற்றாண்டின் 
தமிழனின் நிலை(பகுதி-2)


போலிகளைக் கண்டு 
திருவள்ளுவரின்  ஆன்மா 
குமுறிக்கொண்டிருக்கிறது.

குமரிகண்டம் முழுகியது
தமிழன் செய்த அக்கிரமங்களால் .

இந்த காலத்திலும் 
அக்கிரமங்கள் தொடர்கின்றன. 

அதனால்தான் பகுதி பகுதியாக கடல் 
தமிழ்நாட்டை விழுங்கிகொண்டிருக்கிறது.

 யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் 
அந்நாளைய தமிழன். 

உண்மையான தமிழன் என்று 
எவனும் இன்று இல்லை. 
அதனால்தான் இல்லாத 
ஒரு சமூகத்திடம்  ஒற்றுமை இல்லை. 
அதனால்தான் தமிழன் எங்கு 
சிறுமைபடுத்தப்பட்டாலும், 
கொடுமைபடுத்தப்பட்டாலும்
கேட்க நாதியில்லை. 

ஊடகங்களில் போடும் கூச்சல்களால் 
எந்த பயனும் விளைந்ததில்லை என்பதே 
கடந்த கால சம்பவங்களின் கசப்பான உண்மை. 

இன்றைய தமிழனோ 
ஜாதி,மதம் ,கட்சி ,சுயநலம், 
என பலவகைகளில் 
பிளவுபட்டு நிற்கிறான். 

தமிழனுக்கு உணர்ச்சி இருக்கிறதே 
ஒழிய தமிழன் என்ற
உணர்வு இல்லை.

உணர்ச்சிகளை கட்டுபடுத்த 
தெரியாவிடில் அது 
அழிவைத்தான் சந்திக்கும்.

எப்போதும் வீரத்தை 
பற்றி பேசுகிறான். 
விவேகம் இல்லை. 
அதனால்தான் கூண்டோடு
கைலாசம் போகிறான். 

எப்போதும் வீரத்தை
பற்றியே  சிந்திப்பவன்
சோரம்தான் போவான்

இதைக்காட்டும்
வரலாறுகள் ஏராளம்.

பிறருக்கு பாடம் புகட்டுவேன் 
என்கிறான்.
ஆனால் இவன்
எதிலிருந்தும் பாடங்களை 
கற்றுக்கொள்வதேயில்லை

அனுபவங்களிலிருந்து 
பாடங்களை கற்றுக்கொள்ளாதவன்
அறிவிருந்தும்  மூடர்களே 

அதனால்தான் வீடிழந்து.,நாடிழந்து 
நடந்ததையே நினைந்து நினைந்து,
புலம்பி நாடோடிபோல் திரிகிறான். 

பாரதி கூறியது போல்
சொந்த சகோதர்கள் துன்பத்தில் 
சாதல் கண்டும் சிந்தை 
இரங்காத கல்நெஞ்ச கூட்டம் 

தமிழை காக்க வந்த தலைவர்கள் 
தமிழர்கள் மீது காட்டும் பரிவு 
எல்லாம் நடிப்பு 
அவர்கள் தன்னை 
முன்னிலைப்படுத்த 
செய்யும் தந்திரம்.  

பொறியில் வைத்த தின்பண்டத்தை 
நம்பி அதை பிடிக்கப்போய்  சிக்கி அழியும் 
எலிகளைபோல் மற்றவர்கள் விரிக்கும் 
வலையில் கண்ணை மூடிக்கொண்டு 
போய்விழுந்து  சிக்கி மாயும் கூட்டம் தமிழ் கூட்டம். 

இன்னும் வரும்.

2 கருத்துகள்:

 1. பாடங்கள் எதையும் முழுவதும் கற்றுக் கொள்வதில்லை - 100% உண்மை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடங்களையே
   கவனிப்பதில்லை

   எங்கே கற்றுகொள்வது?

   நீக்கு