செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மே தின சிந்தனைகள்


மே தின சிந்தனைகள் 



மே தின வாழ்த்துக்கள் 
நல்ல நிலையில் உள்ள 
அமைப்பு சார்ந்த தொழிலளர்களுக்கு. 

ஆனால் பண முதலைகளால் 
சுரண்டப்பட்டு சாலையின் ஓரங்களிலும், 
சாக்கடையாக மாறிவிட்ட நதிகளின் கரைகளிலும் 
தங்கள் வாழ்வை தொலைக்கின்ற 
கோடிக்கணக்கான அமைப்பு சாரா 
தொழிலாளர்களை  வாழ்த்துவார் யார்?

அவர்கள் வாழ்வு வளம் 
பெற வழி காணுவார் யார்?

அவர்களுக்கு கிடைக்கவேண்டிய 
அடிப்படை கூலியை கிடைக்க 
வழி செய்வார் யார்?

தாய் மண்ணை விட்டுவிட்டு  
பிழைக்கும் வழி தேடி பிற மாநிலங்களுக்கு 
வந்தவர்கள் படும் பாட்டை நீக்க 
வழி தேடுவார் யார்?

கல்வி கற்கும் வயதினிலே 
குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய 
குழந்தை தொழிலாளார்களின் 
நலனை கவனிப்பார் யார்?





சட்டங்கள் பல உண்டு

போராட கட்சிகள் 
பல உண்டு இந்நாட்டில்

ஆனால் இந்த கேள்விகளுக்கு
 பதில் இல்லை
தீர்வும் இல்லை

தொடரும் இந்த அவலம் 
ஆண்டாண்டு காலமாக 

இவர்கள் என்று 
வளம் பெறுகிறார்களோ
தங்கள் அடிப்படை 
உரிமைகளை பெறுகிறார்களோ 
அதுவரை கொண்டாடப்படும் 
 மே தின கொண்டாட்டங்கள் 
முழுமை பெறாது. 

அவர்களுக்கும் நன்மை 
விளைய அனைவரும்
 பாடுபடுவோம்.



திங்கள், 29 ஏப்ரல், 2013

திருக்குறள் விளக்கம் என் பார்வையில்


திருக்குறள் விளக்கம் 
என் பார்வையில் 

குறள் 35: 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.
மு.வ உரை:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்



தற்காலத்தில் எல்லோரும் அறத்திற்கு 
புறம்பான செயல்களை ஒரு பக்கம் செய்துகொண்டு 
விளம்பரத்திற்காக அற  செயல்களையும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் விளம்பரமில்லாமல் 
அற செயல்களை செய்து கொண்டு வருகிறார்கள்.

பலர் பலரறறிய அற செயல்களை செய்வதுடன் 
அதன் மூலமாக பல ஆதாயங்களை 
தேடிக்கொள்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். 

அவர் செய்யும் அற செயல்களுக்காக 
ஆகும் செலவை விட அதை விளம்பர படுத்துவதற்காக 
ஆகும் செலவு பன்மடங்காக இருக்கும். 

சிலர் தன் எதிரி அறத்திர்க்காக செலவு செய்தால் 
அவர் மீது பொறாமை கொண்டு ,
அவர்மீது கோபம் கொண்டு, அவரை விட 
அதிகமாக செலவு செய்து  
சுய லாபத்திற்காக செய்வது 
இந்நாளில் அதிகம்

சிலர் சில குறிப்பிட்ட நபர்களுக்கு
 மட்டும் தான் உதவுவர். மற்றவர்கள் 
வந்தால் கோபம் கொண்டு கடும் சொற்கள் 
பேசி விரட்டியடிப்பார்.


இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமலும்,
 உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு 
அன்புடனும் பரிவுடன்,பாசத்துடன், 
பலன்மீது ஆசை இல்லாதிருத்தல் ,
அதன் பயனை  எதிர்பாராமல் உதவுவதுதான் அறம் 
எனப்படும் என்றும் திருவள்ளுவர் 
இந்த குறளில் வலியுறுத்துகிறார். 


சீரடி சாயீனாதன் பிச்சை கேட்டு 
வருபவர் யாரையும் கடும் சொல் 
பேசி விரட்டாதீர் என்றும் 
விருப்பமிருந்தால் பிச்சையிடுவீர். 

ஏனென்றால் உனக்கு அந்த நிலை
வந்தாலும் வரலாம் என்று எச்சரிக்கின்றார்.

சில நேரங்களில் நானே உன்வீட்டின்
 கதவை தட்டுவேன்
 உன் வினைகளை போக்க  என்கிறார்

யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் 
அந்த வடிவத்திற்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறார் 
என்பதை நாம் எப்போதும் நினைவில் கொளவேண்டும். 



என்றுதான் திருந்துமோ?


என்றுதான் திருந்துமோ?


தவறுகள் செய்வதற்கு
அஞ்சுவதில்லை
இந்த மானிடர் கூட்டம்

ஆனால்  அதன்விளைவுகளுக்கு
மட்டும் அஞ்சி நடுங்குது
இந்த அற்பக்கூட்டம்.

மனதிலும் மண்டிக்கிடக்குது கழிவுகள்
அகற்ற யாரும் முன்வருவதில்லை

தவற்றினை அனைவரும்
கூட்டு சேர்ந்து செய்கின்றார்

ஆனால் தன் குற்றத்தை மறந்து
பிறர்மீது  குற்றம் சுமத்துகின்றார்

புறவுலகிலும் கண்டவிடமெல்லாம்
கொட்டி மகிழ்கிறார்
குப்பைகளையும்கழிவுகளையும்



















திசுக்களை குதறி குருதி குடிக்கும்
கொசுக்களுக்கு சாக்கடை
பண்ணைகளை அமைத்து தருகின்றார்
இலவசமாக

அவைகளை அழிக்க மாதம்தோறும்
காசை தொலைக்கிறார்கள்
ஆயிர ஆயிரமாக

கொசுகடியால் வரும்
நோய்கள் கோடிகோடி
நோய் தீர்க்க மக்கள் கூட்டம் ஓடுது
மருத்துவரை நாடி நாடி

துன்பத்திற்கு வித்திட்டு
உழைத்த காசையெல்லாம்
ஊதாரிதனமாய் செலவிட்டு
கடன் தொல்லையில்சிக்கி மாயுது
அறிவிலா மக்கள் கூட்டம்.

என்றுதான் திருந்துமோ
செய்யும் தவற்றிற்கு வருந்துமோ
இந்த மூடர் கூட்டம்.





ஆத்திரம் அழிவுக்கு வழி வகுக்கும்


ஆத்திரம் அழிவுக்கு 
வழி வகுக்கும்

























எத்தனை சாத்திரங்கள் படித்தாலும்
ஆத்திரத்தை அட்க்காவிடில் 
அழிவுக்குத்தான் செல்லவேண்டும்

இன்று உலகில் நடக்கும் பல 
கொடுமைகளுக்கும்,தீமைகளுக்கும்,
இழப்புகளுக்கும். 
ஆத்திர குணம்தான் காரணம்

ஆத்திரகுணம் எதிராளிகளை 
மட்டும் அழிப்பதில்லை 
அந்த குணத்தை கொண்டவரையும் 
சேர்த்து அழித்துவிடும் தன்மை கொண்டது.

ஆத்திரத்தினால் அறிவிழந்து 
கண்ணிமைக்கும் நேரத்தில் 
கொடிய செயல்களை செய்துவிட்டு 
ஆயுள் முழுவதும் துன்பத்திலும், 
துயரிலும் வாழம் மனிதர்கள் கோடி கோடி 

பொறுமை கடலினும் பெரிது. 

வீரம் என்பது விவேகத்துடன்  
கூடி செயல்படும்போது 
நன்மையை தரும். 

விவேகமற்ற வீரமே ஆத்திரம் 
என்னும் கொடுநோய். 

எனவே பொறுமையை கைகொண்டு ,
விவேகத்துடன் எந்த பிரச்சினையையும் 
கையாண்டால் துன்பம் விளையாது. 

சனி, 27 ஏப்ரல், 2013

வாலி புராணம்


வாலி புராணம்



தன்னை எதிர்ப்போரின் பலத்தில்
பாதியை உறிஞ்சிவிடுவான் 
ராமாயணகால வாலி


தன் கவிதைகளினால் 
அனைவரையும் மிஞ்சிவிடுவான் 
இந்த கலி கால வாலி

முதுமையினால் உடல் தளர்ந்தாலும்
கவிதை உவமையினால் என்றும்
இளமை காப்பான் இந்த வாலி 

அவனுக்கு நிகர் அவனே 
சிந்தையில் நின்றாடும் 
சிந்திக்க வைக்கும் பாடல் 
வரிகளையும்  தருவான் 
சித்தமிழந்து கூத்தாடவைக்கும்
சிங்கார ரசம் சொட்டும் 
ஆடல் வரிகளையும் அள்ளி தெளிப்பான் 


மாலவன் புகழுரைக்கும் 
பாட்டுகள் எழுதுவான் ஒருபக்கம் 

மசாலா படங்களுக்கும் 
பாட்டெழுதுவான் 
மறுபக்கம். 

அன்றும் இன்றும் என்றும் 
இருப்பான் வாலி இசையிலும்
ஓசையிலும் காற்றில் கலந்து 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தமிழ் தாயே நீ வாழ்க


தமிழ் தாயே நீ வாழ்க 





தமிழை வளர்க்க முயன்றவர்கள் 
அன்று பல கோடி 

பல தியாகங்களை செய்தார்கள் 
தமிழை நாடி

அவர்களை நெஞ்சில் வைத்து 
போற்றுவோம் 

இன்றோ தமிழை வைத்து 
வயிறு வளர்க்கின்றார் 
பலர் 

தமிழ் மொழியின் சுவையை 
அறிந்தோரே அறிஞர்கள்

மற்றவர்கள் எல்லாம் வெறும்
உரைஞர்கள் 

தமிழுக்கு 
பெருமை சேர்த்தவர்கள்
எவ்வினத்தாயினரும் 
அவர்கள் தமிழர்களே

தமிழரில் சாதிகள் பலஉண்டு
விதவிதமாய் மணம் வீசும் 
பலவிதமான மலர்களைப்போல 

அவையனைத்தும் மாலையாய் 
தொடுக்கப்பட்டு தமிழ் தாயை 
அலங்கரிக்கப்படும் நாள்
என்று வருமோ நானறியேன்?

சாதிகள் இருப்பதில் தவறில்லை
சாத்திரங்கள் இருப்பதில் தவறில்லை
ஆனால் மக்கள் மனதில் சாதிகளை பற்றிய
பீதிகள் தேவைதானா ?

அவரவர் அவரவர் வந்த வழி 
பற்றி நடக்கின்றார்
இதில் உயர்வு தாழ்வு 
கருதல் வீணென்று இந்த உலகம்
உணரும் காலம் எப்போது வரும்? 

சைவமோ ,வைணவமோ எந்த 
சமயமாயினும் ஆன்மீகம்தான் தமிழை
காலத்தால்அழியாமல் காப்பாற்றி 
வைத்துள்ளது என்பதை மறவாதீர். 

தமிழ்உயர்வு பெற பாடுபட்டவர்களின்
வரலாறுகளை அறிந்து கொள்வீர் 

காலத்தால் மக்கள் மனதிடையே 
புகுந்துகொண்ட அவநம்பிக்கைககளை 
களைகலென களைவீர் 
தன்னிகரற்று வாழ்வீர்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

சிந்தனைக்கு சில கேள்விகள்?


சிந்தனைக்கு சில கேள்விகள்?

கேள்வி-எனக்கு  இந்த உலக வாழ்க்கையில்
நடக்கும் பல சம்பவங்கள் என்னை சோர்வடைய செய்கின்றன.
அவைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை ,
அவைகளோடு அனுசரித்து போகவும் முடியவில்லை..
அவைகளிலிருந்து பாதிக்கப்படாமல் தப்பித்து
போகவும் வழி தெரியவில்லை.

பதில்;இறைவன் அனைத்து சூழ்நிலைகளையும்
நாம் அனுபவித்து நம்மை பக்குவப்படுதுவதர்க்காகதான்
இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பி வைத்துள்ளான்.

அதனால்தான் இந்த சம்பவங்கள்
நம் வாழ்வில் நிகழ்கின்றன.அல்லது
பிறருக்கு நிகழும் அந்த சம்பவங்கள்
நம்மை பாதிக்கின்றன.
சம்பவங்களிலிருந்து நாம் பாடம்
கற்றுக்கொண்டால்தான் மீண்டும்
அதுபோன்ற சம்பவங்கள்
நம் வாழ்வில் நிகழாமல் இருக்கும்.
இல்லாவிடில் தொடர்ந்து துன்பங்களை
அனுபவிக்கத்தான் வேண்டும்.

கேள்வி:எல்லாவற்றையும்
அதனதன் போக்கில்
 ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
ஒன்றும் செய்யமுடியவில்லை.

பதில்: சிலவற்றை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எல்லாவற்றிற்கும்
நாம் பரிகாரம் தேட முடியாது .
வேறுவழியில்லை.

எதிர்த்தால் இந்த உலகால்.
ஓரங்கட்டப்பட்டுவிடுவோம்.

அனுசரித்து போனால்
அதனோடு இணைந்து ஒன்றுக்கும்
உதவாமல்போவோம்..

அதனால் தாமரை  இலைதண்ணீர்
 போல்தான் இருக்கவேண்டும்.

யாரிடமும் நன்றியோ
பாராட்டுதல்களோ எதிர்பார்க்கக்கூடாது.
ஆனால் நாம் மற்றவர்களுக்கு
ஒரு சிறிய உதவியானாலும்
நன்றி சொல்ல மறக்கக்கூடாது

நம்மால் முடிந்த வேலைகள்
செய்துகொண்டு,பிறருக்கு பாரமில்லாமல்
எதன் மீதும் பற்றுவைக்காமல்
எல்லாம் இறைவன் செயல்
என்று இருந்தால் பிழைத்தோம்.
இந்த உலகம் நம்மை துன்புறுத்தாது.

கேள்வி:சரீரத்தில் பலவிதமான
சிரமங்களும் உள்ளன. எங்கும் எதிலும்
ஓர் விரக்தி நிலைமை. உதறிவிட்டு
எங்கும் ஓடிவிடவும் முடியாது,

பதில்:யாருக்குதான்
சரீர உபாதைகள் இல்லை.
இந்த உலகத்தில்நோயில்லாத மனிதர்கள்
யாருமில்லைஉடலில் நோயில்லாவிட்டலும்
உள்ளத்தில் நோயுள்ளவர்கள் ஏராளம்.
அவைகளை பற்றியே எப்போதும்
நினைத்து கொண்டிருக்காமால்
நம் கடமைகளிலும் மற்ற
ஆக்கபூர்வமான செயல்களிலும்
நம்மை ஈடுபடுத்திக்கொண்டால்
அவைகளின் தாக்கம் நாமை பாதிக்காது.

கேள்வி;மனதில் அடிக்கடி
விரக்தி ஏற்ப்படுகிறதே?


பதில்:ஒரு மனிதனுக்கு மனதில்
விரக்தி மட்டும் ஏற்படக்கூடாது
விரக்தி ஏற்பட்டால் அது
எல்லாவற்றையும்  அழித்துவிடும்.

இறைவனால் மனித குலம்
இன்பமாக வாழ படைக்கப்பட்ட
இந்த உலகம்  முழுவதும்
பல அற்ப சுயநல பிண்டங்களினால்
துன்ப மயமாக ஆக்கப்பட்டுவிட்டது.

எனினும் அதையே நினைத்துக்கொண்டிராமல்
இறைவனை நினைத்துக்கொண்டு
அவரவரின் கடமைகளை செய்து கொண்டு
வந்தால் போதும். மற்றதை
இறைவன் பார்த்துக்கொள்வான்.

இந்த நம்பிக்கை இருந்தால் போதும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

திருக்குறள்(25)-என் பார்வையில்


திருக்குறள்(25)-என் பார்வையில் 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

மு.வ உரை:

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.


இந்த குறளுக்கும்
ஆண்டாண்டுகாலமாக மேலே
கூறியுள்ள பொருளைத்தான்
ஆன்றோர்கள்
கூறி வருகின்றனர்.

நமக்கு பல செய்திகளை தருகின்ற
 புராண இதிகாசங்கள் மற்றும்
ஞானிகளின் நூல்கள் பலமுறை
பல உண்மைகளை
வெளிப்படுத்தி இருக்கின்றன.

அதை வைத்துப்பார்க்கும்போது
மேற்கண்ட விளக்கம் சரியானதல்ல
என்று தோன்றுகின்றது.

பொதுவாக 5
என்றால் நீர்,நிலம், காற்று,நெருப்பு,
ஆகாயம்(வெட்டவெளி)
என்று அனைவருக்கும் தெரியும்.

இந்த அயிந்தும்
பரம்பொருளின் விரிவுகள்.

அவைகள் வெவ்வேறு
கால நிலைகளில்
வெவ்வேறு கணக்கில் இணைந்து
இறைவனின் ஆணைப்படி
இந்த உலகை ஆக்கியும்
அழித்தும் வருகின்றன.

 அந்த பஞ்சபூதங்களின்
ஒட்டுமொத்த உருவமாக சிவபெருமான் திகழ்கின்றார்.
அதுவே பஞ்சாஷர
மந்திரமாக விளங்குகிறது.

இந்த பஞ்ச பூதங்களும்
இணைந்து நம் உடலை உருவாக்கி
 பத்து இந்திரியங்களாக(புலன்களாக)
செயல்படுகின்றன.

அவைகளை யாரும் அழிக்கமுடியாது.

அவைகளை அப்படியே விட்டுவிட்டால்
கட்டுப்பாடில்லா   குதிரைகள் போல்
 கண்டவாறு ஓடி நம் உடல்
என்னும் ரதத்தை
கீழே தள்ளி அழித்துவிடும்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
அந்த உயிராராகிய நாமும்
அழிந்துபோவோம்

ஆனால் புலன்களை
நாம் நெறிப்படுத்தினால் அவைகள்
நமக்கு நம்மை உணர துணை
செய்யும்.

 உணவை சமைக்காமல் உண்டால்
அது நமக்கு துன்பம் செய்யும்.

அதையே பதமாக அவித்து உண்டால்
நமக்குநன்மை செய்வதுபோல 5 புலன்களையும்
நெறிப்படுத்தினால் அது நம்மை வாழ்விக்கும்.

அதைதான் வள்ளுவரும் புலன்களால்
வரும் ஆசைகளை அழிக்கமுடியாது.
அதை உணவு அவித்து உண்பதுபோல்
 நெறிப்படுத்தினால் அது நமக்கு
 நன்மைகளை தரும்.என்று கூறியுள்ளார்.

ஏனென்றால் ஆசைகளை
அழிக்கமுடியாது.
மனதில் எழும் ஆசைகளை
 நல்ல வழியில் ஈடுபடுத்தவேண்டும்.
 என்பதே இந்த குறளின் கருத்தாகும்.

உதாரணத்திற்க்காக
ஒரு பெண்ணின் மீது ஏற்படும்
கட்டுக்கடங்காத காமத்தை
அன்னை பாராசக்தியிடம்
திருப்பிவிட்டால்
அடங்கா மனமும் அடங்கும்.
ஆன்மீக விழிப்பும் ஏற்ப்படும்.

இன்னும் வரும் .

புதன், 10 ஏப்ரல், 2013

திருக்குறள் விளக்கம்-என் பார்வையில்



திருக்குறள் விளக்கம்-என் பார்வையில் 


குறள் 22: 

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

மு.வ உரை:

பற்றுக்களைத் துறந்தவர்களின் 
பெருமையை அளந்து கூறுதல், 
உலகத்தில் இதுவரை பிறந்து 
இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

என் பார்வையில்:

மேலே கண்ட குறளுக்கு 
தரப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல 
என தோன்றுகிறது . 

ஏனென்றால் துறந்தவர்களின் 
பெருமை தனை என்று கூறியிருந்தால்
மேற்கண்ட பொருள் சரியாக இருக்கும்.
ஆனால் துணை என்று கூறப்பட்டிருப்பதால் 
அந்த விளக்கம் சரியல்ல.

துறந்தவர்களின் பெருமைகளை பற்றி 
வீணாக பேசிக்கொண்டிருப்பது எப்படி
என்றால் இந்த உலகத்தில் வாழ்ந்து 
மடிந்து போனவர்களை பற்றி 
கணக்கெடுத்துக்கொண்டு 
ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன்?

அது வீண் வேலை என்று 
திருவள்ளுவர் சொல்ல விழைகிறார். 

கடந்த அதாவது இறந்த காலத்தில் 
வாழ்க்கையை வீணடிக்காதே,
நிகழ் காலத்தில் வாழ தொடங்கு என்கிறார். 

அவ்வாறு செய்யாமல் இருப்பது 
அரிதாய் கிடைத்த மனித பிறவியை
வீணடிப்பது ஆகும் என்று பொருள்.

கிடைத்தற்க்கரிய 
இந்த மனித பிறவியை
இறைவனை அறிந்துகொண்டு 
அவனை அடைவதற்கு 
பயன்படுத்தவேண்டுமே அல்லாது 
இதை போன்ற வீண் செயல்களில் 
ஈடுபடக்கூடாது என்பதே
இந்த குறளின் 
பொருளாக இருக்க முடியும்.

JamesAlen-என்ற அறிஞன் சொன்னான் 
It is a new life everyday 

அதைதான் பாரதி சொன்னான்
இன்று புதிதாய் பிறந்தோம் 
என்று அழகு தமிழில்.

Pl. remember.
yesterday is a dead-Horse -you can't ride on it. 

கொஞ்சம் சிரியுங்கள்


கொஞ்சம் சிரியுங்கள்
























இந்த சிலைகள் கம்போடியாவில் 
உள்ள ஒரு கோயிலில் உள்ளது

இரண்டு இசைக்கலைஞர்கள் 
மெய் மறந்து இசைக்கருவிகளை 
இசைப்பது எப்படி இருக்கிறது
பாருங்கள். 

இரண்டு கலைஞர்களின் முக பாவங்களை 
சிற்பி எப்படி செதுக்கியிருக்கிறார் 
என்பது கவனிக்கத்தக்கது. 

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-4)




21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-4)


21ஆம் நூற்றாண்டின் 
தமிழனின் நிலை(பகுதி-4)





நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந்த நிலை கெட்ட மாந்தரை 
நினைத்துவிட்டால் என்றான் பாரதி. 


















