புதன், 23 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (6)

நர்மதை பெற்ற நகர் (6)

நர்மதை பெற்ற நகர் (6)

கல்வி கற்று பெரும் அறிஞராக ஆனபின் அயோத்தியில் தசரதசக்ரவர்த்தியின்
 ப்ரோஹிதராக விளங்கி, 
அவர் மறைவிற்குப் பின் அங்கிருந்து 
நர்மதை நதி தீரத்தின் 
இனிமையான சூழலைக் கண்டு 
அங்கேயே தவமியற்றினார் 
என்பது வரலாறு. 

அவர் பெயரினால்தான் 
அந்த இடம் ஜாபாலி பட்டினம் என்று 
அழைக்கப்பட்டு பின்னாளில் ஜபல்பூர் 
என்று மருவியதாக ஒரு கதை உண்டு.

மேலும். அரபு மொழியில் 'ஜபல்' என்றால்  
கற்பாறை என்று பொருள்.
பெருங் கற்பாறைகள் கொண்ட குன்றுகள் 
இந்நகரைச் சூழ்ந்திருப்பதால் 
இந்நகர் ஜபல்பூர் என்று பெயர் 
பெற்றதாக கூறுவாரும் உளர். 



கல்விக்கும் கலைகளுக்கும் 
பெயர் பெற்ற முக்கிய நகரமாகவும் 
மதிய பிரதேசத்தின் முக்கிய ஓர் அங்கமாகவும் விளங்கும் பிராந்தியத்தை புத்தேல்கண்ட்  என்று அழைப்பார்கள். 

இப்பிராந்தியத்தின் முற்பெயர்
மகாகோசலம். 
ஜபல்பூரும் அதைச் சார்ந்த கிராமங்களும் 
வீரபூமியாக விளங்கி வந்ததற்கு பல சரித்திர 
சான்றுகள் சாட்சி கூறுகின்றன

கங்கைக் கரையியின் கலைப்பீடம் 
பிரயாகை என்னும் அலஹாபாத் .
அதுபோல் நர்மதை நதிக்கரையின் 
கலைப்பீடம் ஜபல்பூர்
என்றால் மிகையாகாது

125 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட 
இம்மாநகரின் மக்கள்தொகை 
சுமார் ஒரு கோடிக்குமேல் 

ராணுவ பயிற்சித்தளம் மற்றும்
பல தொழிற்சாலைகள்,
உள்ள பெருநகரமாக விளங்குகிறது. ஜபல்பூர்.



கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்திலிருக்கும் ஜபல்பூரின் மேற்கே காணப்படும் 
பெருங்குன்றின் மீது ஒரு சிறு கோட்டை 



.இதற்க்கு மதன்ஹால் என்று பெயர்.வடக்கே விந்திய மலையும் தெற்கே சாத்பூரா மலையும்  கொண்ட நர்மதை பள்ளத்தாக்கில் தோன்றிய கோண்ட் என்ற 
வகுப்பினரின் பத்தாவது அரசன் மதன்சிங் 

அவன் வீர பரம்பரையைப் பற்றிய
வரலாறைத்தான் இனி காணப்போகிறோம்.
(இன்னும் வரும்)

pic.courtesy-google images.

2 கருத்துகள்: