சனி, 27 ஏப்ரல், 2013

வாலி புராணம்


வாலி புராணம்தன்னை எதிர்ப்போரின் பலத்தில்
பாதியை உறிஞ்சிவிடுவான் 
ராமாயணகால வாலி


தன் கவிதைகளினால் 
அனைவரையும் மிஞ்சிவிடுவான் 
இந்த கலி கால வாலி

முதுமையினால் உடல் தளர்ந்தாலும்
கவிதை உவமையினால் என்றும்
இளமை காப்பான் இந்த வாலி 

அவனுக்கு நிகர் அவனே 
சிந்தையில் நின்றாடும் 
சிந்திக்க வைக்கும் பாடல் 
வரிகளையும்  தருவான் 
சித்தமிழந்து கூத்தாடவைக்கும்
சிங்கார ரசம் சொட்டும் 
ஆடல் வரிகளையும் அள்ளி தெளிப்பான் 


மாலவன் புகழுரைக்கும் 
பாட்டுகள் எழுதுவான் ஒருபக்கம் 

மசாலா படங்களுக்கும் 
பாட்டெழுதுவான் 
மறுபக்கம். 

அன்றும் இன்றும் என்றும் 
இருப்பான் வாலி இசையிலும்
ஓசையிலும் காற்றில் கலந்து 

4 கருத்துகள்:

 1. பெயர் வாலி என்று இருப்பினும் இவர் ஒரு கர்ணன். தமிழில் மரபுக் கவிதையாயினும், புதுக் கவிதையாயினும், படிப்பவர் மனம் இன்புற வரிகளை இனிதாய் வாரி வழங்குவதில் இவர் ஒரு கர்ணன் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்வத்துப் பயன் ஈதல் என்றார்
   திருவள்ளுவர்

   நீங்கள் கூறியுள்ளதுபோல்
   வாலி அவர்கள் தன்னிடம் உள்ள
   கவிதை செல்வத்தை
   இவ்வுலகிற்கு வாரி வாரி
   வழங்கியுள்ளார்

   இன்னும் வழங்கிகொண்டிருக்கிறார்

   இவ்வளவு வழங்கியும் இன்னும் வாலியின்
   கவிதைகிணற்றில் ஊற்று காலியாகவில்லை
   இன்னும் சுரந்துகொண்டே இருப்பதுதான்
   அவர் தனித்தன்மை.

   நீக்கு
 2. பல பாடல் தொகுப்புக்களை தொகுத்து வைத்துள்ளேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் ஒரு நல்ல தொகுப்பாளர் என்று
   வலையுலக நண்பர்கள் நன்றாகவே அறிவார்கள்.

   நீக்கு