தெரிந்து கொள்ளுங்கள் -கைபேசி நினைவு அட்டை.( SD card)
தெரிந்து கொள்ளுங்கள் -கைபேசி நினைவு அட்டை.( SD card)
Let's learn something - 39 How to choose right CLASS SD card and identify variants........இந்த வாரம் ஒன்றை கற்போம் - 39 எத்தனை வகை எஸ் டி கார்டுகள் உள்ளன? உங்கள் உபயோகத்துக்கு சரியான எஸ் டி கார்ட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
இன்று மொபைல் / கணனி / டேப்ளட் மற்றும் டிஜிட்டல் கேமராவே இல்லாத மக்கள் இல்லவே இல்லை என்ற ஒரு காலத்தில் நாம் வசிக்கிறோம். இதில் எக்ஸ்ட்ர்னல் மெமரி தேவை இந்த அனைத்து உபகரனங்களுக்கும் தேவையான ஒன்று. அந்த வகையில் நிறைய பேர் எஸ் டி கார்ட் வாங்கும் போது எத்தனை எம்பி அல்லது எத்தனை ஜிபி விலை சல்லீசா கிடைக்குதான்னு மட்டும் பார்த்து வாங்குவதும் அதற்க்கு அப்புறம் இந்த எஸ் டி கார்ட்ல படம் வரலை வீடியோ வேலை செய்யலைன்னு நொந்து பல பேர் இன்பாக்ஸ் கதவை தட்டிருக்காங்க..............சோ எந்த வகை எஸ் டி கார்ட் நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் அதன் மாடல்கள் என்ன என்பதை நாம் பார்ப்பொம்.
1 எம்பி ஆகட்டும் 64 ஜிபி ஆகட்டும் கார்ட் சைஸ் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் கார்ட்டின் கீழே கிளஸ் (Class) என்று போட்டிருக்கும் அது தான் முக்கியம்.
1. கிளாஸ் 2 - இந்த வகை எஸ் டி கார்ட்கள் அனேக சிறிய ரக மொபைல்களுக்கு போதுமானது. அதாவது சிறு சிறு ஜேப்பெக் புகைப்படங்கள் மற்றும் ஆடியோ எம்பி3க்கள் மற்றும் 3ஜிபி வீடியொக்களுக்கு இது போது மானது. இது தான் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடியது. ஹை ரெஸ்லுயூஷன் புகைப்படங்கள் அல்லது ரா இமேஜ் / டிஃப் / மற்றூம் 720 ஸ்டான்டர்ட் ஹெச் டி அல்லது 1080 ஹெச் டி வீடியோ வேண்டுபவர்கள் அடுத்த அடுத்த பகுதிக்கு தாவுங்க.
2. கிளாஸ் 4 - இந்த வகை எஸ்டி கார்ட்கள் தான் டிஜிட்டல் எஸ் எல் ஆர் கேமராக்களுக்கு ஆக பொருத்தமானது மட்டுமல்ல நல்ல 5 மெகாபிக்ஸல் கேமராவில் இருந்து 13 மெகாபிக்ஸல் கேமரா ஃபோன்கள் மற்றும் டிஜிட்டல் எஸ் எல் ஆரில் வீடியோ ( குறும்படம்) எடுப்பவர்களுக்கு இது சூப்பர் ஸ்பீட். ஹை குவாலிட்டி எம்பி3 பாட்டுக்கள் ஹை குவாலிட்டி கில்மா வீடியோக்களுக்கு இது பெர்ஃபெக்ட் வெர்ஷன். இது 40 எம்பி டேட்டாவை ஒரு நொடியில் எழுதும்.
3. கிளாஸ் 6 - இது ஸ்டில் கேமராவில் ஃபுல் ஹெச்டி எனப்படும் 2கே / 4 கே எடுப்பவர்களுக்கு சரியான ஒன்று. அதி வேக ஸ்டில்கள் ஆன ஹைஸ்பீட் ஷட்டர் செட்டிங் வைத்து எடுக்கும் பெரிய ரக போர்ட்ரேயிட் புகைப்பட கலைஞ்ர்களுக்கு இது தான் சரியான தேர்வு. இது 60 எம்பி டேட்டாவை ஒரு நொடிக்கு பதிவு செய்யும் திறன் படைத்தது.
4. கிளாஸ் 10 - இது ஃபுல் 4கே எனப்படும் 4:4:4 வீடியோ மற்றூம் திரைப்பட ஃபார்மெட்கள் மற்றூம் டார்கா இமேஜ்களுக்கு சரியான பார்ட்னர். 100 எம்பி வேகத்தில் ஒவ்வொரு நொடிக்கு வேலை செய்யும்.
இது போக Ultra High Speed (UHS) 1 / 3 என்னும் இரு வகை கார்ட்கள் உள்ளன இது பானாஃபிளக்ஸ் / ரெட் போன்ற கேமராவில் பெத்த ஃபார்மெட்டில் வீடியோ பதிவு செய்ய உபயோகபடும்.
கிளாஸ் 0 என்னும் எஸ்டி கார்ட்கள் இப்போது அதிகமாய் மார்க்கெட்டில் கிடைக்கிறது இது சப்பை மேட்டராக்கும். இதை வாங்குவதை விட சும்மாவே இருக்கலாம். அதனால் தான் சில டிஜிட்டல் எஸ் எல் ஆரில் சில கார்ட் வேலை செய்யாமல் இருப்பதை பார்த்து குழம்பி விடுவார்கள். இது போக SDSC / SDHC / SDXC இவ்வகை கார்ட்கள் இதே கிளாஸ் ரகம்தான் ஆயினும் இந்த ஃபார்மெட்டை சப்போர்ட் செய்யும் டிவைஸ்களில் தன் இந்த கார்ட்கள் வேலை செய்யும் ஆகா லேட்டஸ்ட்னு வாங்கினா வேலை செய்யாது ஏன் என்றால் உட்சபட்ச வேகத்தை குறிக்கும் கிளாஸ் போல மினிமம் ரைட்டிங் ஸ்பீட் 10எம்பி பெர் செகன்ட் உள்ள வேலைகள் இருந்தால் தான் இவ்வகை கார்ட்கள் வேலையே செய்யும்............கோவிந்தப்பன் நாய்க்கன் தெருவில ஃபெராரில 200 கிலோமீட்டர் போகனும்னு நினைக்கிறதும், ஆட்டோபான் ஹைவெயில் நானோவில் போகனும்னு நினைக்கிறது ஒன்று தான்.
அது போக மினி எஸ்டி கார்ட் உண்மையிலே வேற இரூக்கும் அதன் டம்மி எஸ்டி ஷெல் அல்லது எம் எம் சி ஷெல் அதிக கிளாஸ் மாதிரி காண்பிக்கும் டுபாக்கூர் கடைகளில் மினி எஸ்டியை பூத கண்ணாடி அல்லது போட்டோ எடுத்து ஜூம் செய்து உறுதி செய்த பிறகு வாங்குவது நல்லது.
Thanks - the one and only - Mr.Ravinag
விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்கு