PencilDrawing by me

அதுமட்டுமல்ல எல்லாவற்றையும் 
மறக்க மதுவை குடித்து மயக்கத்தில்
கிடக்கிறது இந்த மக்கள் கூட்டம். 

சினிமா,தொலைகாட்சி,அரசியல் ,
ஜாதிபித்து,சுயநலம்,போலி ஆன்மிகம்,
ஒழுக்கமின்மை, காமம் என்னும் 
போதை குழியில் விழுந்து 
அதுவே சுகம் என்று கனவு காண்கிறது 
படித்தமற்றும் பாமரகூட்டம். 

படித்தவனோ கற்பது காசுக்காகவும்
,பட்டிமன்றத்தில் பேசி கைதட்டல் 
வாங்குவதற்காகதான் 
என்று நினைக்கிறான்.

படிக்காதவனோ வாழ்வில் 
இலக்கில்லாமலே
உழைத்து சாகிறான்.

ஏமாறுபவர்களின் கூட்டமும் 
மற்றவர்களை ஏமாற்றி வயிறு 
வளர்க்கும் கூட்டமும் பெருகிவிட்டன 

கடவுளைகாணாதவன்  
கடவுளைக்கண்டேன் என்று 
பொய்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டு
 ஏமாளிகளை பேய்கள் போல் 
சாமியாட்டம் ஆட விட்டுஅவர்கள் மடியில் 
உள்ள காசை பறித்து கொண்டு 
அரச போக வாழ்க்கை வாழுகிறான்

நாகரீக வழிப்பறி கொள்ளையர்கள் இவர்கள்.
இவர்களை சட்டமும் கண்டுகொள்ளாது. 
ஏனென்றால் இவர்களுக்கு  பாதுகாப்பு தருவதே 
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள்தான்  

பலஆண்டுகள் பாடுபட்டு சேர்த்த லகரங்களை 
முலாம் பூசப்பட்ட சில தகரங்களுக்கு  
ஆசைப்பட்டு முழுவதையும் இழந்து 
பரிதவித்து புலம்பி நடைபிணமாய் திரியும் 
கூட்டம் லட்சக்கணக்கில் பெருகிவிட்டது
தமிழ் நாட்டில். 

மக்களிடையே அன்பில்லை. 
விட்டு கொடுக்கும்
மனப்பான்மை இல்லை. 

பொறாமையும்,
போட்டியும்தான் ஆட்சி செய்கிறது. 
ஆட்சியாளர்களும் அப்படியே.

 அதனால் கொலைகளும்,
 கொள்ளைகளும் பெருகிவிட்டன

நீதிமன்றங்களில் குவிந்துள்ள 
வழக்குகளின் எண்ணிக்கை 
நம் நாட்டு மக்கள் தொகையையே 
மிஞ்சிவிடும் போலிருக்கிறது. 

இறைவன் கொடுத்த அறிவிருக்க 
அதை பயன்படுத்தாது தங்கள் பிரச்சினையை
தீர்க்க மூன்றாவது மனிதரை நாடுவது 
இன்றைய மனிதர்களின் 
அறியாமையின் உச்ச கட்டம். 

இதன் மூலம் அவர்கள் 
இழப்பது சில கோடி
ஆனால் அதை வைத்து பிழைக்கும் 
இடைதரகர்கள் அடிப்பது பல கோடி. 

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந்த நிலை கேட்ட மாந்தரை 
நினைத்துவிட்டால் என்றான் பாரதி. 

வாழ வைக்க வந்தவன் ,
வாழும் வழிகளை கற்பித்தவன்.
மனம் நொந்து ஆனைமுகனிடம் முறையிட்டான்.
வாடா என் மகனே என்று அழைத்துகொண்டுவிட்டான்.
அப்போதே.
இன்னும் வரும்

சனி, 6 ஏப்ரல், 2013

21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-3)


21ஆம் நூற்றாண்டின் 
தமிழனின் நிலை(பகுதி-3)


கட்சி  தொண்டர்கள்  மூலம்  பலகோடி
வசூலித்து  ஏப்பம்  விடும்  கட்சிகள்
ஆட்சிக்கு  வந்தவுடன்  மக்கள்  வரிப்பணத்தில்
சில  ஆயிரம்  பேருக்கு  மட்டும்  இலவசமாக
சிலவற்றை  அளித்துவிட்டு  மக்களை
ஏமாற்றும்  வித்தையை  மக்கள்  புரிந்து
 கொள்ளும்  காலம்  எப்போது  வரும் ?

தமிழனின்  தலைஎழுத்து  தன்னை
ஏதாவதொரு  கட்சிக்கோ  அல்லது
 நடிகருக்கோ  அல்லது  ஒரு  சாமியாருக்கோ
தன்னை   அடிமையாக  வைத்திருப்பதே  பெருமை  என்றும்  
பாதுகாப்பு  என்றும்  கருதி  தன்னை  அடிமையாக்கி
உண்மையை  உணரும்  சக்தியை  அறவே  இழந்துவிட்டதே
அவனின்  இந்த  நிலைக்கு  காரணம்.
இந்நிலை மாறினால்தான்  தமிழன் ,
தமிழ்நாடும்  இரண்டும் முன்னேறும்

ஆத்திகராய்  இருந்த  ஈரோடு  ராமாசமியை
அநீதியை  எதிர்த்து  போராடும்  பெரியாராக  மாற்றி
 நாத்திக  பாதையில்  செலுத்தியது  யார்  தெரியுமா ?
விக்டோரியா  மகாராணியோ  அல்லது
வேல்ஸ்  இளவரசரோ  அல்ல  அன்று
உழைக்கும் மக்களை   ஊருக்கு  வெளியே
ஒதுக்கி  வைத்து  ஊரு  விளைவித்த
ஒரு சில  பிரிவினரே .
.
பெரியார்  சிலை  வைத்தால்
ஏன்  பதறுகிறீர் ?
சிலைகளால் என்ன  செய்ய  முடியும்
நீர் கொண்ட  கொள்கைகளில்
உறுதியாய்  இருந்தால் ?
எனவே  சிந்திப்பீர்  அழிவு  செயல்களில்
ஈடுபடும் எண்ணங்களை  விட்டோழிப்பீர்


பெரியார்  சிலைகளாகட்டும்
பெருமாள்   சிலைகளாகட்டும்  
அவைகள்  ஒன்றும்  செய்வதில்லை

வைத்த  இடத்தில  அப்படியேதான்  இருக்கின்றன .
அதை  வைத்தவர்கள்தான்
ஒருவருக்கொருவர்  அடித்துகொள்கிறார்கள்
அவரவர்களின்  கொள்கைகளை  நாட்டும்  பொருட்டு .

சிலைகள்  சிலையாய்  இருக்கும்போது
தோன்றாத  பிரச்சினைகள்
அதை  உடைக்கும்போதோ  அல்லது
அப்புறப்படுத்தும்போதோ  போதுதான்
தோன்றுகிறதே அது  ஏன் ?

அச்செயல்  மனிதனின்
உணர்வுகளை  பாதிப்பதினால்தான்
நாம்  உணவோடு  விளையாடினால்
உடல்நலம்  பாதித்து உயிர்  போகும் .
அதுபோல்தான்  மக்கள்  உணர்வோடு
 விளையாடினால்  பல  உயிர்கள்  பலியாகும் .

அவரவர்  கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர் .
அமைதி  பூங்காவாக  ஆக்குவீர்  இந்த  உலகை

இன்னும் வரும்

21ஆம் நூற்றாண்டின் தமிழனின் நிலை(பகுதி-2)


21ஆம் நூற்றாண்டின் 
தமிழனின் நிலை(பகுதி-2)


போலிகளைக் கண்டு 
திருவள்ளுவரின்  ஆன்மா 
குமுறிக்கொண்டிருக்கிறது.

குமரிகண்டம் முழுகியது
தமிழன் செய்த அக்கிரமங்களால் .

இந்த காலத்திலும் 
அக்கிரமங்கள் தொடர்கின்றன. 

அதனால்தான் பகுதி பகுதியாக கடல் 
தமிழ்நாட்டை விழுங்கிகொண்டிருக்கிறது.

 யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் 
அந்நாளைய தமிழன். 

உண்மையான தமிழன் என்று 
எவனும் இன்று இல்லை. 
அதனால்தான் இல்லாத 
ஒரு சமூகத்திடம்  ஒற்றுமை இல்லை. 
அதனால்தான் தமிழன் எங்கு 
சிறுமைபடுத்தப்பட்டாலும், 
கொடுமைபடுத்தப்பட்டாலும்
கேட்க நாதியில்லை. 

ஊடகங்களில் போடும் கூச்சல்களால் 
எந்த பயனும் விளைந்ததில்லை என்பதே 
கடந்த கால சம்பவங்களின் கசப்பான உண்மை. 

இன்றைய தமிழனோ 
ஜாதி,மதம் ,கட்சி ,சுயநலம், 
என பலவகைகளில் 
பிளவுபட்டு நிற்கிறான். 

தமிழனுக்கு உணர்ச்சி இருக்கிறதே 
ஒழிய தமிழன் என்ற
உணர்வு இல்லை.

உணர்ச்சிகளை கட்டுபடுத்த 
தெரியாவிடில் அது 
அழிவைத்தான் சந்திக்கும்.

எப்போதும் வீரத்தை 
பற்றி பேசுகிறான். 
விவேகம் இல்லை. 
அதனால்தான் கூண்டோடு
கைலாசம் போகிறான். 

எப்போதும் வீரத்தை
பற்றியே  சிந்திப்பவன்
சோரம்தான் போவான்

இதைக்காட்டும்
வரலாறுகள் ஏராளம்.

பிறருக்கு பாடம் புகட்டுவேன் 
என்கிறான்.
ஆனால் இவன்
எதிலிருந்தும் பாடங்களை 
கற்றுக்கொள்வதேயில்லை

அனுபவங்களிலிருந்து 
பாடங்களை கற்றுக்கொள்ளாதவன்
அறிவிருந்தும்  மூடர்களே 

அதனால்தான் வீடிழந்து.,நாடிழந்து 
நடந்ததையே நினைந்து நினைந்து,
புலம்பி நாடோடிபோல் திரிகிறான். 

பாரதி கூறியது போல்
சொந்த சகோதர்கள் துன்பத்தில் 
சாதல் கண்டும் சிந்தை 
இரங்காத கல்நெஞ்ச கூட்டம் 

தமிழை காக்க வந்த தலைவர்கள் 
தமிழர்கள் மீது காட்டும் பரிவு 
எல்லாம் நடிப்பு 
அவர்கள் தன்னை 
முன்னிலைப்படுத்த 
செய்யும் தந்திரம்.  

பொறியில் வைத்த தின்பண்டத்தை 
நம்பி அதை பிடிக்கப்போய்  சிக்கி அழியும் 
எலிகளைபோல் மற்றவர்கள் விரிக்கும் 
வலையில் கண்ணை மூடிக்கொண்டு 
போய்விழுந்து  சிக்கி மாயும் கூட்டம் தமிழ் கூட்டம். 

இன்னும் வரும்.

21 ஆம் நூற்றாண்டில் தமிழனின் நிலை(பகுதி-10)


21 ஆம் நூற்றாண்டில் 
தமிழனின் நிலை(பகுதி-10)


சிந்தனைக்கு  சில   வரிகள்

வள்ளுவந்தன்னை   உலகினுக்கே  தந்து
வான்புகழ்  கொண்ட  தமிழ்நாடு  என்ற  பாரதி
முழங்கிய  இந்நாட்டில்  அவன்  கருத்துக்களை
கொன்று  அதன்மீது  வானுயர
சிலைகளை  அமைத்துவிட்டனர்
மென்மொழி  பேசும்  வன்மனம்
கொண்ட  ஆட்சியாளர்கள்
இன்று  இங்கு

கள்ளுண்ணாமையும்  புலால்  மறுத்தலையும்
வலியுறுத்திய  வள்ளுவன்  ஏனோ
திருக்குறளை  முடிப்பதற்குள்
அது  எதிர்காலத்தில்  சாத்தியப்படாது
 என்றெண்ணியே  சொல்லுதல் யார்க்கும்
 எளியவாம்  அரிதாம்  சொல்லிய
வண்ணம்  செயல்  என்று  ஒரு
குறளை  சேர்த்துவிட்டான்  போலும்

காலையில்  குடிநீருக்காக குடங்களுடன்
அலையும்  பெண்கள்   மலையில்  உழைத்து
கிடைத்த  காசை  ஆண்கள்  மதுக்கடையில்
தொலைத்துவிட்டு  வீட்டிற்கு  சென்று
பெண்களின்  கண்களில்  கண்ணீரை
வரவழைக்கும்  காட்சி  இதுவே
இன்றைய  ஆட்சியாளர்களின்  மாட்சி

கணவனால் தன்  பூவும்  பொட்டும்  நிலைக்கும்
என்று  நம்பியே  தமிழ்  பெண்கள்  காயும்
வெய்யிலில்  பூ  கட்டி  விற்று  அவனுக்கும்
அவன்  மூலம்  பெற்ற  குழந்தைகளுக்கும்
சோறு  போடும்  பரிதாப நிலை என்ற
பெருமைதனை  படைத்துக்கொண்டிருக்கிறது
இன்றைய  தமிழ்நாடு .

இன்னும் வரும்

புதன், 3 ஏப்ரல், 2013

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-6)(நிறைவு)



கவி சக்கரவர்த்தி 

கம்பன் கண்ட கனவு (பகுதி-6)


கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு (பகுதி6)





மீசைக்கும் ஆசை 
கூழுக்கும் ஆசை 

கம்பன் உருவத்திற்கு மீசை எப்படி வந்தது.?
திரு தி.கே. சி. அவர்களின் மீசையை
 நினைவில் கொண்டு கம்பன் உருவம் மீசையுடன்
 அமைக்கப்பட்டது என்றார் பழனியப்பன்.

கம்பன் விழா

அநேகமாக பெரும்பாலான தமிழறிஞர்கள்
காரைக்குடி கம்பன் விழாவில் பங்கு பெற்று
கம்பனின் காவியத்தினை ஆராய்ந்திருக்கின்றனர்.
 அவர்களில், எ.சி. பால் நாடார்,
முனைவர். எ. எஸ் .ஞானசம்பந்தன்
,ரா.பி. சேதுபிள்ளை ,டாக்டர் பிரான்சிஸ் ஜெயந்தன் ,
சேவியர் தனிநாயக அடிகளார்,
மு.ராகவையங்கார் கமில் வேலேபில்,
நீதிஅரசர் இஸ்மாயில் போன்ற சிலர்.

காலபோக்கில் கம்பனை எதிர்ப்பவர்களும்
விழாவில் பங்கேற்க முற்பட்டனர்.
அவர்களுக்கு இடம் அளிக்கக்கூடாது
என்றபோது திரு கணேசன் அவர்களும்
இடம்பெறவேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தமையால் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் காலபோக்கில் அவர்களும்
கம்பனின் தமிழ் சுவைக்கு அடிமையாகி
அவரை விமரிசிப்பதை கைவிட்டனர்.

இந்த  ஆண்டு கம்பன் விழா தொடங்கி. 
75 வது ஆண்டின் தொடக்கம். 
உலக அளவில் ஒரு மாநாடு நடைபெற உள்ளது.
 அதில் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களிருந்து 
 மருத்துவர்களும் பொறியாளர்களும் கூட
 கலந்துகொண்டு  சிறப்புரையாற்ற உள்ளனர். 

எல்லாவற்றிற்கும் காரணம்
கவி சக்ரவர்த்திகம்பன் தீஞ்சுவை தமிழில்
தந்த கம்ப ராமாயணத்தின் மீது  உள்ள அன்புதான்

இதற்கான வாய்ப்புகளை திறந்துவிட்ட
அமரர் சா. கணேசனின் புகழ் கம்பனின் 
புகழோடு சேர்ந்து தமிழ் மணம் 
இவ்வுலகம் உள்ளவரை வீசும் 
என்பதில் ஐயமில்லை. 

(நிறைவு)



ஆங்கில மூலம் 

The Kamban dream

SUG.ANTHY KRISHNAMACHARI


I am curious about why Kamban is always depicted with a walrus moustache. “The moustache was inspired by TKC’s luxuriant moustache,” laughs Palaniappan.

Almost all Tamil scholars have participated in the Karaikudi Kamban Vizha – A.C. Paul Nadar, Professor A.S. Gnanasambandam, Ra.Pi. Sethupillai, Dr. Francis Jayanandan, who was secretary of the Christian Literature Society, Xavier Tani Nayaka Adigal, Mu.Raghava Iyengar, Kamil Zvelebil and Justice Ismail, to name a few.

On the other hand, people who called themselves atheists would wangle a slot in the proceedings, and then make veiled attacks on Kamban. When it was suggested to Ganesan that he prevent such people from speaking, he would say that no one could be immune to the charms of Kamba Ramayanam for long, and even those who aimed barbs at the work, would soon come round. And sure enough, the same people who had mocked Kamban, would in later years, speak admiringly of the bard.

