வியாழன், 17 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (5)

நர்மதை பெற்ற நகர் (5)

நர்மதை பெற்ற நகர் (5)

பரவசமானான் பாலகன்!

"மகரிஷே! நான் உய்ந்தேன்

தந்தை பெயரோ அல்லது குலமோ
அறியாத என்னை ஓர் அந்தணனாக ஏற்றுக்கொண்ட
தங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் " என்று கூறி
உடனே தன் தாயிடம் சென்று நடந்தவற்றைக் கூறி
பெருமிதம் அடைந்தான்

சத்தியத்தைத் சிறிதும் தயக்கமின்றிக் கூறிய
அச்சிறுவன் தன்  தாயின் பெயராகிய ஜாபாலியொடு
 இணைத்து  தன் பெயரை சத்தியகாம ஜாபாலி
என்று பெயர் பெற்றான் .

பிற்காலத்தில் ஜாபாலி மகரிஷியாகத்
தசரத சக்ரவர்த்தியின் ப்ரோகிதராகத் திகழ்ந்தவர்
இந்த சிறுவனே.

எல்லோரும் உண்மையை பேசப் பயப்படுகின்றனர்
,உண்மையை வெளியிட்டால் என்ன நடக்குமோ,
தன்னுடைய கௌரவம் போய்விடுமோ
அல்லது இருக்கும் செல்வாக்கை இழந்துவிடுமோ
என்றோ பயந்து பயந்து போலியான பயத்தை
ஏற்படுத்திக்கொண்டு வாழ்நாள் முழுவதும்
மன நோயாளிகளாக வாழ்கின்றனர்.

ஆனால் இதே இவர்கள் பொய்களை
அள்ளிவிடுவதர்க்கு  சிறிதளவும் அஞ்சுவதில்லை.
ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்கள்
சொல்ல வேண்டி வருகிறது.
அதனால் பிற்காலத்தில் விளையப்போகும்
தீமைகளைப் பற்றி அவர்கள் சிறிதும்
சிந்தித்துப் பார்ப்பதில்லை.

உண்மையை வெளியிட்டால்
அது அந்த நேரத்தில் ஏற்ப்படும்
சலனத்தோடு ஓய்ந்துவிடும்.
மனதில் நிம்மதிபிறக்கும்.

ஆனால் பொய்கள் புற்றுநோய்
செல்கல்போல் பெருகிக்கொண்டே போய்
ஒருநாள் கொடிய நோயாகி சிறிது சிறிதாக
நம்மை அழித்துவிடும்.

எனவே உண்மையையே பேசுவோம்.
நிம்மதியாகவே வாழ்வோம்.
மற்றவர்களின் விமரிசனங்களுக்கு
கவலைப்படவேண்டாம்.

pic.courtesy-google imags

2 கருத்துகள்:

  1. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு கேட்க முனைந்தாலே உண்மை மறைவதற்கு ஆரம்பம் என்பதை அருமையாக சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துரைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

    பதிலளிநீக்கு