புதன், 10 ஏப்ரல், 2013

திருக்குறள் விளக்கம்-என் பார்வையில்திருக்குறள் விளக்கம்-என் பார்வையில் 


குறள் 22: 

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

மு.வ உரை:

பற்றுக்களைத் துறந்தவர்களின் 
பெருமையை அளந்து கூறுதல், 
உலகத்தில் இதுவரை பிறந்து 
இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

என் பார்வையில்:

மேலே கண்ட குறளுக்கு 
தரப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல 
என தோன்றுகிறது . 

ஏனென்றால் துறந்தவர்களின் 
பெருமை தனை என்று கூறியிருந்தால்
மேற்கண்ட பொருள் சரியாக இருக்கும்.
ஆனால் துணை என்று கூறப்பட்டிருப்பதால் 
அந்த விளக்கம் சரியல்ல.

துறந்தவர்களின் பெருமைகளை பற்றி 
வீணாக பேசிக்கொண்டிருப்பது எப்படி
என்றால் இந்த உலகத்தில் வாழ்ந்து 
மடிந்து போனவர்களை பற்றி 
கணக்கெடுத்துக்கொண்டு 
ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன்?

அது வீண் வேலை என்று 
திருவள்ளுவர் சொல்ல விழைகிறார். 

கடந்த அதாவது இறந்த காலத்தில் 
வாழ்க்கையை வீணடிக்காதே,
நிகழ் காலத்தில் வாழ தொடங்கு என்கிறார். 

அவ்வாறு செய்யாமல் இருப்பது 
அரிதாய் கிடைத்த மனித பிறவியை
வீணடிப்பது ஆகும் என்று பொருள்.

கிடைத்தற்க்கரிய 
இந்த மனித பிறவியை
இறைவனை அறிந்துகொண்டு 
அவனை அடைவதற்கு 
பயன்படுத்தவேண்டுமே அல்லாது 
இதை போன்ற வீண் செயல்களில் 
ஈடுபடக்கூடாது என்பதே
இந்த குறளின் 
பொருளாக இருக்க முடியும்.

JamesAlen-என்ற அறிஞன் சொன்னான் 
It is a new life everyday 

அதைதான் பாரதி சொன்னான்
இன்று புதிதாய் பிறந்தோம் 
என்று அழகு தமிழில்.

Pl. remember.
yesterday is a dead-Horse -you can't ride on it. 

2 கருத்துகள்: