திங்கள், 14 செப்டம்பர், 2015

ஒளி வீசும் குமரா

ஒளி வீசும் குமரா


ஒளி  வீசும் குமராDrawing by -T.RPattabiraman 


குன்றின் மேலிட்ட தீபம் போல்
ஒளி  வீசும் குமரா

என் உள்ளத்தில் குவிந்துள்ள
அறியாமை என்னும் இருளை
அகற்றிட வாராய்  முருகா   (குன்றின்)


தூய்மையாம்  வெண்ணிற பனி மலையாய்
நின்றருளும் சிவனின்
அருள் வடிவமாய் அவனியில்
தோன்றிய ஒளி  பிழம்பே முருகா

அமரர்களின் கோரிக்கையை
ஏற்ற  திருமுருகா
அல்லல் தரும் அசுரர்கள்
கூட்டத்தை மாய்த்திட்ட  முருகா


என்றும் உன்னை மறவாது
வணங்கும் அடியவர்களை காக்கும்
தெய்வமே முருகா (குன்றின்)


அருணகிரியை தடுத்தாட்கொண்டு
அருள் செய்த முருகா

அறம்  வளர்த்த தமிழாய்
விளங்கிடும் முருகா

கண்களுக்கு கவின் வடிவாய்
காட்சி தரும் முருகா

அன்போடு துதிப்பவரின் வாழ்வில்
துன்பங்களை காணாது செய்யும் முருகா

என்றென்றும்  அழியாத பேரின்பம்
அளித்திடும் அருளாளனே முருகா  (குன்றின்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக