வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தமிழ் தாயே நீ வாழ்க


தமிழ் தாயே நீ வாழ்க 

தமிழை வளர்க்க முயன்றவர்கள் 
அன்று பல கோடி 

பல தியாகங்களை செய்தார்கள் 
தமிழை நாடி

அவர்களை நெஞ்சில் வைத்து 
போற்றுவோம் 

இன்றோ தமிழை வைத்து 
வயிறு வளர்க்கின்றார் 
பலர் 

தமிழ் மொழியின் சுவையை 
அறிந்தோரே அறிஞர்கள்

மற்றவர்கள் எல்லாம் வெறும்
உரைஞர்கள் 

தமிழுக்கு 
பெருமை சேர்த்தவர்கள்
எவ்வினத்தாயினரும் 
அவர்கள் தமிழர்களே

தமிழரில் சாதிகள் பலஉண்டு
விதவிதமாய் மணம் வீசும் 
பலவிதமான மலர்களைப்போல 

அவையனைத்தும் மாலையாய் 
தொடுக்கப்பட்டு தமிழ் தாயை 
அலங்கரிக்கப்படும் நாள்
என்று வருமோ நானறியேன்?

சாதிகள் இருப்பதில் தவறில்லை
சாத்திரங்கள் இருப்பதில் தவறில்லை
ஆனால் மக்கள் மனதில் சாதிகளை பற்றிய
பீதிகள் தேவைதானா ?

அவரவர் அவரவர் வந்த வழி 
பற்றி நடக்கின்றார்
இதில் உயர்வு தாழ்வு 
கருதல் வீணென்று இந்த உலகம்
உணரும் காலம் எப்போது வரும்? 

சைவமோ ,வைணவமோ எந்த 
சமயமாயினும் ஆன்மீகம்தான் தமிழை
காலத்தால்அழியாமல் காப்பாற்றி 
வைத்துள்ளது என்பதை மறவாதீர். 

தமிழ்உயர்வு பெற பாடுபட்டவர்களின்
வரலாறுகளை அறிந்து கொள்வீர் 

காலத்தால் மக்கள் மனதிடையே 
புகுந்துகொண்ட அவநம்பிக்கைககளை 
களைகலென களைவீர் 
தன்னிகரற்று வாழ்வீர்.

1 கருத்து:

  1. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
    இனிதாவது எங்ககும் காணோம் என்றான் பாரதி.
    அத்தகு மொழியின் பெருமையினை, தமிழர்களாகிய நாம் தான் மறந்து விட்டோம் அய்யா.நிச்சயம் இந்நிலை மாறும்.
    நன்றி அய்யா

    பதிலளிநீக்கு