ஞாயிறு, 5 ஜனவரி, 2014

இந்த அப்பாவி பறவையின் மரணத்திற்கு யார் காரணம்?

இந்த அப்பாவி பறவையின் மரணத்திற்கு யார் காரணம்? 

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்
ஒரு பறவை உட்கார்ந்திருக்கிறது
அருகே ஒரு பறவை மாண்டு கிடக்கிறது


இதற்க்கு யார் காரணம் ?
சிலர் விதி என்பார்.
அதன் ஆயுள் முடிந்துவிட்டது.
அதனால் மடிந்து விட்டது என்பார்.

பிறந்த எல்லா உயிரும்
மடியத்தான் வேண்டும் ஒருநாள்.

ஆனால் இந்த சிறிய அழகான,
வண்ண வண்ண சிறகுகளுடன் சிறகடித்து திரிந்த
பறவை மாண்டதற்கு பொறுப்பற்ற மனிதர்கள்தான்
 காரணம் என்றால் அது மிகையாது.

சிறுவர்களும் பெரியவர்களும் (chewingGum)மென்று சப்பிவிட்டு போட்ட சுயிங்கம்தான் அதன் உயிரை குடித்தது.
ஏதோ உணவு பொருளென்று அலகால் கொத்தி தின்றதும்
அதன் வாய் ஒட்டிக்கொண்டது.
உண்ண முடியாமல் நீரருந்த முடியாமல் மாண்டு போயிற்று.

இனிமேலாவது மனிதர்களே சுயிங்கத்தை
கண்ட இடங்களில் எறிந்து
ஒரு அப்பாவி பறவையின் உயிரை பறிக்க
துணையாக இருக்காதீர்கள்.

மூலம்-கதம்பம் -முகநூல் 

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. .பகுத்துண்டு பல்லுயிரும் ஓம்புதல்
   நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்றார் வள்ளுவர்.

   அவர் கூறியது ஏட்டளவிலேயே நின்றுவிட்டது.

   நமக்குஎந்த விதத்திலும் தீங்கிழைக்காது
   நம் நன்மையே நாடும் பறவைகளைஇரக்கமின்றி
   கொடூரமாகக் கொன்று சுவைத்து தின்று கொண்டிருக்கும்
   மனித விலங்குகளுக்கு இந்த செய்தி மண்டையில் ஏறாது.

   மனித உயிர்களையே காரணமின்றியும்,
   வறட்டு சித்தாந்தங்களுக்காகவும் கொன்று குவிக்கும்
   மனிதர்களுக்கும் இந்த செய்தி
   எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவதில்லை

   சொல்லிலும் செயலிலும்
   உள்ளத்திலும் இதயத்திலும்
   உண்மையான அன்புடையவர்களுக்குதான்
   இந்த செய்தி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

   அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டமனிதர்களால்
   இந்த உலகம் நிரம்பவேண்டும் என்பதே இவனின் பிரார்த்தனை

   இறைவன் அதற்கு துணை புரியவேண்டும்.

   நீக்கு
 2. amritha varshini
  Jan 5 (6 days ago)

  to me, amrithavahini, 4brahmins, brahmintoday, iyer123, Pattars, Forum_USBrahmi.
  Namaskaram Sri Pattabi Raman

  I am pained to read the article. Thanks for alerting shall do the needful immediately.

  I am requesting to take note of the same and pass on the message to all

  Pranams

  Anand Vasudevan

  பதிலளிநீக்கு

 3. Pattabi Raman
  Jan 5 (6 days ago)

  to amritha
  ஆனந்தமாக மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன
  இரண்டு கிரவுஞ்ச பட்சிகள்.

  அதை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார் வால்மீகி மகரிஷி

  அப்போது ஒரு வேடன் அந்த இரண்டு பட்சிகளில் ஒன்றை அடித்து வீழ்த்தினான்

  கீழே விழுந்து அடிபட்டு உயிருக்கு போராடும்
  ஆண் பறவையைக் கண்டு துடித்தது பெண்பறவை.

  அந்த காட்சியைக் கண்டதும்மனம் பதறியபோது இந்த காட்சியையே ஆரம்பமாகக் கொண்டு வால்மீகி முனிவர் இராமாயண காவியத்தை எழுத தொடங்கினார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  அதைப்போல்தான் இந்த ராம பக்தனுக்கும் முகநூலில் இந்த செய்தியைப் படத்துடன் கண்டதும் துக்கம் இதயத்தை பிழிந்தது.

  இவன் வலைப்பதிவில் தமிழில் அனைவருக்கும்
  இந்த செய்தியைக் கொண்டு சென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று தோன்றியதில் விளைவே இந்த கட்டுரை.

  அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி ஆனந்த வாசுதேவன்

  பதிலளிநீக்கு