திங்கள், 30 டிசம்பர், 2013

புத்தாண்டு சிந்தனைகள்

புத்தாண்டு சிந்தனைகள் 





















திருவேங்கடவனின் அருளோடு 
2014 ஆம் ஆண்டே வருக 

மனிதர்களை ஆட்டிப் படைக்கும்
காமமும் கோபமும்
இந்த உலகை விட்டு ஓடட்டும்

மனிதர்களின் சுயனலதிர்க்காக
மரங்களை அழிக்கும்
மட்ட புத்தி ஒழியட்டும்

கண்ட கண்ட இடங்களில்
விலங்குகள் போல்
மல ஜலம் கழித்து
 சுற்றுப்புறத்தை
நோய்கிடங்குகளாக
மாற்றும் அவலம் நிற்கட்டும்.

குப்பைகளையும் கழிவுகளையும்
ஜீவாதார நதிகளில் கொட்டி
தன்னை தானே அழித்துகொள்ளும்
தவற்றை இந்த மனிதகுலம்
நிறுத்தட்டும்

ஆதிக்க வெறி பிடித்து மக்களை
போருக்குத் தூண்டி
கணக்கின்றி உயிர்களைப்
பலி வாங்கி இப்புவியை
புதை குழிகளாக்கும்
வெறியர்கள் திருந்தட்டும்.

எம்மதமும் சம்மதம்  என்று வாயளவில்
கூறிவிட்டு மதவெறி பிடித்து மக்களை
அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும்
சமயவாதிகள் திருந்தட்டும்.

நீரையும், நிலத்தையும், காற்றையும்
நஞ்சாக்கும் பிளாஸ்டிக்கும்
நஞ்சை நிலத்தில்  விடும்
தொழில்களும்  நசித்து போகட்டும்

எளியோரை சுரண்டி கொழுக்கும்
முதலாளிகளும் அரசியல் அட்டைகளும்
மனம் திருந்தி எல்லோரும் 
எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ
உதவும் எண்ணம்
அவர்கள் மனதில்
துளிர்க்கட்டும். 

3 கருத்துகள்:

  1. தங்கள் கோரிக்கைகள்,அபிலாசைகள் அனைத்தயும்
    திருத்தம் இல்லாமல் இறைவன் ஏற்று கொள்வான்

    பதிலளிநீக்கு
  2. சரியான... மிகச்சரியான கோரிக்கைகள்... நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்... நன்றி...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு