சனி, 6 ஏப்ரல், 2013

21 ஆம் நூற்றாண்டில் தமிழனின் நிலை(பகுதி-10)


21 ஆம் நூற்றாண்டில் 
தமிழனின் நிலை(பகுதி-10)


சிந்தனைக்கு  சில   வரிகள்

வள்ளுவந்தன்னை   உலகினுக்கே  தந்து
வான்புகழ்  கொண்ட  தமிழ்நாடு  என்ற  பாரதி
முழங்கிய  இந்நாட்டில்  அவன்  கருத்துக்களை
கொன்று  அதன்மீது  வானுயர
சிலைகளை  அமைத்துவிட்டனர்
மென்மொழி  பேசும்  வன்மனம்
கொண்ட  ஆட்சியாளர்கள்
இன்று  இங்கு

கள்ளுண்ணாமையும்  புலால்  மறுத்தலையும்
வலியுறுத்திய  வள்ளுவன்  ஏனோ
திருக்குறளை  முடிப்பதற்குள்
அது  எதிர்காலத்தில்  சாத்தியப்படாது
 என்றெண்ணியே  சொல்லுதல் யார்க்கும்
 எளியவாம்  அரிதாம்  சொல்லிய
வண்ணம்  செயல்  என்று  ஒரு
குறளை  சேர்த்துவிட்டான்  போலும்

காலையில்  குடிநீருக்காக குடங்களுடன்
அலையும்  பெண்கள்   மலையில்  உழைத்து
கிடைத்த  காசை  ஆண்கள்  மதுக்கடையில்
தொலைத்துவிட்டு  வீட்டிற்கு  சென்று
பெண்களின்  கண்களில்  கண்ணீரை
வரவழைக்கும்  காட்சி  இதுவே
இன்றைய  ஆட்சியாளர்களின்  மாட்சி

கணவனால் தன்  பூவும்  பொட்டும்  நிலைக்கும்
என்று  நம்பியே  தமிழ்  பெண்கள்  காயும்
வெய்யிலில்  பூ  கட்டி  விற்று  அவனுக்கும்
அவன்  மூலம்  பெற்ற  குழந்தைகளுக்கும்
சோறு  போடும்  பரிதாப நிலை என்ற
பெருமைதனை  படைத்துக்கொண்டிருக்கிறது
இன்றைய  தமிழ்நாடு .

இன்னும் வரும்

2 கருத்துகள்: