வியாழன், 24 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (7)

நர்மதை பெற்ற நகர் (7)

நர்மதை பெற்ற நகர் (7)

மதன்ஹால் என்று பெயர்.
வடக்கே விந்திய மலையும் தெற்கே சாத்பூரா மலையும் 
 கொண்ட நர்மதை பள்ளத்தாக்கில் தோன்றிய கோண்ட் என்ற வகுப்பினரின் 
பத்தாவது அரசன் மதன்சிங் 


மதன்சிங் கி.பி.1480 இல் உருவாக்கிய 
இந்த கோட்டை இரு பெரும் பாறைகளின்மேல்
கம்பீரமாகத் திகழ்கிறது. 
இக்கோட்டைக்கு போகும் வழியில் 
நம் கவனத்தைக் கவருவது துலாப்பாறை 


ஒரு காகம் இந்த மிகப் பெரிய பாறை மீது 
உட்கார்ந்தால் கூட அப்பாறை  தராசுபோல 
ஆட்டம் கொடுப்பதால் அப்பெயர் வந்தது 


இந்தகோண்ட் நாட்டை ஆண்ட 
துர்க்காவதி அக்பர் மன்னரை 
எதிர்த்து போரிட்ட வீரமகள் .

இவளின் பெயர்
இந்தமதன் காலோடு இணைந்துள்ளது.

இம்வம்சத்து அரசன் சங்கராம் ஷா இறந்தபின் 
தளபதிஷா பட்டமேறினான்.
மகோபாவில் சந்தேல மன்னர் 
சாலிவாகனன் மகளான 
துர்க்காவதியைத் தளபதி ஷா மணந்த 
சில ஆண்டுகளில் இறந்துவிடவே,
கோண்ட்ராஜ்ஜியத்தை 
துர்க்காவதியே ஆள நேரிட்டது.

(இக்காலத்தில் ஒன்றும் இல்லாத 
சப்பை சமாச்சாரங்களுக்கெல்லாம் 
தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் கவனிக்க)

கணவன் இறந்தபின் தைரியமாக 
ஆட்சிபொறுப்பைஏற்ற இந்த வீரப் பெண்மணியின் 
சாத்திய உறுதியை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நான் இந்த தொடரை எழுதுகிறேன். 

அரசித் திறமையாக நிர்வகித்துவந்த ராணியை 
மக்கள் மிகவும் நேசித்தனர் இந்நகருக்கு 
அழகூட்டும் வகையில் ராணிதால் ,சேரிதால் 
என்னும் இரு பெரும் குளங்களை உண்டாக்கினாள் 




கொண்ட்வனத்தின்மீது படையெடுத்து வந்த  
மாளவ நாட்டு கடைசி சுல்தான் பாஜ்பஹதூரை 
போரில் புறங்காட்டி ஓடச் செய்த 
வீராங்கனை துர்க்காவதி 

அவளது சேனையில் 20000 வீரர்களும் 
1000 யானைகளும் இருந்தன.
துப்பாக்கி சுடுவதிலும் ,அம்பு தொடுப்பதிலும் அவள் நிகரற்று விளங்கினாள் என்றும் அபுல்பாசல் கூறியுள்ளார்.

இவள் பெருமையை தொடர்ந்து அறிந்துகோள்வோம் 
(இன்னும் வரும்) 

6 கருத்துகள்:

  1. மிகப் பெரிய பாறையின் தகவல் வியப்பைத் தருகிறது...

    பெருமையைi அறிய மேலும் தொடர்கிறேன் ஐயா.... நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இதே போன்று ஒரு பாறை தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் உள்ளது .அதுவும் சரிவில் விழாமல் பல ஆயிரம் ஆண்டுகளாக நின்று நிலைத்து நிற்பது
      வியப்புக்குரிய செய்தி .அதனை வெண்ணை திரட்டிக் பாறை என்று கூறுவர் .மாமல்லபுரம் சென்றால் இன்றும் காணலாம்

      நீக்கு
  2. பள்ளிக்கூட படத்தில் சேர்க்கவேண்டிய விஷயங்கள் இது. அப்போதுதான் இளம் உள்ளங்களில் நாட்டுப்பற்று வளரும்..நாம் முன்னோர்கள் யாரும் பெண்களை அடிமை படுத்தி வைக்கவில்லை...வரலாறுகள் மறைக்கப்படுகின்றன.சினிமா நடிகர்கள்,தற்கால அரசியல் தலைவர்கள்,கிரிக்கெட் விளையாடுபவர்கள்,பிறந்தநாள்,சாதனைகள்(???)இதெல்லாம் வரலாறு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்தமைக்கும் நன்றி

      நீக்கு