திங்கள், 6 ஜனவரி, 2014

அபர காரியங்கள்

அபர  காரியங்கள் 



கருமாந்திரம் என்ற
சொல் அமங்கலமா?

சமீபத்தில் ஒரு
வலைப்பதிவு பார்த்தேன்

அதன்தலைப்பு காசு கொடுத்து
கருமாந்திரங்களை தரும்
இணையதளம் அல்ல என்றும்
இலவசமாக பல்சுவை
தகவல்களை தந்து உங்கள் இதயங்களை
கொள்ளைடிக்கும் இணையதளம்
என்று தலைப்பை இடப்பட்டிருக்கிறது.

அந்த தலைப்பே கருமாந்திரம் என்ற சொல்
ஒரு இழிவான பொருளை தரும் சொல்
என்பது போலவும் அந்த துறையில்
ஈடுபட்டுள்ள ஒரு இனத்தவரின் மீது
காழ்ப்புணர்ச்சியை காட்டும் முகமாகத்தான்
அமைக்கப்பட்டிருக்கிறது என்பது
அனைவரும் அறிந்ததே

ஆனால் உண்மையில்
இந்த கருமாந்திர தொழிலில்
பல்லாயிரக்கணக்கான்
மனிதர்களும்
வெவ்வேறு பிரிவு மதம்
இனத்தை சேர்ந்தவர்கள்
ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட
சமுதாயம் செய்யும் செயலை
மட்டும் பிரித்து அவர்கள்தான்
அனைத்திற்கும் காரணம் என்று
என்றோஎழுதப்பட்டு
தற்போது நடைமுறையில்
இல்லாத விஷயங்களோடு
ஒப்பிட்டு நோக்கி
ஆனந்தப்படுவது
ஒரு சிலரின் சுதந்திரம்

அதில் யாரும்
தலையிடவேண்டாம்.
அவர்கள் அப்படியே
இருக்கட்டும்
.
இப்போது இந்த கட்டுரை
இந்த கருமாந்திரத்தை பற்றி
ஆராய்வதுதான் நோக்கம்.

நாம் வாழும் இந்த
பூமி கரும பூமி.

இந்த உலகில் பிறந்த
எந்த உயிரும் சும்மா
இருக்க முடியாது.

 பிறந்ததிலிருந்து
இறக்கும் வரை ஏதாவது
ஒரு கர்மாவை அதாவது
செயலை செய்து கொண்டுதான்
இருக்கவேண்டும். .

எந்த செயலை செய்யவேண்டும்
என்றாலும் அதற்க்கு
மனம் திறனுடையதாக
இருக்கவேண்டும். அதை
திறனுடையதாக செய்வதற்கு
உதவுபவைகள்தான்
இந்த மந்திரம் என்பது.

பொதுவாக இறப்பு
தொடர்பான கர்மங்களை.
கர்மாந்திரம் என்று அழைக்கிறோம்.
அதை அமங்கலமாகவும்
அதை செய்பவர்களை
 மட்டமாகவும் நினைக்கிறது
இந்த நன்றி கெட்ட உலகம்.

துன்பத்திலும், துக்கத்திலும்
துயரத்திலும் வீழ்ந்து என்ன
செய்வதென்றறியாது குழப்பத்தில்
ஆழ்ந்துபோயிருக்கும் மக்களை மீட்டு
அவர்களின் துன்பசுமையை
படிப்படியாக குறைத்து
அவர்களை மீண்டும்
வாழ்க்கை பயணத்தை
தொடர உதவும் இந்த
துறையில் இருப்பவர்களை
மனம் திறந்து பாராட்டவேண்டும்.
ஆனால் மாறாக அவர்களை
பழித்துரைக்கின்றனர்.

எந்த துறையிலும்
அயோக்கியர்கள் உண்டு.

அதேபோல்தான்
இந்த துறையிலும்.
கிடைத்தவரை சுருட்டுவது.

புதுப்படம் வரும்போது கருப்புசந்தையில்
பலமடங்கு காசு கொடுக்க தயங்குவதில்லை.
எவ்வளவு விலை விற்றாலும்
குடிப்பதற்கு காசு செலவு செய்ய
தயங்குவதில்லை இந்த மனிதர்கள்.
இதுபோல் ஏராளம்.

இன்று இன்று மன நல மருத்துவர்கள்
மருத்துவ மனைகள்
நகை மோசடிகள்
பன்னாட்டு வியாபாரிகள்
,மதவாதிகள், மந்திரவாதிகள்,
போலிசாமியார்கள், நிதி,நிலமோசடி,
கள்ளகடத்தல், போதை கும்பல்கள்
காம வியாபாரிகள், தொலைகாட்சிகள்
அரசியல்வாதிகள்
பலவிதமான கொள்ளையர்கள்
கேடிகள் இவர்களை விடவா
இந்த துறையில் இருப்பவர்கள்
மக்களை ஏமாற்றிவிட
போகிறார்கள்?

சிந்திக்கவேண்டும்.
எதிர்ப்பில்லை என்று தொடர்ந்து
ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது.
 இன்றுமட்டுமல்ல
அது உலகம் தோன்றிய நாள்
முதலிருந்து உண்டு.

ஒரு மனிதன் மற்றொருவனை
இழிவுபடுத்துவது அகந்தையின்பால்
பட்டதே  ஒழியே மற்ற
எந்த காரணத்தையும் சார்ந்தது
அல்லஎன்பதே உண்மை.

கல்வி மனிதனின் வாழ்வின்
தரத்தை மேம்படுத்தலாமே அன்றி
நல்ல பண்புகளே அவன் வாழ்வை உயர்த்தும்.

இன்றைய கல்வி காசைச் செலவழித்து காசை 
சேர்க்க வழி காட்டும் கல்வி.

அதில் பணத்திற்கும் பதவிக்கும்தான் இடம் உண்டு.
பண்புக்கோ அன்புக்கோ அதில் இடம் கிடையாது. 

இன்று எந்த துறையை எடுத்தாலும்  அதில் ஆதிக்கமும், 
கிடைத்தவரை பிறரை ஏமாற்றியோ சூழ்நிலையை பயன்படுத்தியோ 
சுருட்டும் மனப்போக்குதான் நிலவுகிறது. இந்த துறையிலும் அதுபோன்ற நிலை உள்ளது .



இந்த துறையை மட்டும் தனிமைப்படுத்தி குறை கூறாமல் இதிலுள்ள குறைபாடுகளை அனைவரும் சேர்ந்து ஒழுங்குபடுத்தினால் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதற்க்கு பொதுநல சங்கங்கள் கூடி பேசி ஒரு நல்ல முடிவைக் காணுதல் அவசியம். 






5 கருத்துகள்:

  1. இந்த கருமாந்திர கட்டுரை நல்லாத்தான் இருக்கு...
















    ஆனால்...

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் கூறிஉள்ளது 100% உண்மை..தற்காலத்தில் தான் flushout...அதற்கு முன்??இப்போது கூட ஸெப்‌டிக் டாங்க் clean செய்ய பிறர் உதவி தேவை ...அதே போல் தானே அபரகாரியமும் ?திருட்டு vcd வாங்க,பார்க்க,500,1000 என தருவார்கள்..ஒரு ration card..change of address செய்ய 250 தர தயார்..(வேலை சீக்கிரம் முடிந்தால் சரி)ஒருவர் உயிருடன் இருக்கும் வரை அவரின் செயல்களுக்கு அவரே பொறுப்பு..இதில் பிறருக்கு பொறுப்பு இல்லை..அவ்ரே இறந்து போனபின் அவரை நல்லடக்கம் செய்வது,அவரின் உறவினர்கள் பொறுப்பு...உறவினர் இல்லாது போனாலோ,வசதி இல்லாவிட்டாலோ,உதவுவது,அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடமை..."எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம்"என கருதுவோரும் உண்டு...ஆனால் அவர்கள் கூட,இவர்கள் உண்மையிலேயே வசதி அற்றவர்கள் என தெரிந்தால்,"என்னால் முடியாது..வேண்டுமானால்,வேறு ஒருவரை அனுப்புகிறேன் என்பார்(அவருக்கு சில விஷயங்கள் குறைவாக இருக்கலாம்) இது போன்ற விழயங்களில் உதவுவது என்பது ஒரு சமுதாய கடமை..."துக்கம் நடந்த வீட்டில் அடுப்பு மூட்ட கூடாது என்பதால், அவர்களுக்கு பிறர் வீட்டில் வைத்து உணவு அளிப்பது,எல்லோரும் சேர்ந்து பண உதவி செய்வது என்பது எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது..அந்த ஊரில் உள்ள பெரியமனிதர்கள் சொன்னால்"இடுகாட்டு வெட்டியானில் இருந்து,காரியம் செய்து வைக்கும் அந்தணர் வரை கொடுத்ததை வாங்கி கொள்வார்கள்...நாம் தான் இப்போது "காங்க்ரீட் காட்டில்"வாசிக்கிறோமே..."உடன் பால் தெளித்துவிட்டு அடுத்த flight-ஐ பிடிக்க ஓடும் மகன், 'எனக்கு லீவு கிடைக்காது...உனக்கு சித்தப்பா தானே..நீயும் செய்யலாம்...இந்த பணம்...கூடவே தர்ப்பை புல்...இவர்களும் உண்டு...."அநாத ப்ரேத ஸம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்" என மஹாபெரியவா சொல்லி இருக்கிறார்....."ஒரு நல்ல விஷயத்தை எடுத்து கூறி இருக்கிறீர்கள்...நன்றி...நமஸ்காரம்.

