திங்கள், 29 ஏப்ரல், 2013
என்றுதான் திருந்துமோ?
என்றுதான் திருந்துமோ?
தவறுகள் செய்வதற்கு
அஞ்சுவதில்லை
இந்த மானிடர் கூட்டம்
ஆனால் அதன்விளைவுகளுக்கு
மட்டும் அஞ்சி நடுங்குது
இந்த அற்பக்கூட்டம்.
மனதிலும் மண்டிக்கிடக்குது கழிவுகள்
அகற்ற யாரும் முன்வருவதில்லை
தவற்றினை அனைவரும்
கூட்டு சேர்ந்து செய்கின்றார்
ஆனால் தன் குற்றத்தை மறந்து
பிறர்மீது குற்றம் சுமத்துகின்றார்
புறவுலகிலும் கண்டவிடமெல்லாம்
கொட்டி மகிழ்கிறார்
குப்பைகளையும்கழிவுகளையும்
திசுக்களை குதறி குருதி குடிக்கும்
கொசுக்களுக்கு சாக்கடை
பண்ணைகளை அமைத்து தருகின்றார்
இலவசமாக
அவைகளை அழிக்க மாதம்தோறும்
காசை தொலைக்கிறார்கள்
ஆயிர ஆயிரமாக
கொசுகடியால் வரும்
நோய்கள் கோடிகோடி
நோய் தீர்க்க மக்கள் கூட்டம் ஓடுது
மருத்துவரை நாடி நாடி
துன்பத்திற்கு வித்திட்டு
உழைத்த காசையெல்லாம்
ஊதாரிதனமாய் செலவிட்டு
கடன் தொல்லையில்சிக்கி மாயுது
அறிவிலா மக்கள் கூட்டம்.
என்றுதான் திருந்துமோ
செய்யும் தவற்றிற்கு வருந்துமோ
இந்த மூடர் கூட்டம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறிது சிரமம் தான்...
பதிலளிநீக்குதிருந்தாத ஜன்மங்கள்
பதிலளிநீக்குஇருந்தென்ன லாபம்?
வருந்தாத உள்ளங்கள்
பிறந்தென்ன லாபம் ?