ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-4)
21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-4)


21ஆம் நூற்றாண்டின் 
தமிழனின் நிலை(பகுதி-4)

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந்த நிலை கெட்ட மாந்தரை 
நினைத்துவிட்டால் என்றான் பாரதி. 


PencilDrawing by me

அதுமட்டுமல்ல எல்லாவற்றையும் 
மறக்க மதுவை குடித்து மயக்கத்தில்
கிடக்கிறது இந்த மக்கள் கூட்டம். 

சினிமா,தொலைகாட்சி,அரசியல் ,
ஜாதிபித்து,சுயநலம்,போலி ஆன்மிகம்,
ஒழுக்கமின்மை, காமம் என்னும் 
போதை குழியில் விழுந்து 
அதுவே சுகம் என்று கனவு காண்கிறது 
படித்தமற்றும் பாமரகூட்டம். 

படித்தவனோ கற்பது காசுக்காகவும்
,பட்டிமன்றத்தில் பேசி கைதட்டல் 
வாங்குவதற்காகதான் 
என்று நினைக்கிறான்.

படிக்காதவனோ வாழ்வில் 
இலக்கில்லாமலே
உழைத்து சாகிறான்.

ஏமாறுபவர்களின் கூட்டமும் 
மற்றவர்களை ஏமாற்றி வயிறு 
வளர்க்கும் கூட்டமும் பெருகிவிட்டன 

கடவுளைகாணாதவன்  
கடவுளைக்கண்டேன் என்று 
பொய்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டு
 ஏமாளிகளை பேய்கள் போல் 
சாமியாட்டம் ஆட விட்டுஅவர்கள் மடியில் 
உள்ள காசை பறித்து கொண்டு 
அரச போக வாழ்க்கை வாழுகிறான்

நாகரீக வழிப்பறி கொள்ளையர்கள் இவர்கள்.
இவர்களை சட்டமும் கண்டுகொள்ளாது. 
ஏனென்றால் இவர்களுக்கு  பாதுகாப்பு தருவதே 
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள்தான்  

பலஆண்டுகள் பாடுபட்டு சேர்த்த லகரங்களை 
முலாம் பூசப்பட்ட சில தகரங்களுக்கு  
ஆசைப்பட்டு முழுவதையும் இழந்து 
பரிதவித்து புலம்பி நடைபிணமாய் திரியும் 
கூட்டம் லட்சக்கணக்கில் பெருகிவிட்டது
தமிழ் நாட்டில். 

மக்களிடையே அன்பில்லை. 
விட்டு கொடுக்கும்
மனப்பான்மை இல்லை. 

பொறாமையும்,
போட்டியும்தான் ஆட்சி செய்கிறது. 
ஆட்சியாளர்களும் அப்படியே.

 அதனால் கொலைகளும்,
 கொள்ளைகளும் பெருகிவிட்டன

நீதிமன்றங்களில் குவிந்துள்ள 
வழக்குகளின் எண்ணிக்கை 
நம் நாட்டு மக்கள் தொகையையே 
மிஞ்சிவிடும் போலிருக்கிறது. 

இறைவன் கொடுத்த அறிவிருக்க 
அதை பயன்படுத்தாது தங்கள் பிரச்சினையை
தீர்க்க மூன்றாவது மனிதரை நாடுவது 
இன்றைய மனிதர்களின் 
அறியாமையின் உச்ச கட்டம். 

இதன் மூலம் அவர்கள் 
இழப்பது சில கோடி
ஆனால் அதை வைத்து பிழைக்கும் 
இடைதரகர்கள் அடிப்பது பல கோடி. 

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந்த நிலை கேட்ட மாந்தரை 
நினைத்துவிட்டால் என்றான் பாரதி. 

வாழ வைக்க வந்தவன் ,
வாழும் வழிகளை கற்பித்தவன்.
மனம் நொந்து ஆனைமுகனிடம் முறையிட்டான்.
வாடா என் மகனே என்று அழைத்துகொண்டுவிட்டான்.
அப்போதே.
இன்னும் வரும்

2 கருத்துகள்:

 1. இன்றைய நிலை அப்படியே வரிகளில்...

  ஓவியம் அருமை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. உண்மையிலேயே இதுதான் இன்றைய அவல நிலை அய்யா. நெஞ்சு பொறுக்குதில்லையே, நெஞ்சு பொறுக்குதில்லையே

  பதிலளிநீக்கு