This year marks the 75th anniversary of the Karaikudi Kamban Kazhagam, and an international conference will be held in Karaikudi. The speakers include medical doctors and professors of engineering, based in London and Paris, all of whom have one thing in common -- love for Kamba Ramayanam. It is not often that one’s dreams result in fruition, and even when they do, few dreams survive beyond one’s lifetime. But the Karaikdui Kamban Kazhagam continues to thrive, and is a tribute to Saw. Ganesan, whose zeal and grit shaped it

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

எந்த நாட்டில் இந்த கோலம்.?


எந்த நாட்டில் இந்த கோலம்.?


படிக்கட்டில் பயணம் செய்ததால்

பரலோகம் சென்றார்கள் சில மாணவாகள்
நம் நாட்டினிலே சமீபத்தில்

பரலோகத்திற்கு செல்ல வழி வகுக்கும்
பயணத்திற்கு தடை விதித்தது ஆளும் அரசு
மீறி சென்றால் அபராதம்.இங்கு

ஆனால் இங்கோ பாரீர்
நாங்கள் படிக்கட்டில் மட்டுமல்ல
பேருந்து மீதும் ,பக்கவாட்டிலும் ,
முன்னும் பின்னும்
பயணம் சாஹாச பயணம் செய்வோம்.
எங்களை கேட்பார் யாருமில்லை.
என்று கொக்கரிக்கிறார்கள்

எந்த நாட்டில் இந்த கோலம்.?
ஒரு அண்டை
நாட்டில் உள்ள நிலைமைதான் இது.

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-5)


கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-5)

கவி சக்கரவர்த்தி 

கம்பன் கண்ட கனவு (பகுதி-5)


கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு (பகுதி-5


தகுதியான மாணாக்கன் 

ஒரு ஆசிரியனின் புகழ்
அவனின் மாணாக்கனால்
 மட்டுமே  பரவும்

பணியிலிருந்து விடை பெற்றுக்கொண்டவுடன்
திரு.பழனியப்பன் காரைக்குடிக்கு திரும்பினார்.

அவருக்கு எப்படி கம்பன் மீது
காதல் பிறந்தது?

அவரே கூறுகிறார் கேளுங்கள்?

பள்ளியில் நான்
ஒரு சிறந்த பேச்சாளன்.
என் தமிழாசிரியர்களோடு கூட
எனக்கு கணிதம் போதித்த திரு. கணபதி ஸ்தபதி
அவர்களின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.

பிற்காலத்தில் திரு கணேசன் என்னை
அவரிடம் அழைத்து சென்று 'கற்பார் ராமபிரானை
அல்லால் மற்றும் கற்பரோ' என்ற கம்பனின்
கம்ப ராமாயணத்தை கற்பித்தார்

மேலும் முர்ரே நிருவனத்தால் பதிப்பிக்கப்பட்ட
கம்ப இராமாயண பிரதி ஒன்றையும்
எனக்கு பரிசாக அளித்தார்.

காலத்தால் அந்த நூலில் புகுத்தப்பட்டுள்ள
சில பகுதிகளை கண்டறிந்து
சீர்படுத்தவும் அவர் உதவி செய்தார்.



காரைக்குடியில் முதன் முதலில் துவங்கப்பட்ட
கம்பன் விழா காலபோக்கில்






எல்லா இடங்களிலும் பரவ தொடங்கியது. .

தமிழ்த்தாய் ஆலயம்

1993 ஆம் ஆண்டு அப்போதய
தமிழக முதல்வர்,கலைஞர்  கருணாநிதி
அவர்களால் தமிழ் தாய் ஆலயம்
திறந்து வைக்கப்பட்டது.

ஆலயத்தின் கருவறையில்




தமிழ்த்தாய் சிலை


தமிழ்த்தாய் சிலையும்,தமிழ் வளர்த்த
அகத்திய பெருமானுக்கும்
தமிழுக்கு இலக்கணம் வகுத்த
தொல்காப்பியருக்கும்
முறையே சிலைகள்
அமைக்கப்பட்டன

ஒலியை குறிக்கும் தெய்வத்திற்கு ஒரு சிலையும்,
வரிகள் அதாவது. எழுத்தை குறிக்கும் தெய்வத்திற்கும்
ஒரு சிலையும்,





 மற்றும், கம்பன்,இளங்கோ
ஆகியோருக்கும் சிலைகள் சிற்ப வல்லுநர்
திரு கணபதி ஸ்தபதி அவர்களின்
மேற்பார்வையில் ஆலயம்
சிறப்பாகநிர்மாணிக்கப்பட்டது.


ஆங்கில மூலம் 

The Kamban dream

SUG.ANTHY KRISHNAMACHARI



Worthy pupil
After his retirement, Palaniappan returned to Karaikudi. How did he get interested in Kamban? “I used to be an orator in school, and apart from my Tamil teachers, one of my earliest inspirations was Ganapathi stapathi, who was my mathematics teacher! Later, Ganesan took me under his wing and taught me Kamba Ramayanam. He presented me with a copy of the Murray’s edition of Kamba Ramayanam, which he had helped edit. Although Karaikudi was the place where Kamban celebrations began, it spread to other places.”

The Tamizh Thai temple was declared open in 1993, by Mu. Karunanidhi. The main shrine is for Tamizh Thai, and on either side, we find Agastyar and Tholkappiyar. Outside the main shrine are icons of Oli Thai (The Goddess of Sound) and Vari Thai (the Goddess of Letters), with separate enclosures for Kamban, Ilango and Valluvar. The temple construction and sculpturing work were by Ganapathy stapathi.

to be continued.