திங்கள், 28 அக்டோபர், 2013

இதற்கா நான் பிறந்தேன்?


இதற்கா நான்  பிறந்தேன்?

இலையின் மூலம்

முற்றிய விதை முளைவிட்டு
மண் பிளந்தது-
இலையாம் துளிரின்
இனிய பிறப்பு !"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லை" என்றதோர் குரல்

துளிர் பெருகி
செடியெனப்பரிணமித்து
தென்றலில் தலையசைக்கும்-"இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லைஇல்லை...
இன்னும் இருக்கிறது .."
என்றது குரல்!

செடியும் வளர்ந்து செழிப்பாகி
தண்ணிழல் மரமாய்
தலை உயர்த்தும்.."இதற்கா நான்  பிறந்தேன்?
என்றது இலை.

"இல்லை என்றது குரல்
"இன்னும் இருக்கிறது,பொறு "

சலித்து பழுத்த இல்லை
சருகாகி உதிர்கையிலே " ச்சீ ,
"இதற்கா நான்  பிறந்தேன்?
இப்போதாவது சொல் குரலே.."
என்றது ஏக்கமாய்"ஆமாம் ,ஆமாம்
இதற்க்குதான் பிறந்தாய்
சருகாய் உதிரத்தான்
சகத்திலே நீ உதித்தாய்..

"இல்லை"என்பதன்
குருக்கந்தானே இல்லை?ஒ,இலையே! நீ இல்லை.
ஆம் நீ -இது இல்லை.."
என்று தொடர்ந்த குரல்
இப்படி முடித்தது .
"சருகாகி உதிர்வதர்க்குச் சற்றும் வருந்தாதே நீ-
இலையும் இல்லை சருகும் இல்லை
இனி  வரும் வளர்ச்சிக்கான உரம்

இந்த அருமையான கவிதைக்கு சொந்தக்காரர் 
கவிஞர் அமுத பாரதி. 1995ஆம் ஆண்டு ஓம் சக்தி இதழில் வெளிவந்தது 

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி
   கவிஞர் அமுதபாரதி அவர்களின்
   கவிதைக்கு உருவம் கொடுத்து ரசித்து பார்த்தேன்

   நீக்கு
 2. Kavingar amudhabharathiyin kavithaikku thangalin uruvamum sernthu padipptharku migavum nanraga irunthathu. nandri.

  பதிலளிநீக்கு