செவ்வாய், 2 ஏப்ரல், 2013

எந்த நாட்டில் இந்த கோலம்.?


எந்த நாட்டில் இந்த கோலம்.?


படிக்கட்டில் பயணம் செய்ததால்

பரலோகம் சென்றார்கள் சில மாணவாகள்
நம் நாட்டினிலே சமீபத்தில்

பரலோகத்திற்கு செல்ல வழி வகுக்கும்
பயணத்திற்கு தடை விதித்தது ஆளும் அரசு
மீறி சென்றால் அபராதம்.இங்கு

ஆனால் இங்கோ பாரீர்
நாங்கள் படிக்கட்டில் மட்டுமல்ல
பேருந்து மீதும் ,பக்கவாட்டிலும் ,
முன்னும் பின்னும்
பயணம் சாஹாச பயணம் செய்வோம்.
எங்களை கேட்பார் யாருமில்லை.
என்று கொக்கரிக்கிறார்கள்

எந்த நாட்டில் இந்த கோலம்.?
ஒரு அண்டை
நாட்டில் உள்ள நிலைமைதான் இது.

4 கருத்துகள்:

  1. தன் உயிருக்கு அவ்வளவு தான் மதிப்பு தருகிறார்கள் போலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிரை கொன்று தின்பவர்களுக்கும்,காரணமில்லாமல் அப்பாவி உயிர்களை கொல்பவர்களுக்கும் உயிரின் மதிப்பு தெரியாது.

      நீக்கு
  2. மனித உயிரின் விலை மிகவும் மலிந்து விட்டது அய்யா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்று வருவதற்கான வாய்ப்பு கிட்டியஅய்யா. அங்கு பேருந்தில், இருக்கைகளில் அமர்ந்து மட்டும்தான் பயணம் செய்ய அனுமதிக்கப் படுகின்றது. நின்று கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப் படுகின்றது.நமது ஊர் பேரூந்துகளை நினைத்தாலே பயமாக இருக்கின்றது அய்யா.

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய முந்தய பதிவான
    தமிழ் நாட்டு மக்களின் லட்சணம்
    படியுங்கள்

    பயம் தெளிந்துவிடும்.

    தமிழனும் முன்னேரமாட்டான்.
    தமிழ்நாடும் முன்னேறாது.

    தமிழ்நாட்டுக்கு மற்ற மாநிலங்களிலிருந்து
    வருபவர்கள்தான் தங்கள் புத்தியை பயன்படுத்தி
    வசதியான வாழ்க்கை வாழுகிறார்கள்.

    தமிழன் எதற்கெடுத்தாலும்
    உணர்ச்சிவசப்பட்டு எடுப்பார்
    கைபிள்ளையாக இருந்து கொண்டு
    அழிந்துகொண்டிருக்கின்றான்.

    பதிலளிநீக்கு