சனி, 6 ஏப்ரல், 2013
21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-3)
21ஆம் நூற்றாண்டின்
தமிழனின் நிலை(பகுதி-3)
கட்சி தொண்டர்கள் மூலம் பலகோடி
வசூலித்து ஏப்பம் விடும் கட்சிகள்
ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் வரிப்பணத்தில்
சில ஆயிரம் பேருக்கு மட்டும் இலவசமாக
சிலவற்றை அளித்துவிட்டு மக்களை
ஏமாற்றும் வித்தையை மக்கள் புரிந்து
கொள்ளும் காலம் எப்போது வரும் ?
தமிழனின் தலைஎழுத்து தன்னை
ஏதாவதொரு கட்சிக்கோ அல்லது
நடிகருக்கோ அல்லது ஒரு சாமியாருக்கோ
தன்னை அடிமையாக வைத்திருப்பதே பெருமை என்றும்
பாதுகாப்பு என்றும் கருதி தன்னை அடிமையாக்கி
உண்மையை உணரும் சக்தியை அறவே இழந்துவிட்டதே
அவனின் இந்த நிலைக்கு காரணம்.
இந்நிலை மாறினால்தான் தமிழன் ,
தமிழ்நாடும் இரண்டும் முன்னேறும்
ஆத்திகராய் இருந்த ஈரோடு ராமாசமியை
அநீதியை எதிர்த்து போராடும் பெரியாராக மாற்றி
நாத்திக பாதையில் செலுத்தியது யார் தெரியுமா ?
விக்டோரியா மகாராணியோ அல்லது
வேல்ஸ் இளவரசரோ அல்ல அன்று
உழைக்கும் மக்களை ஊருக்கு வெளியே
ஒதுக்கி வைத்து ஊரு விளைவித்த
ஒரு சில பிரிவினரே .
.
பெரியார் சிலை வைத்தால்
ஏன் பதறுகிறீர் ?
சிலைகளால் என்ன செய்ய முடியும்
நீர் கொண்ட கொள்கைகளில்
உறுதியாய் இருந்தால் ?
எனவே சிந்திப்பீர் அழிவு செயல்களில்
ஈடுபடும் எண்ணங்களை விட்டோழிப்பீர்
பெரியார் சிலைகளாகட்டும்
பெருமாள் சிலைகளாகட்டும்
அவைகள் ஒன்றும் செய்வதில்லை
வைத்த இடத்தில அப்படியேதான் இருக்கின்றன .
அதை வைத்தவர்கள்தான்
ஒருவருக்கொருவர் அடித்துகொள்கிறார்கள்
அவரவர்களின் கொள்கைகளை நாட்டும் பொருட்டு .
சிலைகள் சிலையாய் இருக்கும்போது
தோன்றாத பிரச்சினைகள்
அதை உடைக்கும்போதோ அல்லது
அப்புறப்படுத்தும்போதோ போதுதான்
தோன்றுகிறதே அது ஏன் ?
அச்செயல் மனிதனின்
உணர்வுகளை பாதிப்பதினால்தான்
நாம் உணவோடு விளையாடினால்
உடல்நலம் பாதித்து உயிர் போகும் .
அதுபோல்தான் மக்கள் உணர்வோடு
விளையாடினால் பல உயிர்கள் பலியாகும் .
அவரவர் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர் .
அமைதி பூங்காவாக ஆக்குவீர் இந்த உலகை
இன்னும் வரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சக மனிதனை ஒரு மனிதனாக பார்த்தால் தானே...?
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
மனிதர்களை பார்த்ததும்
நீக்குஅவன் என்ன ஜாதி
,ஜாதியில் எந்த உட்பிரிவு
எந்த,இனம்,
எந்த கட்சி,
எந்த பகுதியை சேர்ந்தவன்
என்ற எண்ணம்தான்
மேலோங்கி நிற்கிறது.
இப்படி இருந்தால்
தமிழ்நாடு எப்படி முன்னேறும். ?
பெரியார் அவர்கள் மனிதனை நினை என்றார். மனிதனை மறந்தோம் , மனிதத்தையும் மறந்தோம்.
பதிலளிநீக்குஇன்று அறிவுடையார்
பதிலளிநீக்குஅறிவைபயன்படுத்துவதில்லை
அறிவற்றவரோ
அறிவுரைகளை
ஏற்றுகொள்வதில்லை
உயிருள்ள
மனிதர்களுக்கு மதிப்பில்லை
இன்று உலகத்தை
ஆட்சி செய்வது கர்விகளும்
கருவிகளும்
உயிரற்ற கருவிகள் சொல்லுவதை
கேட்டு செயல்படும்
உலகம்தான் இன்றுள்ளது