நஞ்சை தன்னகத்தே
கொண்ட நச்சுப்பாம்பு
நஞ்சை தன்னகத்தே
கொண்ட நச்சுப்பாம்பு
கைபேசிகளும் அலைபேசிகளும்
மின் சாதன கழிவுகளும்
இந்த உலகம் அதன் தோற்றத்திலும்
கவர்ச்சியிலும் மயங்கி கிறங்கிப் போய்
அதன் காலடியில் கிடக்கிறது
அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை
அனாயாசமாக தூக்கி வீசுகிறது
பாமரன் முதல் படித்தவன் வரை ,
எல்லாவற்றையும் துறந்தவன் போல்
வேஷம் போடும் சாமியார்களும் அதற்க்கு அடிமை.
ஒருவனை அலாரம் அடித்து
எழுப்புவதும் அதுதான்
அவனை/அவளை
வாழ வைப்பதும் அதுதான்
அவர்களுக்கு சாவுமணி அடித்து
அவர்களை அழிப்பதும் அதுதான்
உறக்கத்திலும், மயக்கத்திலும் அவர்கள்
இருக்கும் நேரம் தவிர மனிதர்கள் கையில் இருந்துகொண்டு
அவர்களின் அமைதியை கெடுத்துக் கொண்டிருக்கிரது
இந்த சிறிய அளவிலான பிசாசு
பிறந்த குழந்தை முதல் பல்லிலில்லாக் கிழவன் வரை
எல்லோரும் கையில் அலைபேசியை
வைத்துக்கொண்டு அதில்தான்
பெரும்பாலான நேரத்தை வீணடிக்கிறார்கள்
சிலர் கைபேசியை
காதில் வைத்துக்கொண்டே
தங்கள் ஆயுளை அல்பாயுசில்
முடித்துக் கொள்ளுகிறார்கள்
தீவிரவாதிகள் அதை ஒரு கொலைக்கருவியாக
தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.
கைபேசி மூலம் காசை இழக்கிறார்கள்
சிலர் காசு பறிக்கிறார்கள்
பலர் காசு பார்க்கிறார்கள்
சிலர் கற்பை இழக்கிறார்கள்.
பண்பு கொலை வானொலிகளும் ஊடகங்களும்
மக்களை உசுப்பேற்றி அற்ப பரிசுகளை அறிவித்து
கைபேசி நிறுவனங்களும் கைகோர்த்துக்கொண்டு
பல கோடிகளை சுலபமாக அள்ளுகின்றன
கைபேசியில் வரும் ஒரு குறுஞ் செய்தியை நம்பி
சில மெத்த படித்த முண்டங்கள் பல லட்சங்களை
அனுதினமும் இழக்கின்றன
முகத்தை மறைத்துக்கொண்டு
பெண்களை ஏமாற்றும் காமப் பொறுக்கிகளுக்கு அலைபேசி
புகலிடமாகப் போய்விட்டது.
வெட்டியாக பேசும் வார்த்தைகளை உண்மை
என நம்பி விட்டில் பூச்சிகள் விழுந்து சாகின்றன
சாலை ஓரங்களில் குவியும்
இந்த மின் சாதனக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை சுற்றுப்புற சூழலையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்குபவை
ஏற்கெனவே பிளாஸ்டிக் குப்பைகள்,
வானொலி பெட்டிகள்,கிராமபோனே
,வி,சி டி, வி, சி, பி, தட்டச்சு இயந்திரங்கள், கணினிகள்,
சி.டி. பழுதடைந்த கைபேசிகள்
,பாதரச பல்புகள், குண்டு பல்புகள்,
அழிக்க முடியாத தண்ணீர் பாட்டில்களால்
இந்த உலகம் நிரம்பிக் கிடக்கிறது. அவைகளுடன்
இந்த கைபேசிகளும், அலைபேசிகளும்,
ஐ பாடுகளும், எல்.சி. டி. டி விகளும்
டிவி மானிடர்களும் தெருவில் வந்து விழும்.
அவைகளை எரித்தாலும்
ஆபத்து. புதைத்தாலும் ஆபத்து.
அதன் கூட அணுக் கழிவுகள்.
நம் கண்ணுக்கு தெரியாது எங்கெல்லாம்
மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது
என்று யாருக்கும் தெரியாது
வல்லரசுகள் அணுக கழிவுகளை பாலைவனத்திலும்,
ஆளில்லா தீவுகளிலும் கடலின்
ஆழத்திலும் புதைத்து வைக்கின்றன
நம் நாட்டில் மின் சாதனக் கழிவுகளை
முறையாக் அழிப்பது கிடையாது.
அந்த தொழில் நுட்பம் இங்கு கிடையாது
,
இந்த ஆபத்தான .வேலையில் சிறுவர்கள் ..எந்தவிதமான பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப் படுகின்றனர். மற்றவர்களும் அதே போல்தான் இந்த துறையில் உள்ளனர்.
மக்களிடம் எந்த விழிப்புணர்வும் கிடையாது
அவர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுயநல
அரசியல்வாதிகளுக்கு அதைப் பற்றி அக்கறையில்லை.
இவைகளையெல்லாம் எதிர்த்து போராடுபவன் தேசத்ரோகி.மக்களுக்கு எதிரானவன். என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறான்
அசிங்கப்படுத்தப்படுகிரான்.
வெளிநாட்டில் இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முறையான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி.கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
என்னெனில் கணினி உபகரணங்களில் தங்கம் அதிக அளவில் பயன்படுத்த்ப்படுகிறது. அதை பிரித்தெடுத்து நல்ல லாபம் பார்க்கிறார்கள்.
. .
குழந்தைகளே நோயில் உருவாகி அதனுடனே பிறந்து வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு இவனின் அனுதாபங்கள்.
இவனால் தற்போது இதுதான் செய்யமுடியும்.
படங்கள்-நன்றி-கூகிள்