ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

திருக்குறள்(25)-என் பார்வையில்


திருக்குறள்(25)-என் பார்வையில் 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

மு.வ உரை:

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.


இந்த குறளுக்கும்
ஆண்டாண்டுகாலமாக மேலே
கூறியுள்ள பொருளைத்தான்
ஆன்றோர்கள்
கூறி வருகின்றனர்.

நமக்கு பல செய்திகளை தருகின்ற
 புராண இதிகாசங்கள் மற்றும்
ஞானிகளின் நூல்கள் பலமுறை
பல உண்மைகளை
வெளிப்படுத்தி இருக்கின்றன.

அதை வைத்துப்பார்க்கும்போது
மேற்கண்ட விளக்கம் சரியானதல்ல
என்று தோன்றுகின்றது.

பொதுவாக 5
என்றால் நீர்,நிலம், காற்று,நெருப்பு,
ஆகாயம்(வெட்டவெளி)
என்று அனைவருக்கும் தெரியும்.

இந்த அயிந்தும்
பரம்பொருளின் விரிவுகள்.

அவைகள் வெவ்வேறு
கால நிலைகளில்
வெவ்வேறு கணக்கில் இணைந்து
இறைவனின் ஆணைப்படி
இந்த உலகை ஆக்கியும்
அழித்தும் வருகின்றன.

 அந்த பஞ்சபூதங்களின்
ஒட்டுமொத்த உருவமாக சிவபெருமான் திகழ்கின்றார்.
அதுவே பஞ்சாஷர
மந்திரமாக விளங்குகிறது.

இந்த பஞ்ச பூதங்களும்
இணைந்து நம் உடலை உருவாக்கி
 பத்து இந்திரியங்களாக(புலன்களாக)
செயல்படுகின்றன.

அவைகளை யாரும் அழிக்கமுடியாது.

அவைகளை அப்படியே விட்டுவிட்டால்
கட்டுப்பாடில்லா   குதிரைகள் போல்
 கண்டவாறு ஓடி நம் உடல்
என்னும் ரதத்தை
கீழே தள்ளி அழித்துவிடும்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
அந்த உயிராராகிய நாமும்
அழிந்துபோவோம்

ஆனால் புலன்களை
நாம் நெறிப்படுத்தினால் அவைகள்
நமக்கு நம்மை உணர துணை
செய்யும்.

 உணவை சமைக்காமல் உண்டால்
அது நமக்கு துன்பம் செய்யும்.

அதையே பதமாக அவித்து உண்டால்
நமக்குநன்மை செய்வதுபோல 5 புலன்களையும்
நெறிப்படுத்தினால் அது நம்மை வாழ்விக்கும்.

அதைதான் வள்ளுவரும் புலன்களால்
வரும் ஆசைகளை அழிக்கமுடியாது.
அதை உணவு அவித்து உண்பதுபோல்
 நெறிப்படுத்தினால் அது நமக்கு
 நன்மைகளை தரும்.என்று கூறியுள்ளார்.

ஏனென்றால் ஆசைகளை
அழிக்கமுடியாது.
மனதில் எழும் ஆசைகளை
 நல்ல வழியில் ஈடுபடுத்தவேண்டும்.
 என்பதே இந்த குறளின் கருத்தாகும்.

உதாரணத்திற்க்காக
ஒரு பெண்ணின் மீது ஏற்படும்
கட்டுக்கடங்காத காமத்தை
அன்னை பாராசக்தியிடம்
திருப்பிவிட்டால்
அடங்கா மனமும் அடங்கும்.
ஆன்மீக விழிப்பும் ஏற்ப்படும்.

இன்னும் வரும் .

4 கருத்துகள்:

  1. விளக்கங்கள் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும்
      வருகைக்கும்
      பாராட்டிற்கும். நன்றி.DD

      நீக்கு
  2. பதில்கள்
    1. தமிழர்கள் என்று தங்களை
      அழைத்துக்கொள்ளும் கோடிக்கணக்கான மக்கள்
      உலகில் இருக்கிறார்கள்.

      அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும்தாம்
      இவனின் தமிழ் படைப்புகள்
      கண்ணில் படுகின்றன.
      அவர்களின் தமிழ் பற்று வாழ்க.

      நான் தமிழ் நன்கு கற்ற
      அறிஞனுமல்லன்
      அதே நேரத்தில் தமிழே
      அறியாத மூடனுமல்லன்.

      தங்கள் வருகைக்கும்
      வருகைக்கும்
      பாராட்டிற்கும். நன்றி.

      நீக்கு