திங்கள், 29 ஏப்ரல், 2013

திருக்குறள் விளக்கம் என் பார்வையில்


திருக்குறள் விளக்கம் 
என் பார்வையில் 

குறள் 35: 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.
மு.வ உரை:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்தற்காலத்தில் எல்லோரும் அறத்திற்கு 
புறம்பான செயல்களை ஒரு பக்கம் செய்துகொண்டு 
விளம்பரத்திற்காக அற  செயல்களையும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் விளம்பரமில்லாமல் 
அற செயல்களை செய்து கொண்டு வருகிறார்கள்.

பலர் பலரறறிய அற செயல்களை செய்வதுடன் 
அதன் மூலமாக பல ஆதாயங்களை 
தேடிக்கொள்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். 

அவர் செய்யும் அற செயல்களுக்காக 
ஆகும் செலவை விட அதை விளம்பர படுத்துவதற்காக 
ஆகும் செலவு பன்மடங்காக இருக்கும். 

சிலர் தன் எதிரி அறத்திர்க்காக செலவு செய்தால் 
அவர் மீது பொறாமை கொண்டு ,
அவர்மீது கோபம் கொண்டு, அவரை விட 
அதிகமாக செலவு செய்து  
சுய லாபத்திற்காக செய்வது 
இந்நாளில் அதிகம்

சிலர் சில குறிப்பிட்ட நபர்களுக்கு
 மட்டும் தான் உதவுவர். மற்றவர்கள் 
வந்தால் கோபம் கொண்டு கடும் சொற்கள் 
பேசி விரட்டியடிப்பார்.


இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமலும்,
 உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு 
அன்புடனும் பரிவுடன்,பாசத்துடன், 
பலன்மீது ஆசை இல்லாதிருத்தல் ,
அதன் பயனை  எதிர்பாராமல் உதவுவதுதான் அறம் 
எனப்படும் என்றும் திருவள்ளுவர் 
இந்த குறளில் வலியுறுத்துகிறார். 


சீரடி சாயீனாதன் பிச்சை கேட்டு 
வருபவர் யாரையும் கடும் சொல் 
பேசி விரட்டாதீர் என்றும் 
விருப்பமிருந்தால் பிச்சையிடுவீர். 

ஏனென்றால் உனக்கு அந்த நிலை
வந்தாலும் வரலாம் என்று எச்சரிக்கின்றார்.

சில நேரங்களில் நானே உன்வீட்டின்
 கதவை தட்டுவேன்
 உன் வினைகளை போக்க  என்கிறார்

யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் 
அந்த வடிவத்திற்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறார் 
என்பதை நாம் எப்போதும் நினைவில் கொளவேண்டும். 2 கருத்துகள்: