வியாழன், 3 செப்டம்பர், 2015

மனம் என்னும் மாய சக்தி மகேஸ்வரியின் அற்புத சக்தி

மனம் என்னும் மாய சக்தி
மகேஸ்வரியின் அற்புத சக்தி
அடைய முடியாதது 
என்று ஏதேனும் உண்டோ ?

கணினி ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

தன்  பக்தனின் அன்பால் கட்டுண்டு
பிடி அவலை உண்ட கண்ணனையும்
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி
வாங்கிய  முக்கண்ணனையும்
முக்காலமும் நினைப்பவர்தம்

வாழ்வில் இல்லாமையும்
இயலாமையும் வந்திடுமோ?


அருணனை   நெஞ்சிலே  வைத்தான்
திருச்சுழி  வெங்கடராமன் -
அவன் தலை சுழி மாறி பிஞ்சிலேயே
பழுத்து முருகனின் ஞானப்  பழமானான்.ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


அரம்பையர் மோகத்தில் சிக்கிய
அருணகிரியோ அகிலமே  போற்றும்
அருணனின் மைந்தன் குமரனை துதித்து
பாடி அழியாப் புகழடைந்தான்


மனம் என்னும் மாய சக்தி
மகேஸ்வரியின் அற்புத சக்தி
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

முடியும்  என்பாரின் பிடியில் சிக்கும் சக்தி
முயற்சிகளை திருவினையாக்கும் சக்தி
முக்தியை தரும் சக்தி

முகுந்தனோடு இணைக்கும் சக்தி
தாளினை சிந்திப்போம் .


மனமிருந்தால் மகிழ்ச்சியாக வாழ
மார்கமுண்டு இவ்வுலக வாழ்வில்

மனமிறந்தாலோ மகேசனைக் கண்டு
மாறா இன்பம் பெற்றிட வழியுண்டு

இந்த உண்மைதனை உணர்ந்திடுவோம்
சீலமுடன் சிறப்புற   வாழ்வோம்
இவ்வுலகில் வாழும் காலம் வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக