ஞாயிறு, 26 ஜனவரி, 2014

தமிழனே ! தமிழனாக பிறந்தும் தமிழ் மொழியைபேச மறுக்கிறாய் தமிழின் சிறப்பையாவது அறிந்துகொள்

தமிழனே !
தமிழனாக பிறந்தும் 
தமிழ் மொழியைபேச மறுக்கிறாய்  
தமிழின் சிறப்பையாவது அறிந்துகொள் 

என்றும் நிலைத்து வாழும்
தமிழ் மொழியின் சிறப்பை 
அறிந்துகொள்ளுவோம் 


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவது எங்கும் காணோம் ! (பாரதி )

காற்றுக்கு பெயர்!!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! 
இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள் 
புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை ! 

நன்றி :பஞ்சநாதன் கைலாசம் pnathan123@gmail.com

3 கருத்துகள்:

  1. சேமித்துக் கொண்டேன் ஐயா... நன்றி...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிகாரர்களையும் பிச்சைக்காரர்களையும்
      உண்டாக்கி பொது சொத்துக்களைக் கொள்ளைடிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து நாடு என்று விடுதலை பெறுகிறதோ அன்றுதான் உண்மையான குடியரசு தினம்

      நீக்கு
  2. இந்த விவரம் நான் இன்றுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு