காக்கும் கணபதி
காக்கும் கணபதி
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
அம்பிகையின் சேயே
அரனின் புத்திரனே
அரங்கனின்
உளம் கவர்ந்தோனே
அகிலத்தை காப்பவனே
அறிவின் சுடரே
அன்பின் வடிவமே
ஆனந்தம் தருபவனே
ஆற்றல் மிக்கோனே
இன்னல் களைவோனே
இன்பம் தருபவனே
ஈன்ற பெற்றோரின் பெருமையை
உலகிற்கு உணர்த்தியவனே
ஈடு இணையில்லா புகழ்
கொண்டவனே
உலகத்தை
தாங்குவோனே
ஊழி முதல்வனே
ஊக்கம் தருபவனே
எருக்கம் பூ மாலை அணிந்தோனே
எளியோரையும் காப்பவனே
ஏக தந்தனே
ஏறு மயில்
வாகனனின் சோதரனே
ஏற்றம் தருவோனே
ஏக்கம் தீர்ப்போனே
ஐயம் அகற்றுபவனே
ஒன்றேயான
பரம்பொருளே
ஓம்கார பொருளோனே
ஒளடதமாய் விளங்கி
பிறவிப் பிணியை
தீர்ப்பவனே
Metal engraving- T.R.Pattabiraman
துன்பம் துடைத்து
வாழ்வில் இன்பம் அளிக்கும்
கணபதியை துதித்து மகிழ்வோம்
இந்நாளில் வாரீர். வாரீர்.
என்னுடைய பாடல் காணொளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக