புதன், 8 ஜனவரி, 2014

புகை பிடிக்கும் இந்திய பெண்கள்


புகை பிடிக்கும் இந்திய பெண்கள் 


நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

உலக அளவில் இந்திய பெண்கள்தான்
அதிக அளவில்புகை  பிடிக்கிறார்கள் என்று
இன்று செய்தி வெளியாகி உள்ளது.

அரசு புகை பிடித்தால் புற்று நோய் வரும்
என்று விளம்பரம் செய்கிறது.

மார்பக புற்று நோயாலும், கர்ப்ப பை புற்று நோயாலும்
இன்று லட்சக்கணக்கான பெண்கள்
உயிரோடு மரணத்தின் கொடுமையை அனுபவிப்பதைக்
கண்டும் இவர் போன்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தற்கொலைக்கு சமானமானது அன்றி வேறு என்ன ?

ஆனால் நாகரீகம் என்ற பெயரில்
அனைத்தையும் காற்றில் பறக்க விட்ட
 நம் நாட்டு பெண்கள் தற்போது புகையையும்
பறக்க விடத் தொடங்கி விட்டார்கள்

அவர்கள் புகை பிடித்து நாசமாகப்
போகட்டும் அவர்களை
யாரும் திருத்த முடியாது.

அவர்கள் நம் நாட்டின்
எதிர்கால சந்ததிகளை உருவாக்கும்
முக்கிய பொறுப்பை இறைவன்
அவர்களுக்கு தந்திருக்கிறான்.

 அவர்கள் வயிற்றில் வளரும் பிஞ்சுகள் பிறக்கும்போதே மனதில் புகை பிடிக்கும் கொடிய பழக்கம் பதிவாக பதிய வழி வகுக்கவும் உடலிலும் நிகோடின் என்னும் நஞ்சு கலந்து அவர்களுக்கு உருவாகும் குழந்தைகள் பிறக்கும்போதே பலவிதமான உடற்குறைபாடுகளுடனும், மூளை செயல்பாட்டு குறைபாடுகளுடன் பிறக்கும் என்று அறிந்தும் தவறு செய்யும் இவர்களை யார் திருத்த்வது?


கடவுள்தான் இவர்களுக்கு
நல்ல  புத்தி அளிக்க வேண்டும்.

படம்-தகவல் -ஒன் இந்தியா-செய்தி வலைத்தளம். 

1 கருத்து: