மே தின சிந்தனைகள்
மே தின வாழ்த்துக்கள்
நல்ல நிலையில் உள்ள
அமைப்பு சார்ந்த தொழிலளர்களுக்கு.
ஆனால் பண முதலைகளால்
சுரண்டப்பட்டு சாலையின் ஓரங்களிலும்,
சாக்கடையாக மாறிவிட்ட நதிகளின் கரைகளிலும்
தங்கள் வாழ்வை தொலைக்கின்ற
கோடிக்கணக்கான அமைப்பு சாரா
தொழிலாளர்களை வாழ்த்துவார் யார்?
அவர்கள் வாழ்வு வளம்
பெற வழி காணுவார் யார்?
அவர்களுக்கு கிடைக்கவேண்டிய
அடிப்படை கூலியை கிடைக்க
வழி செய்வார் யார்?
தாய் மண்ணை விட்டுவிட்டு
பிழைக்கும் வழி தேடி பிற மாநிலங்களுக்கு
வந்தவர்கள் படும் பாட்டை நீக்க
வழி தேடுவார் யார்?
கல்வி கற்கும் வயதினிலே
குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய
குழந்தை தொழிலாளார்களின்
நலனை கவனிப்பார் யார்?
சட்டங்கள் பல உண்டு
போராட கட்சிகள்
பல உண்டு இந்நாட்டில்
ஆனால் இந்த கேள்விகளுக்கு
பதில் இல்லை
தீர்வும் இல்லை
தொடரும் இந்த அவலம்
ஆண்டாண்டு காலமாக
இவர்கள் என்று
வளம் பெறுகிறார்களோ
தங்கள் அடிப்படை
உரிமைகளை பெறுகிறார்களோ
அதுவரை கொண்டாடப்படும்
மே தின கொண்டாட்டங்கள்
முழுமை பெறாது.
அவர்களுக்கும் நன்மை
விளைய அனைவரும்
பாடுபடுவோம்.
அவலம் நீங்கி வளம் பெற வேண்டும் ஐயா...
பதிலளிநீக்குதொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)
தொழிலாளர் தின வாழ்த்துக்கள் அய்யா
பதிலளிநீக்குநன்றி கரந்தை நண்பரே
நீக்குஇன்று உழைத்து வாழும்
மக்கள் பல கோடிகள் என்றாலும்
அவர்களை சுரண்டி
பிழைக்கும் கேடிகளும் ஏராளம்
உழைத்து பிழைப்பவர் ஊண்,
உறைவிடம், உறக்கம்
இன்றி தவிக்கின்றார்
அவர்களுக்காக போராடுகிறோம்
என்பவர்கள் குளு குளு காரில் பயணித்து
வீட்டில் குதூகலித்து
கும்மாளமிடுகின்றார்
உலகில் உள்ளோரனைவருக்கும்
உறைவிடம் அமைத்து தரும்
உழைப்போர் உட்காருவதற்கு கூட இடம் இல்லை,
மழை,வெய்யில், குளிரில்
தங்க ஓர் இடமில்லை.
அவர்களுக்கு கூலியை
விட்டெறிந்துவிட்டு வேலிபோட்ட
வீட்டில் சொகுசாக வாழ்க்கைநடத்துது
இந்த இரக்கமற்ற மந்த கூட்டம்.
இறைவா ! இவர்களும் உன் குழந்தைகளே
என்றுதான் இவர்கள் வாழ்வில்
ஒளி வீச செய்வாயோ நானறியேன்.
.