திங்கள், 29 ஏப்ரல், 2013

ஆத்திரம் அழிவுக்கு வழி வகுக்கும்


ஆத்திரம் அழிவுக்கு 
வழி வகுக்கும்

























எத்தனை சாத்திரங்கள் படித்தாலும்
ஆத்திரத்தை அட்க்காவிடில் 
அழிவுக்குத்தான் செல்லவேண்டும்

இன்று உலகில் நடக்கும் பல 
கொடுமைகளுக்கும்,தீமைகளுக்கும்,
இழப்புகளுக்கும். 
ஆத்திர குணம்தான் காரணம்

ஆத்திரகுணம் எதிராளிகளை 
மட்டும் அழிப்பதில்லை 
அந்த குணத்தை கொண்டவரையும் 
சேர்த்து அழித்துவிடும் தன்மை கொண்டது.

ஆத்திரத்தினால் அறிவிழந்து 
கண்ணிமைக்கும் நேரத்தில் 
கொடிய செயல்களை செய்துவிட்டு 
ஆயுள் முழுவதும் துன்பத்திலும், 
துயரிலும் வாழம் மனிதர்கள் கோடி கோடி 

பொறுமை கடலினும் பெரிது. 

வீரம் என்பது விவேகத்துடன்  
கூடி செயல்படும்போது 
நன்மையை தரும். 

விவேகமற்ற வீரமே ஆத்திரம் 
என்னும் கொடுநோய். 

எனவே பொறுமையை கைகொண்டு ,
விவேகத்துடன் எந்த பிரச்சினையையும் 
கையாண்டால் துன்பம் விளையாது. 

4 கருத்துகள்:

  1. உண்மையான வரிகள் ஐயா...

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லும் சினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினம் தன்னை
      சேர்ந்தவர்களையே
      கொன்றுவிடும்

      ஆசைக்கு தடை வரும்போது
      பிறக்கும் சினம்

      அது செல்லுகின்ற வழியில்
      வருவோரையெல்லாம்
      வெட்டி சாய்த்துதான் அடங்கும்.

      அது வந்தபின்
      அடக்குவது கடினம்

      அது வில்லிலிருந்து
      புறப்பட்டுவிட்ட அம்பு
      அதை பிடிப்பது கஷ்டம்

      அது ஏற்படுத்தும் ஈடில்லா
      நஷ்டம்

      எனவே அதனிடம்
      எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

      நீக்கு
  2. மனிதனை மிருகமாய் மாற்றுகின்ற தன்மை சினத்திற்கு மட்டுமே உள்ளது அய்யா. மனிதனாய் வாழ்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகந்தையை ஒழித்தாலன்றி
      சினத்தை ஒழிக்கமுடியாது

      அதற்க்கு யாரும்
      தயாராக இல்லை இவ்வுலகில்

      அதனால்தான்
      கணக்கிலடங்கா அழிவுகள்

      நீக்கு