எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
கவர்ச்சிக்கு அடிமையாகி நடிகர்கள்,
நடிகைகளையே அல்லும் பகலும் கண்டு
அவர்களின் நினைவிலேயே மூழ்கி
கிடப்பவர்களுக்கு ஏது விழிப்புணர்வு?
உண்மையை புரிந்து
கொள்ள முயற்சி செய்யாது
தூண்டி விடுபவர்களின் நோக்கத்தை அறியாது
உணர்சிகளுக்கு அடிமையாகி அவர்களின் பின்னே செல்லும் கோடிக்கணக்கான மக்களுக்கு எப்படி வரும் விழிப்புணர்வு?
குடி, போதையில் ஆழ்ந்து எப்போதும்
மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் குடி மன்னர்களுக்கு
எப்படி வரும் விழிப்புணர்வு?
விளம்பரப் பொய்களில் மனதை பறிகொடுத்து
எல்லாவற்றையுமிழந்துகொண்டிருக்கும்
மக்களுக்கு எப்படி வரும்விழிப்புணர்வு?
நாவின் சுவைக்கு அடிமையாகி
உயிரையே இழக்கும் மீனைப் போல
பேராசைக்காரர்களின் மாய்மால பேச்சை நம்பி
இருப்பதையெல்லாம் இழக்கும் மூட
ஜனங்களுக்கு எப்படி வரும் விழிப்புணர்வு?
எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி
குழியில் விழும் மனிதர்களுக்கு
எப்படி வரும் விழிப்புணர்வு?
உண்மையாக வாழ்வில் உயர வழி
காட்டுபவர்களின் அறிவுரையை நம்பாது
போலிகளின் பின்னால் சென்று
அழிந்து போகும் அறிவற்றவர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
தன்னைக் காப்பற்றுபவனுக்கும்
தன்னைக் கொன்று தின்னும் கசப்பு கடைக்காரனுக்கும்
வேறுபாடு அறியாது மாண்டு போகும்
ஆட்டு மந்தைகள் போன்ற மக்களுக்கு
எப்படி வரும்விழிப்புணர்வு?
இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்தி
வாழ்வதை ஒதுக்கித் தள்ளிவிட்டு
வெறும் மூட நம்பிக்கையையே ஆதாரமாக கொண்டு
ஒவ்வொரு கணமும் அல்லல்படும்
மூடர்களுக்கு எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் என்ற சிவ வாக்கியரின்
போதனையின் உட்பொருளை
உள்ளபடி உணராமல்
உலகெங்கும் சென்று எல்லாவற்றிலும்
கடவுளை தேடும் மூடர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
சாத்திரங்களின் உட்பொருளை உணர்ந்து
அதில் காட்டியுள்ள வழிமுறைகளைப்
பின்பற்றாமல் கிளிப்பிள்ளைகள் போல்
தினம் தினம் அனுதினமும் ஓதி
ஒரே இடத்தில செக்கு மாடுகள் போல்
உழன்று கொண்டிருப்பவர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
வராது வராது
படங்கள்-நன்றி-கூகிள்
கவர்ச்சிக்கு அடிமையாகி நடிகர்கள்,
நடிகைகளையே அல்லும் பகலும் கண்டு
அவர்களின் நினைவிலேயே மூழ்கி
கிடப்பவர்களுக்கு ஏது விழிப்புணர்வு?
உண்மையை புரிந்து
கொள்ள முயற்சி செய்யாது
தூண்டி விடுபவர்களின் நோக்கத்தை அறியாது
உணர்சிகளுக்கு அடிமையாகி அவர்களின் பின்னே செல்லும் கோடிக்கணக்கான மக்களுக்கு எப்படி வரும் விழிப்புணர்வு?
குடி, போதையில் ஆழ்ந்து எப்போதும்
மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் குடி மன்னர்களுக்கு
எப்படி வரும் விழிப்புணர்வு?
விளம்பரப் பொய்களில் மனதை பறிகொடுத்து
எல்லாவற்றையுமிழந்துகொண்டிருக்கும்
மக்களுக்கு எப்படி வரும்விழிப்புணர்வு?
நாவின் சுவைக்கு அடிமையாகி
உயிரையே இழக்கும் மீனைப் போல
பேராசைக்காரர்களின் மாய்மால பேச்சை நம்பி
இருப்பதையெல்லாம் இழக்கும் மூட
ஜனங்களுக்கு எப்படி வரும் விழிப்புணர்வு?
எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி
குழியில் விழும் மனிதர்களுக்கு
எப்படி வரும் விழிப்புணர்வு?
உண்மையாக வாழ்வில் உயர வழி
காட்டுபவர்களின் அறிவுரையை நம்பாது
போலிகளின் பின்னால் சென்று
அழிந்து போகும் அறிவற்றவர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
தன்னைக் காப்பற்றுபவனுக்கும்
தன்னைக் கொன்று தின்னும் கசப்பு கடைக்காரனுக்கும்
வேறுபாடு அறியாது மாண்டு போகும்
ஆட்டு மந்தைகள் போன்ற மக்களுக்கு
எப்படி வரும்விழிப்புணர்வு?
இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்தி
வாழ்வதை ஒதுக்கித் தள்ளிவிட்டு
வெறும் மூட நம்பிக்கையையே ஆதாரமாக கொண்டு
ஒவ்வொரு கணமும் அல்லல்படும்
மூடர்களுக்கு எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் என்ற சிவ வாக்கியரின்
போதனையின் உட்பொருளை
உள்ளபடி உணராமல்
உலகெங்கும் சென்று எல்லாவற்றிலும்
கடவுளை தேடும் மூடர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
சாத்திரங்களின் உட்பொருளை உணர்ந்து
அதில் காட்டியுள்ள வழிமுறைகளைப்
பின்பற்றாமல் கிளிப்பிள்ளைகள் போல்
தினம் தினம் அனுதினமும் ஓதி
ஒரே இடத்தில செக்கு மாடுகள் போல்
உழன்று கொண்டிருப்பவர்களுக்கு
எங்கிருந்து வரும் விழிப்புணர்வு?
வராது வராது
படங்கள்-நன்றி-கூகிள்
இவ்வாறு ஒவ்வொன்றிலும் மயங்கி மூழ்கி இருந்தால், எப்படி வரும் விழிப்புணர்வு...?
பதிலளிநீக்குஎப்படி வரும் ?
நீக்குவரும்
வராது
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே....
பதிலளிநீக்கு:)))