வியாழன், 24 செப்டம்பர், 2015

ஒப்பில்லாத பெருமாள் !


ஒப்பில்லாத பெருமாள் !


Metal foil- engraving- byT.R.Pattabiraman 

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத 
பெருமான் ஒப்பிலியப்ப பெருமான் 

தான் பாற்கடலிலே சயனம் கொண்டிருந்தும் 
உவர் நீரினால் சூழப்பட்ட இவ்வுலகில் 
வாழும் மக்களின் நலனை என்றும் 
மறவாத கருணை உள்ளம் கொண்ட பெருமான் 

உப்பில்லாமல் வீணாகிவிடும் உணவு பண்டம் 
அந்த உப்பே நிலத்தில் வாழும் உயிர்களுக்கு 
அளவை மிஞ்சிடின் அழிவைத் தரும் என்று 
அன்றே உணர்த்தியவன் அமிர்த கலசத்தை 
கையில் ஏந்திய தன்வந்திரி பகவான் 

உண்ணும் உணவனைத்திலும் உலகை ஆளும் 
உத்தமன் உலோக  உப்புகளாக கலந்து நிறைந்து 
நமக்கு நல்லதோர் சக்தியை அளிக்கும்போது 
கூடுதலாக உப்பை உணவில் சேர்த்தல் 
உடலுக்கு நலம் தருமோ? 

நாம் உண்ணும் உணவில் 
கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்வது
நமக்கு உடல்நலத்திற்கு உகந்தது அல்ல 

உப்பு அதிக அளவில் சேர்ந்தால் 
அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதால் 
உடல் எடை கூடுவதுடன் எண்ணற்ற பிணிகள் 
நம்மை வாட்டுகின்றன என்பதை அன்றே 
உணர்த்தவே பரந்தாமன் உப்பில்லாமல்
உணவு உண்ண  வேண்டும் என்று 
உப்பிலியாப்பனாக அவதாரம் 
செய்தானோ என்னவோ!

பிணிகள் வருமுன் காத்துக்கொள்வதே 
அறிவுடையோர் செயல் 
வந்தபின் வாழ்நாள் முழுவதும் 
துன்பப்படுவதும் வருத்தப்படுவதும் 
பிதற்றி திரிவதும் 
மூடர்களின் வாடிக்கையன்றோ! 


உப்பிலாது உணவு உண்டு உயர்ந்த 
சிந்தனைகளை உள்ளத்தில் தாங்கி 
உலகைக் காக்கும் உத்தமனை 
சிந்தித்து  வாழ்வதே சீரியதோர் 
வாழ்க்கை என்று உணர்ந்தவர்கள் 
இன்பமாக வாழ்வார் என்பது சத்தியம்  

2 கருத்துகள்:

  1. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவன் எழுத்துக்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தரும் உங்களுக்கு நன்றி

      நீக்கு