    பதிலளிநீக்கு
  3. இந்த விஷயத்தை படிப்பதற்கே பயப்படுகிறார்கள் மக்கள். .என்ன செய்வது உண்மை கசக்கத்தான் செய்யும் .இருந்தாலும் இந்த விஷயம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரிக்கமுடியாத அங்கம் என்பது ஒத்த்க்கொள்ள வேண்டும். அதை சரி செய்ய அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும். என்பதற்காகத்தான் இந்த கட்டுரையை வெளியிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபர காரியங்களுக்கு வாத்தியாரை தேடுவது பெரிய குதிரைக் கொம்பாக உள்ளது.

      அதற்கென்று சில வாத்தியார்கள் உள்ளனர்.
      அவர்களை மற்ற நல்ல காரியங்களுக்கு அழைக்கமாட்டார்கள்.

      ஆனால் பிரேத சம்ஸ்காரம் முடிந்த மற்ற நாட்களுக்கு போட்டிபோட்டுக் கொண்டு வாத்தியார்கள் வருவார்கள். பல லட்சங்களை சுருட்ட.

      உயிரோடு இருக்கும்போது உலர்ந்த வாய்க்கு காஞ்சி ஊற்றாத மகன் வெளிநாட்டிலிருந்து வந்து லட்சக்கணக்கில் வாரி இறைத்துவிட்டு போவதால் போன ஜீவனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.



      கிராராமங்களிலும், நகரங்களிலும் வாத்தியார்களே இல்லை. நகரத்திலிருந்து தான் பல ஆயிரம் செலவு செய்து வாத்தியாரை கொண்டு வர வேண்டி உள்ளது. அதுவரை வயதானவர்களும் குழந்தைகளும் கர்த்தாவும் பட்டினி கிடக்க வேண்டியுள்ளது.

      அதுவும் ஒரு முகூர்த்த நாளாக அமைந்துவிட்டால் போதும். வாத்தியாரே கிடைக்கமாட்டார் கள்

      ஏற்கெனவே அழுது அழுது போய் கம்மிப்போய் போன குரல் செல் போனில் எல்லோருடனும் பேசி பேசி காணாமல் போய்விடும் நிலை உள்ளது.


      மடாதிபதிகள் இந்த விஷயத்தில் நடைமுறைக்கு உகந்த வகையில் ஏதாவது உபாயத்தை செய்துதான் ஆகவேண்டும்.

      வெறுமனே கிளிப் பிள்ளைகள்போல் அபர காரியங்களையும் தவசத்தையும் ஸ்ரத்தையாக செய்யவேண்டும் இல்லாவிடில் பித்ரு சாபத்திற்கு ஆளாவாய். என்று பயமுறுத்தினால் மட்டும் போதாது

      24 மணி நேர சேவை செய்யும் அமைப்பு ஏற்ப்படுத்தப்படவேண்டும்.
      இருக்கிறவர்கள் அள்ளி கொடுக்கட்டும். இல்லாதவர்களிடம் எரிகிற கொள்ளியில் பிடுங்கிற வரையில் லாபம் என்ற மனோபாவம் ஒழிய வேண்டும்.

      நீக்கு