செவ்வாய், 15 செப்டம்பர், 2015

என்ன கேட்பது ?

என்ன கேட்பது ?

என்ன கேட்பது ?



என்ன கேட்பது
முருகா என்ன கேட்பது

எதை கேட்பது முருகா
எதை கேட்பது

எதையும் கேளாமலே அளிக்கும்
உன்னிடம்  முருகா

என்ன கேட்பது
முருகா என்ன கேட்பது


எதை கேட்பது முருகா
எதை கேட்பது

பொன்னும் பொருளும்
வாழ்வில் அடைந்துவிட்டால் போதுமோ

நம் உள்ளத்தில் சூழ்ந்துள்ள அறியாமை
என்னும் இருள் அகல வேண்டாமோ ?


சுடரின் ஒளியாய் தோன்றும் முருகனை

சுத்தமான  மனதுடன் வணங்கி சுகம்

பெற வேண்டாமோ  (என்ன கேட்பது)


அல்லல் நிறைந்த இவ்வுலக வாழ்வில்
அமைதி என்றும் நிலவுமோ ?

அதை அடையாமல் மற்ற செல்வங்களை
அடைவதால் வாழ்வில் இன்பம் கூடுமோ?

ஆறுமுகா ஆறுமுகா
அரோகரா அரோகரா என்று அன்புடன்
அழைப்போர்க்கு  அருள் செய்யும்
முருகனின் நாமத்தை நாவினிக்க
சொல்ல வேண்டாமோ  (என்ன கேட்பது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக