வெள்ளி, 24 ஜனவரி, 2014

அமைதி எங்கே இருக்கிறது?

அமைதி எங்கே இருக்கிறது?

இன்று நாகரீகம்
எவ்வளவோ முன்னேறிவிட்டது

படித்தவர்களை விட பாமரன்
நிறைய தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறான்.
பாமரன் கடுமையாக் உழைக்கிறான்.குறைவாக சம்பாதிக்கிறான் மனம் நிறைவாக இருக்கிறான்.  அயர்ந்து உறங்குகிறான்.

படித்தவன் இரவில் வீட்டிற்குள் புகுந்துகொண்டு
தொலை காட்சி  அல்லது கணினிக்குள் மூழ்கிவிடுகிறான்.

அது காட்டும் கற்பனை
உலகத்தில் சஞ்சரிக்கின்றான்.கை நிறைய சம்பாதித்தும் மனம் நிறைவதில்லை.

பொழுது விடிந்ததும் அலுவலகத்திற்குள்
போய் அடங்கி விடுகிறான்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது,
தன் வீட்டில் என்ன நடக்கிறது என்று கூட
அறிந்துகொள்ள அவன் ஆர்வம் காட்டுவதில்லை.

அதனால் பல
சிக்கல்களுக்கு ஆளாகிறான்.

குழந்தைகளை
பெற்றுக்கொள்வதோடு சரி
அவர்களை அன்பு பாராட்டி வளர்ப்பதில்லை
அவர்களோடு பேசுவதில்லை.
அவர்களோடு நேரம் செலவிடுவதில்லை.

எப்போதும் காசு காசு
அதே சிந்தனைதான்

இல்லாவிடில் மற்றவர்களோடு கைபேசியில்   பேசு
இதுதான்   இன்றைய மேல்தட்டு மக்களின் தாரக மந்திரம்.

மக்களோடு,
உறவுகளோடு பழகுவதே கிடையாது

கடன் வாங்கியாவது ஏதாவது வனாந்திரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இடம் வாங்கி அதில் மனைவி மற்றும் இருவரும் சேர்ந்து போட்ட குட்டியுடன் அடைக்கலம் ஆகிவிட வேண்டும். பிறகு வாழ்நாள் முழுவது கடனை கட்ட வேண்டும்.

எதெல்லாம் கடனில் கிடைக்கிறதோ
அது தேவைப்படுவதோ இல்லையோ
வாங்கி வீட்டில் நிறைக்க வேண்டும்.

பணத்தை சேமிக்காமல்
வாரி வாரி இறைக்க வேண்டும்.

இறைக்க இறைக்க மூச்சு வாங்கி தொலை தூரத்தில் கட்டப்பட்ட வீட்டிலிருந்து அலுவலகம் ஓடவேண்டும்.திரும்ப வெகு நேரம் கழித்து வீடு திரும்ப வேண்டும் .உழைத்த களைப்போடு ஊர் சுற்றிய களைப்பும் சேர்ந்து கொள்கிறது

 40 வயதிற்குள் தலை நரைத்து மீசை நரைத்து,
 நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மன சோர்வு, உடல் சோர்வு
என சம்பாதித்த காசை மருத்துவர்களுக்கும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மருந்து கடைகளுக்கும் இருவருமாக
சேர்ந்து அழவேண்டும்.

கடன் அதிகமாகிவிட்டால்
எல்லாவற்றையும் போட்டது போட்டபடி
விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு  காசு சம்பாரிக்க
சென்று விட வேண்டும்.

என்ன வாழ்க்கை ?
இவர்கள் வாழுவது.
சிக்கனம் கிடையாது.
ஆனால் கருமித்தனமும் ஊதாரித்தனமும் உண்டு.

எவ்வளவுசம்பாதித்தாலும்  திருப்தி கிடையாது.
மனதில் மகிழ்ச்சி கிடையாது. எப்போதும் சிக்கல்தான்.

 சிக்கலை போக்கிக்கொள்ளும் வழியறியாமல்
 மாத்திரைகளை விழுங்குவது, குடிப்பது.
கேளிக்கைகளில் ஈடுபடுவது

எல்லோரும் இந்த உலகில் வசிக்க
(Piece of Land ) ஒரு நிலம் வாங்க
பெரும் முயற்சி எடுக்கிறார்கள்

ஆனால்  அதில்  ஒரு  சிறிது  கூட
மனதில் அமைதியுடன் மகிழ்ச்சியாக (Peace of mind)
வாழும்வழியைத்  தேட முயற்சி
செய்வது கிடையாது என்பதே உண்மை  .


அதை வெளியே தேட முயற்சிக்கிறார்கள்.
ஆனால் அது அவர்கள் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கிறது
என்பதை யாரும் உணர  வில்லை

2 கருத்துகள்:

  1. படிக்கும்போது இதமாக இருக்கிறது. தெரிந்த விவரங்களாக இருக்கலாம். ஆனால் தேவைப்படும் சமயத்தில் நமக்கு அந்த விவரங்கள் நினைவுக்கு வராது. இது மாதிரி படிக்கும்போது 'ஆமாம்ல' என்று தோன்றுகிறது. :)))


    பதிலளிநீக்கு