செவ்வாய், 15 செப்டம்பர், 2015

எல்லாம் முருகனே

எல்லாம் முருகனே


எல்லாம் முருகனே


எல்லாம் முருகனே
எனக்கு எல்லாம் முருகனே (எல்லாம் )

தொல்லை மிகு இவ்வுலகில்
எல்லையில்லா இன்பம்
தருவது அவன் திரு நாமமே  (எல்லாம் )

அரோகரா என்றாலும்
ஆறுமுகா என்றாலும்
அன்போடு அழைக்கும் பக்தருக்கு
அழியா பதம் அருள்பவன்

கந்தா என்றாலும்
கார்த்திகேயா என்றாலும்
முத்துக்குமரா என்றாலும்
நம் மன அகந்தையை நீக்கி
அவன் அடியவனாக்கி
ஆனந்த வாழ்வை அருள்பவன் (எல்லாம் )

குன்றின் மீது நின்றருளும்
தெய்வம் அவன்

நம் உள்ளத்தில் குடி கொண்டு நம்மை
துன்புறுத்தும் மன மாசுகளை போக்குபவன்

அன்போடு வணங்கும் அடியவர்களுக்கு
என்றென்றும்  துணையாய் வருபவன் (எல்லாம் முருகனே)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக